மோடியின் மெளனத்திற்கு கிடைத்த பரிசு...

டெல்லி தேர்தல் இந்தியாவில் மட்டுமல்ல உலகமுழுவதும் மிகப்பெரிய அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த கட்சிக்கும் கிடைக்காத தோல்வி... தோல்வி என்பதை விட மரணஅடி என்று சொல்லலாம்
மோடியை பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லாமே பொய் என்பதை பாஜகவின் இந்த 6 மாத ஆட்சி சொல்லிவிட்டது. ஓபாமா வந்த போது மோடியின் உடை அலங்காரத்தை பார்த்து நாடே  அதிர்ந்தது. மோடியால் இந்தியா வல்லரசாகும் என்றார்கள். இலங்கையில் ஆட்சி மாற்றமே மோடியால்தான் என்றார்கள்.... இப்படி இன்னும் பல பில்டப்புகள் கொடுத்தார்கள் .

       இவற்றையெல்லாம் விட மோடியின் அமைச்சர்களும் ,பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகளும் செய்யும் அலப்பறைகள் அதிகம்.

 1.தேவாலயங்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், கடந்த மார்ச் மாதம் அயோத்தியாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளால் அரங்கேற்றப்பட்ட 'கர் வாப்ஸி', அதாவது மறு மதமாற்ற நிகழ்ச்சி

2. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கட்டாயப்படுத்தப்பட்டோ, பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டோ கொத்து கொத்தாக மறு மதமாற்றம் செய்யப்பபடுகின்றனர்.

3.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்ரா நகரில் 200 முஸ்லிம்கள், இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். ஜனவரி மாதம், மேற்குவங்கத்தில் 100 கிறிஸ்தவர்கள், இந்து மதத்துக்கு மாற்றப்பட்டனர். இந்து மதத்தின் அடிப்படைவாத அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) ராஷ்டிரிய சுவயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஆகிய அமைப்புகள் மறு மதமாற்ற நிகழ்வுகளுக்கு பகிரங்கமாகவே ஆதரவு  தெரிவிக்கின்றன.

4.வி.ஹெச்.பி தலைவர் பிரவீண் தொகாடியா கூறுகையில், "இந்தியாவில் 80% மக்கள் இந்துக்கள். எங்கள் அமைப்பின் தற்போதைய இலக்கு, இந்த தேசத்தை 100% இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்பதே. இதை அடைய ஒரே வழி, சிறுபான்மையினருக்கு அவர்களுடைய மத நம்பிக்கை உரிமையை வழங்காமல் இருப்பதே ஆகும்" என கூறியுள்ளார்.
4.இத்தகையச் சூழலில், இம்மாதம் அயோத்தியாவில் 3000 முஸ்லிம்களை, இந்து மதத்துக்கு மாற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இப்படி நாடு முழுவதும் மதத்தை முன்வைத்து பாஜக,மற்றும் ஆர்.எஸ்.எஸ் ,வி,எச்.பி. , போன்ற மதவெறியர்கள் ஆட்டுழியம் செய்து வரும்போது மோடிமெளனமாக இருந்து வருகிறார்.  இதற்கு இரண்டு காரணங்களை அரசியில் விமர்சகர்கள் சொல்கிறார்கள்....
ஒன்று, மோடியால் இந்துத்துவா அமைப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்க வேண்டும்; இல்லையேல் அவ்வாறு கட்டுப்படுத்த மோடி விரும்பாமல் இருக்க வேண்டும்" .
என்னை பெருத்தவரை இரண்டாவது காரணமே உண்மையாக இருக்கவேண்டும்.

இவை போக ரேசன் பொருட்கள் ரத்து, நிலம் கையகப்படுத்தும் திடீர் சட்டம், கார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான போக்கு,....
மோடி அவர்களே உங்கள் மெளனத்திற்கு டெல்லி மக்கள் கொடுத்த பரிசுதான் மரண தோல்வி. இனியும் மெளனமாக இருந்தால் இந்தியா மக்கள் ஓட்டுமொத்தமாக  தோல்வியை பரிசாக கொடுப்பார்கள்

செல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments