கூகுள் மின்ன்ஞ்சலில் புதிய மாற்றம்


தேடல் தளமாகத் தொடங்கப்பட்ட கூகுள் மின்னஞ்சல் சேவை, ஆண்ட்ராய்ட் இயங்குதளம், யு டியூப், கூகுள்டாக்ஸ், கூகுள் மேப், கூகுள் காலண்டர், கூகுள் டிரைவ், டியோ உள்ளிட்ட 60க்கும்மேற்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது.கூகுளின் மின்னஞ்சல் சேவை கடந்த 2011ஆம் ஆண்டு சோதனை பதிப்பிலிருந்துமுழுமையடைந்த பதிப்பாக மாற்றப்பட்டது. அதன்பிறகு பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. கூகுள் டிரைவ், g+ சேட்டிங் போன்றசிறுசிறு வசதிகள் மட்டுமே சேர்க்கப்பட்டன.புதிய மாற்றங்கள் அனைத்தும் வேகமாகவளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial Intelligence) அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்படவுள்ளன. இது பயனருக்கு கூடுதலான வசதிகள் பலவற்றைத் தரவுள்ளது.

புதிய வசதிகள்

தற்போது ஜிமெயில் இணையதள வடிவமைப்பு கண்களைக் கவரும் வகையில் வடிவமைப்பு மாற்றப்படவுள்ளது. புதிய வடிவமைப்பிற்கு உடனடியாக நீங்கள் மாற விரும்பினால் மின்னஞ்சல் விண்டோவில் வலதுபுறமாக உள்ள செட்டிங்ஸ் ஐகானைக் (பற்சக்கரம்) கிளிக் செய்தால் முதலாவதாக உள்ள Try the new Gmail என்பதைத் தேர்வு செய்யவும். மின்னஞ்சல் சேவை மறுதொடக்கம் செய்யப்பட்டு னுநகயரடவ, உடிஅகயசவயடெந, ஊடிஅயீயஉவ என மூன்று விருப்பத் தேர்வுகள் காட்டப்படும். முதலாவதில் மின்னஞ்சல்கள் பெரிய அளவிலான இடத்தில் உள்ளடக்க விபரங்களுடன் காட்டப்படும். அடுத்தது கம்ஃபர்டபிள். இது வழக்கமான மின்னஞ்சல் காட்டும் வடிவமைப்பிற்கு இணையாக உள்ளது. கடைசியாக உள்ள காம்பேக்ட் அதிகமான மின்னஞ்சல்களை பளிச்சென காட்டுகிறது. ஒன்றைத் தேர்வு செய்து உள்நுழைந்த பிறகு மற்றொரு வடிவமைப்பை மாற்றிக் கொள்ள வசதியும் தரப்பட்டுள்ளது. இதனை செயற்படுத்த மீண்டும் வலதுபுறம் உள்ள அதே செட்டிங்ஸ் ஐகானைக் கிளிக் செய்து அதில், Display Density என்பதைக் கிளிக் செய்யவும்.அடுத்ததாக, இந்த வடிவமைப்பில் நமக்குத் தேவையான கூகுள் பயன்பாடுகளை இணைத்துக் கொள்ளும் வசதி வலதுபுறப் பட்டையில் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி கூகுளின் நம்விருப்பமான பயன்பாடுகளை இன்பாக்ஸிலேயே பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது.அத்துடன் இணைய தள முகவரி இணைப்புகளுடன் வரும் மின்னஞ்சல்களின் இணைப்புகளை கிளிக் செய்தால் புதிய பக்கம் திறக்கும் பழைய முறையிலிருந்து அதே பக்கத்திலேயே இணையதளத்தைப் பார்க்கும் வசதியும் சேர்க்கப்படுகிறது.நமக்கு வந்த மின்னஞ்சல்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நினைவூட்ட Snooze என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மௌஸ் கர்சரை மின்னஞ்சலின் வலது புறமாக கொண்டு சென்றால் காட்டப்படும் ஐகான்களில் 4வது ஐகானாக Snooze ஐகான் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வடிவமைப்பில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் ரகசியத் தகவல் பாதுகாப்பு வசதி. ‘Thank You’, ‘See u later’ என்ற வசதியை செயல்படுத்த புதிய மின்னஞ்சலை கம்போஸ் செய்யும்போது அதனை பெறுபவர் படிப்பதற்கான கால அவகாசத்தை நாம் முடிவு செய்யலாம். இதற்கென ஒரு ஐகான் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கிளிக் செய்தால் காலாவதியாவதற்கான காலம் அனுப்பிய நேரத்திலிருந்து 1 நாள்,1 வாரம், 1 மாதம், 3 மாதம், 5 வருடம் என 5 வகையான கால வசதிகள் காட்டப்படுகின்றன. மேலும் இரகசியம் காக்கப்பட கூடுதலாக கடவுச்சொல்லை குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பும் வசதியும் உள்ளது.இந்தக் குறுஞ்செய்தியில் உள்ள கடவுச்சொல்லை மின்னஞ்சல் பெறுபவர் உள்ளிட்டால் மட்டுமே திறந்து படிக்கமுடியும்.ஆஃப்லைனில் மின்னஞ்சல் தகவல்களைப் பார்க்கும் வசதியும் விரைவில் வழங்கப்படவுள்ளது. கூகுளின் இன்பாக்ஸில் வழக்கமான ரிப்ளைகளை டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. ‘கூhயமே லுடிர’, ‘ளுநந ர டயவநச’ போன்ற மாதிரியான ரிப்ளைகளை எளிதில் பயன்படுத்தும் வகையில் பார்வையில் படும்படி காட்டப்படும். இது போன்ற வசதி கூகுள் அல்லோவில் உள்ளது. இந்தவசதி கூகுள் மின்னஞ்சலிலும் சேர்க்கப்படுகிறது. அத்துடன் ஸ்மார்ட் கம்போஸ் என்றவசதியும் வருகிறது. இந்த வசதியில் மின்னஞ்சல் ஒன்றைத் தட்டச்சு செய்யும்போது, வார்த்தைகளை உள்ளிடத் தொடங்கியவுடன் அதற்கேற்ற தொடர்ச்சியான வார்த்தைகளைத் திரையில் காட்டும். பொருத்தமானதென்றால் அதனைத் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.ஜிமெயிலில் பணம் பரிமாற்றம்செய்வதற்கான வசதி சேர்க்கப்படவிருக்கிறது. இந்த வசதியானது, கூகுள் பேசேவையின் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆப்பிளின் iOS போன்களில் மட்டுமே உள்ள இச்சேவையானது விரைவில்ஆன்ட்ராய்டு போன்களுக்கும் விரிவு செய்யப்படவிருக்கிறது. இதன் மூலம் கூகுள் பே ஐகானைக் கிளிக் செய்து தொகையை குறிப்பிட்டு, அனுப்பவேண்டியவரின் மின்னஞ்சலுக்கு Send செய்தால் போதும்.கூகுள் மின்னஞ்சல் பயன்பாட்டில் அறிவிப்புகளை காட்டும் வசதியை குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைத்துசெயல்படுத்தும் பயன்பாடு சேர்க்கப்படவுள்ளது.

தனியுரிமைக் கொள்கையில் மாற்றம்

ஐரோப்பிய யூனியனின் தனிநபர் தகவல் உரிமை விதிகள் மே 25இல் அமல்படுத்தப்படவுள்ளதால் அதற்கேற்ப கூகுளின் தனியுரிமைக் கொள்கைகளிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை அனைத்து பயனருக்கும் கூகுள் அனுப்பி வருகிறது. ஃபேஸ்புக் - கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தகவல் திருட்டு விவகாரத்தைத் தொடர்ந்து பயனரின் தகவல்கள் குறித்த விழிப்புணர்வு உலகளவில் விவாதப் பொருளாக மாறியுள்ள சூழலில் இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. ஐரோப்பிய யூனியனின் தகவல் உரிமை விதிகளின்படி பயனரின்தகவல்களை தவறாகவோ, அனுமதியின்றியோ பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருமானத்தில் 4ரூ வரையிலான தொகையை அபராதமாகக் கட்டவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தீக்கதீர் நாளிதழ்

மதுரையில் என்ன இருக்கு...?

மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க என்று கேள்வியோடு வெளியூர் சுற்றுலா செல்லும் மதுரை வாசிகளே! என்ன இல்லை மதுரையில்.

நீங்கள் ஆன்மீகவாதியா? தொல்லியல் மற்றும் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவரா? மானுடவியல் மீது ஆர்வம் கொண்டவரா? பசுமை மற்றும் பல்லுயிர்கள் மீது ஆர்வம் கொண்டவரா? அட எதுவும் இல்லைங்க, அப்படியே வண்டியெடுத்துட்டு போயி எங்கையாவது ஒரு நகர வாசமற்ற கிராமத்துல தங்கி குளிச்சு கும்மாளம் போடா மதுரையில் இடமிருக்கா என கேட்பவரா? உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதுரை பல்வேறு முகங்களை கொண்டு இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் நீங்கள் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம். 

வரலாற்று மற்றும் தொல்லியல் சிறப்பிடங்கள்: 
1. கீழடி 
2. அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியம்
3. நரசிங்கப்படி ஈமக்காடு
4. பெருங்காமநல்லூர் நினைவுத்தூண் 
5. யானை மலை சமண படுகை
6. கீழக்குயில்குடி மலை அய்யனார் மற்றும் சமண படுகை
7. முத்தப்பட்டி மலை சமணப்படுகை
8. மாங்குளம் - மீனாட்சிபுரம் சமணப்படுகை
9. அரிட்டாபட்டி மலை சமணப்படுகை
10. திருப்பரங்குன்றம் சமணப்படுகை
11. மேட்டுப்படி சித்தர்மலை சமணப்படுகை
12. மாடக்குளம் கண்மாய் கல்தூண் 
13. வரிச்சூர் குன்னத்தூர் மலை படுகை
14. விக்கிரமங்கலம் நடுமுதலைக்குளம் மலை சமணப்படுகை
15. அழகர்மலை - கிடாரிபட்டி சமணப்படுகை
16. குப்பல்நத்தம் மலை சமணப்படுகை
17. கருங்காலக்குடி சமணப்படுகை 
18. கீழவளவு மலை சமணப்படுகை 
19. காரைக்கேணி சமணர் படுகை
20. மலைப்பட்டி புத்தூர்மலை சமணர்படுகை
21. கோவலன் பொட்டல் 
22. மருதநாயகம் (கான்சா சாகிப்) கல்லறை, சம்மட்டிபுரம் 
23. உச்ச பறம்பு மலை வைரவர் கோவில் 
24. ஈசன் கோவில், கருங்காலக்குடி 
25. அக்னீஸ்வரன் கோவில், தேவன்குறிச்சி மலை
26.சாப்டூர் அரண்மனை
27.கபாலி மலை கோவில் 


கோவில்களும் பழமையான கட்டிடங்களும்:
1. மீனாட்சி அம்மன் கோவில் 
2. அழகர் கோவில் 
3. திருப்பரங்குன்றம் 
4. திருவாதவூர் கோவில் 
5. நரசிங்க பெருமாள் கோவில்
6. திருமோகூர் கோவில் 
7. கொடிக்குளம் பெருமாள் கோவில் 
8. திருவேடகம் கோவில்
9. நாயக்கர் மகால் 
10. புதுமண்டபம் 
11. ராணி மங்கம்மாள் சத்திரம் (காந்தி அருங்காட்சியகம்)
12. வைகை ஆற்று மைய மண்டபம் 
13. நரசிங்கப்பட்டி ராமயண ஓவிய சாவடி 
14. விளக்குத்தூன் 
15 மதுரை வாயில் கோட்டை
16. காந்தி நிகேதன் ஆசிரமம், கல்லுப்பட்டி

கோவில்காடுகள்: 
1. இடையபட்டி கோவில்காடுகள் 
2. அ.வளையபட்டி நொண்டி சாமி கோவில்காடு 
3. கொடிமங்கலம் முனியாண்டி கோவில்காடு 
4.மஞ்சமலை ஆண்டி கோவில்காடு

பெருவிழாக்கள்:
1. சித்திரை திருவிழா 
2. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 
3. தெப்ப திருவிழா 
4. சந்தனகூடு திருவிழா 
5. திருப்பரங்குன்றம் கிரிவலம் 
6.புட்டுத் திருவிழா 


நீராதார தளங்கள் 
1. குட்லாடம்பட்டி அருவி 
3.கேணி அருவி, சாப்டூர் 
4. பரமசிவன் பாறை ஊத்து, சாப்டூர் 
5. அழகர்மலை சித்தருவி
6. ராக்காயி தீர்த்தம் (சிலம்பாறு) அழகர்மலை
7. நாகதீர்த்தம், காக்கவூத்து, நாகமலை
8. வண்டியூர் தெப்பக்குளம் 
9.  குளிராட்டி அருவி, தே.கிருஷ்ணபுரம் . 
10. மொட்டூத்து, தாழையூத்து, வாசிமலை 
11. அசுவமா நதி (குதிரை ஆறு) அணை 
12. விரகணூர் வைகை அணை 
13. நீச்சல்குளம், தல்லாக்குளம் 
14. வைகை பெரியார் கால்வாய் (குளிக்க)
15. காளிகாப்பன் கிணறு 
16. சாத்தையாறு அணை 
17. வையை ஆறு  
18. குண்டாறு 
19. கமண்டலாறு - வறட்டாறு
20. கிருதுமால் ஆறு 
21. உப்பாறு 
22. பாலாறு 
23. திருமணிமுத்தாறு 
24. மஞ்சமலையாறு

மலையேற்றம் செல்ல தோதான மலைகள்:  
அழகர்மலை, சிறுமலை, நாகமலை, வகுத்தமலை, மஞ்சமலை, பெருமாள் மலை,  கிளுவமலை, புத்தூர்மலை, வெள்ளிமலை, வெள்ளமலை, கருமலை, மாமலை, குதிரைமலை, தெற்குமலை, வாசிமலை, எழுமலை, பசுமலை, உச்ச பறம்பு மலை, பெருமலை, சிரங்கி மலை, எரிச்சிமலை, கபாலி மலை உள்ளிட்ட மரங்கள் அடர்ந்த மலைகளும், யானைமலை, ஓவாமலை, ஒத்தமலை, பரங்குன்றம், கீழக்குயில்குடி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம், தேவன்குறிச்சி, கொங்கர் புளியங்குளம், முத்துப்பட்டி, சித்தர்மலை, கருங்காலகுடி, வரிச்சூர் குன்னத்தூர், நடுமுதலைக்குளம், குப்பல்நத்தம், கீழவளவு, மேலவளவு, சக்கரைபீர் மலை, பஞ்சபாண்டவர் மலை, புலிப்பட்டி, தேவன்குறிச்சி உள்ளிட்ட குன்றுகளும், கரடுபட்டி கரடு, வடபழஞ்சி கரடு, பெருமாள்மலை கரடு உள்ளிட்ட கரடுகளும் சூழதான் இன்றைய மதுரை மாவட்டம் அமைந்துள்ளது. வனத்துறைக்கு உட்பட்ட மலையேற்றத்திற்கு அனுமதிப் பெற்றுக் கொள்ளுங்கள். 

பூங்காக்கள்: 
1. ராஜாஜி பூங்கா 
2. மதுரை சூழல் பூங்கா, கே.கே.நகர் 
3. திருப்பரங்குன்றம் பூங்கா 
4. வண்டியூர் கண்மாய் பூங்கா 

பழங்குடி மக்கள் இருப்பிடம்: 
1. பளியர் மக்கள் - தொட்டப்பநாயக்கனூர், எழுமலை 
2. மலைவேடர் - மன்னாடிமங்கலம், வாடிபட்டி 
3. காட்டநாயக்கர் - பரவை 

பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஊர்கள்: 
1. சிவர்கோட்டை - நேசநேரி
2. சாப்டூர் 
3. மாமலை 
4. இடையபட்டி 

பறவை காணுதலுக்கு உகந்த நீர்நிலைகள் :
1. சாமநத்தம்
2. கிளாக்குளம் 
3. அவனியாபுரம்
4. வடகரை, தென்கரை சோழவந்தான் 
5. மாடக்குளம் 
6. வரிச்சூர் குன்னத்தூர் 
7. மாத்தூர், அரும்பனூர், முதலியேந்தல் 
8. சிவரக்கோட்டை மலையூரணி 
9. அரிட்டாபட்டி 
10. வண்டியூர் கண்மாய்

இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி எடுத்துக்கொண்டு இந்த விடுமுறை நாட்களை குழந்தைகளோடு செலவழிக்க எளிய சுற்றுலாவுக்கு மதுரைவாசிகளே புறப்படுவோமா? போகிற வழியில் பதநீர், கூழ் குடித்து கொண்டு, கட்டிய சோத்த  அல்லது வாங்கின சோத்து பொட்டினத்த மரத்தடியில் உட்கார்ந்து ருசிப்பது என ஊர் சுற்றலை இன்னும் அழகாக்கி கொள்ளுங்கள். சொந்த ஊரை தெரிந்து வைத்திருப்பது சொர்க்கத்தின் முகவரியை கையில் வைத்திருப்பதற்கு சமம். எளிய மக்களுக்கான எளிய சுற்றுலா உள்ளூரை வட்டமடிப்பதில் இருந்து துவங்குகிறது. வாங்க போவோம்.

வாட்ஸ் அப்பில் வந்த தகவல்

கன்னிப் பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து 36 திருமண ஜோடிகள் வீரமரணம்

மதுரை மாவட்டம் திருமங்கலம்  அருகே தஞ்சமடைந்த கன்னிப் பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து 36 திருமண ஜோடிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி 72 தாத்தகாரு வீரக்கோவில்: 
200 ஆண்டுகளுக்கு முந்தைய மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு:ஆங்கிலேயர்கள் காலத்தில் ஜமீன்தாரிடமிருந்து தப்பிவந்து கிராமத்தில் தஞ்சடைந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து 36 திருமண ஜோடிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி 72 தாத்தகாரு வீரக்கோவில் குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மதுரையம்பதியின் சுற்றுப் பகுதிகளில் குறுநில மன்னர்களாக ஆட்சி புரிந்து வந்த காலத்தில் சாப்டூர் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்கள் சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளது. இருப்பினும் ஜமீன்தாரிடமிருந்து தப்பி வந்து கிராமத்தில் தஞ:சமடைந்த கன்னிப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் அவரை காட்டிக் கொடுக்க மறுத்து ஒரே சமயத்தில் 36 திருமண ஜோடிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி 72 தாத்தகாரு வீரக்கோவில் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போது சாப்டூரை தலைமையிடமாக கொண்டு ஜமீன்தார்களின் நிர்வாகம் இருந்து வந்துள்ளது.அப்போது பருவமடையும் கன்னிப்பெண்களை சேவகம் செய்வதற்காக ஜமீன்தார்களிடம் ஒப்படைப்பது வழக்கமாக இருந்து வந்தது.இந்த விஷயத்தில் யாருக்கும் விதிவிலக்கு இல்லாத நிலையில் ஏழை ஒருவரின் மகள் பருவமடைந்த தகவல் ஜமீன்தர்ருக்கு சென்றுள்ளது.இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் அரண்மனை காவலர்கள் அந்த ஏழையின் மகளை அழைத்துவரச் சென்றுள்ளனர்.அப்போது தான் சீராட்டி வளர்த்த மகளை அரமண்மனைக்கு அனுப்பிட மனமில்லாததால் அந்த ஏழை தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் ஜமீனை விட்டு வெளியேறி ஒவ்வொரு கிராமம் கிராமமாக தஞ்சம் கேட்டு கால்நடையாக சென்றுள்ளார்.
வழியில் அவர் சென்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஜமீன்தாரின் கோபத்திற்கு ஆளாகிட வேண்டாம் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்துள்ளனர்.இதனால் மனமுடைந்த அந்த ஏழை தனது மனம் போன போக்கில் நடந்து சென்று கடைசியாக திருமங்கலம் அருகேயுள்ள கட்ராம்பட்டி எனும் கிராமத்தில் தஞ்சம் கேட்டுள்ளார்.அன்றைய காலகட்டத்தில் கட்ராம்பட்டி கிராமம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 48கிராமங்களின் தாய் கிராமமாக திகழ்ந்து வந்துள்ளது.இந்த கிராமத்தில் வசித்தவர்கள் அனைவரும் வீரர்களும் புஜபல பராக்கிரமம் கொண்டவர்களுமாக இருந்துள்ளனர்.மேலும் இந்த சமுதாயத்திற்கு சொந்தமான 48 கிராமங்களைச் சேர்ந்தவர்களும் திருமணம் முடிக்க வேண்டுமென்றால் தங்களது தாய் கிராமமான கட்ராம்பட்டியில் வந்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனராம். இத்தகைய சிறப்பு மிக்க கட்ராம்பட்டி கிராமத்திற்கு வந்து சேர்ந்த அந்த ஏழை மற்றும் அவரது குடும்பத்திற்கு கிராமமக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆதரவு தெரிவித்து அடைக்கலம் கொடுத்துள்ளனர்.மேலும் தங்களது உயிரே போனாலும் பரவாயில்லை கட்ராம்பட்டியை நம்பி வந்த அந்த கன்னிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுவது என்றும் சபதம் செய்துள்ளனர்.
இதனிடையே தனது அரண்மனை சேவகத்திற்கு வராமல் தப்பியோடி தலைமறைவாகி விட்ட அந்த கன்னிப்பெண்ணை பிடித்து கொண்டு வருமாறு சாப்டூர் ஜமீனிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒவ்வொரு கிராமமாக கன்னிப்பெண்ணை தேடி வந்துள்ளனர்.கடைசியாக கட்ராம்பட்டி கிராமத்திற்கு வந்து வீரர்கள் விசாரித்தபோது யாரும் அந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்காமல் ஒற்றுமையாக இருந்துவிட்டனர்.அந்த சமயத்தில் தாய் கிராமமான கட்ராம்பட்டி கிராமத்தின் வடமேற்கு பகுதியில் மரங்கள் அடர்ந்த இடத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த 36 ஜோடிகளுக்கு திருமண வைபம் நடைபெற்றுள்ளது.இதனை பார்த்த ஜமீன்தாரின் வீரர்கள் அந்த இடத்திற்கு சென்று கன்னிப்பெண்ணை குறித்து விசாரித்துள்னர். அங்கிருந்தவர்களும் புதுமணத் தம்பதியரும் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கூறிவிட்ட நிலையில் ஜமீன்தாரின் வீரர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த சிலர் கொம்புஊதி ஜமீன்தாரின் படைகள் ஏமாந்து திரும்பிச் சென்றுவிட்டன என்று ஏளனம் செய்துள்ளனர்.இது ஜமீன் வீரர்களுக்கு தெரியவரவே அவர்கள் அனைவரும் கன்னிப்பெண்னை தேடி அலைந்து திரிந்த ஆவேசத்தில் கட்ராம்பட்டியில் அன்றையதினம் 36 ஜோடிகளுக்கு திருமணம் செய்த இடத்திற்கு வந்து மணமகன்களை நிறுத்திவைத்து தஞ்சமடைந்த கன்னிப்பெண் குறித்து கேட்டு மிரட்டியுள்ளனர்.
அப்போது புதுமாப்பிள்ளைகளாக மணக்கோலத்தில் இருந்தவர்கள் கன்னிப்பெண் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது,அப்படி ஏதேனும் தெரிந்தாலும் தாய் கிராமத்தின் நியமப்படி உயிரே போனாலும் எதுவும் கூறமாட்டோம் என்று ஆணித்தரமாக கூறியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த ஜமீன்தாரின் படைகள் அன்றையதினம் ஆட்சிசெய்துவந்து ஆங்கிலேயரின் சிறப்பு உத்தரவை பெற்று தஞ்சமென வந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்த 36 புதுமாப்பிள்ளைகளையும் வாளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர்.அப்போது மக்கள் வெள்ளமென திரண்டு வந்து ஜமீன்வீரர்களுடன் போராடியபோது அவர்கள் கட்ராம்பட்டி கிராமத்திலிருந்து பின்வாங்கிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் அன்றைய தினம் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்த நிலையில் ஜமீன்வீரர்களால் படுகொலை செய்யப்பட்டு வீரமரணமடைந்த தங்களது கணவர்களது சிதையில் எரிந்து கொண்டிருந்த தீயில் குதித்து 36 புதுமணப் பெண்களும் உடன்கட்டை ஏறி வீரச்சாவு அடைந்துள்ளனர்.இதனால் அந்த கன்னிப்பெண் ஜமீன் சேவகத்திற்கு செல்லாமல் கட்ராம்பட்டி கிராம மக்களால் குடும்பத்துடன் காப்பாற்றப்பட்டாள்.மொத்தத்தில் தாய் கிராமமான கட்ராம்பட்டி கிராமத்தில் தஞ்சமென வந்த கன்னிப்பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து ஜமீன்தாரின் படைவீரர்களின் தாக்குதலுக்கு இலக்காகி 36ஜோடிகள் வீரமணடைந்த இடம் தற்போது 72 தாத்தகாரு வீரக்கோவிலாக உள்ளது.
இன்றைக்கும் கட்ராம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் வசித்திடும் அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது வீடுகளில் நடைபெறுகின்ற சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்து காரியங்களையும் 72தாத்தகாரு வீரக்கோவிலில் வழிபாடு செய்த பின்னரே தொடங்குகின்றனர்.கடந்த காலத்தில் திறந்தவெளியாக இருந்த 72தாத்தகாரு வீரக்கோவிலில் தற்போது பீடம் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.மழை வேண்டி தாத்தகாரு கோவிலில் வழிபாடு நடத்தினாலும்,ஆடமாடுகளை விற்பதற்கும் பல்லிசகுனம் உத்தரவாக கிடைத்திடும்.மேலும் இந்த கோவிலில் செய்யப்படும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி ஜெயம் கிடைத்திடும் என்ற நம்பிக்கை மக்களிடையே இன்றும் காணப்படுகிறது.எனினும் 72தாத்தகாரு வீரக்கோவிலின் வீரவரலாறு இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெரும்பாலும் தெரியாமலே உள்ளது. 200ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் அருகே தாய்கிராமமாக திகழ்ந்த கட்ராம்பட்டியில் தஞ்மடைந்த கன்னிப் பெண்ணை காப்பாற்றுவதற்காக 36புதுமண ஜோடிகள் தங்களது உயிரை தியாகம் செய்து வீரமரணமடைந்த 72 தாத்தகாரு வீரக்கோவிலின் மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு தமிழர்களின் வீரத்தையும் விவேகத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

புகைப்படம் ,கட்டுரை ஆக்கம்
திருமங்கலம் செல்வராஜ்