நல்ல படம்.. ஆனால் ஒரு வாரம் கூட ஒடாது. தொப்புள் காட்டும் பெண்கள் இந்த படத்தில் இருக்கமாட்டார்கள்.பைட்,பாட்டு சென்டிமென்ட எதுவும் இருக்காது. உலகநாயகனோ,சூப்பர் ஸ்டாரோ,பவர் ஸ்டாரோ நடித்தபடம் அல்ல.ஆனால் தமிழர்களை தலைநிமிரச்செய்த தமிழனை பற்றி படம். உலகம் தெரிந்த பிரபலத்தை பற்றிய படம். 100 கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டிய படம்.ஆனால் நாம் ரூ.100 கொடுத்துக்கூட இந்த படத்தை பார்க்க மாட்டோம். கணித மேதை ''சீனிவாச ராமானுஜத்தின்' வாழ்க்கை படமாக வெளிவர உள்ளது. ஏற்கனவே பாரதி,பெரியார் போன்றவர்களின் வாழ்க்கை படமாக்க பட்ட போது ஏற்பட்ட நிலைமை தான் இந்த படத்திற்கும். தமிழ் சமூகத்திற்கும், இந்திய சுதந்திரத்திற்கும் பாடுபட்டவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தான். நடிகை அஞ்சலியை பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிற பதிவர்கள் இந்த படத்தை பற்றி எழுதுவார்களா?..
ஒரு தோல்வி படத்திற்கான முன்னோட்டம்...
நல்ல படம்.. ஆனால் ஒரு வாரம் கூட ஒடாது. தொப்புள் காட்டும் பெண்கள் இந்த படத்தில் இருக்கமாட்டார்கள்.பைட்,பாட்டு சென்டிமென்ட எதுவும் இருக்காது. உலகநாயகனோ,சூப்பர் ஸ்டாரோ,பவர் ஸ்டாரோ நடித்தபடம் அல்ல.ஆனால் தமிழர்களை தலைநிமிரச்செய்த தமிழனை பற்றி படம். உலகம் தெரிந்த பிரபலத்தை பற்றிய படம். 100 கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டிய படம்.ஆனால் நாம் ரூ.100 கொடுத்துக்கூட இந்த படத்தை பார்க்க மாட்டோம். கணித மேதை ''சீனிவாச ராமானுஜத்தின்' வாழ்க்கை படமாக வெளிவர உள்ளது. ஏற்கனவே பாரதி,பெரியார் போன்றவர்களின் வாழ்க்கை படமாக்க பட்ட போது ஏற்பட்ட நிலைமை தான் இந்த படத்திற்கும். தமிழ் சமூகத்திற்கும், இந்திய சுதந்திரத்திற்கும் பாடுபட்டவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தான். நடிகை அஞ்சலியை பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிற பதிவர்கள் இந்த படத்தை பற்றி எழுதுவார்களா?..
அறிவு இருக்கா ... என தீட்டுவாங்கியவரா நீங்கள்?
கொஞ்சமாவது ,அறிவிருக்கா, மூளையிருக்கா என நம்மில் அநோகம் பேர் தீட்டு வாங்கியிருப்போம். அப்படி தீட்டு வாங்கியவர்களுக்கான பதிவு.
உணவில் இருக்கும் கருவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விட்டு சாப்பிடுவதையே பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் தற்போது கருவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது ஆய்வுகள் மூலம் வெளியாகி உள்ளது. உணவில் வாசனையை கூட்டத்தான் கருவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.
உண்மையில் கருவேப்பிலையை உண்பதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முடியும் என்று பல்வறு ஆராய்ச்சிகள் மூலம் தெரியவருகிறது. கருவேப்பிலையின் தாவர பெயர் முரையா கோய்னிஜா.
காதல் சொல்ல மெனக்கெடுறது தான் தமிழ் சினிமாவின் பிரச்சனையா? இயக்குனர் மகேந்திரன்
தமிழ் சினிமாவில் படத்தின் இடைவேளை வரை காதலியை துரத்துவது தான் ஹீரோவின் வேலையே. சினிமால நல்ல,கெட்ட சினிமா இருக்கா?... ஆமா இருக்கு. காதாநாயகன் அப்பாவோடு சேர்ந்து தண்ணியடிப்பது,ரத்தம் சொட்ட... சொட்ட பைட், ஆபாச நடனங்கள், இப்படி இருந்தால் அது கெட்ட சினிமா. மக்கள் பிரச்சனைகள், யாதார்த்தமான வாழ்க்கையை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் சொல்வது நல்ல சினிமா.
இயக்கனர் மகேந்தின் தற்போதைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மனம் விட்டு சிரிக்க தெரியுமா உங்களுக்கு?....
இதுக்கெல்லாம் டிரைனிங்கா போகமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்மில் எல்லோருமே மனம் விட்டு சிரிப்பதில்லை. சிலருக்கு உதடுகள் மட்டும் லோசாக பிரியும், சிலர் கொஞ்சம் பல்லை காட்டுவார்கள். மனம் விட்டு சிரிப்பது என்பது அபூர்வமானது தான். மனம் விட்ட சிரிக்காதவர்களுக்கு மன இறுக்கம் ஏற்பட்டு மரணம் கொடுரமானதாக இருக்கும். தினசரி செய்திகளில் தற்போது அடிக்கடி நாம் படிக்கிற செய்தி வாலிபர் தற்கொலை, இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை போன்ற செய்திகள் அதிகரிக்து வருகின்றன. இதெற்கெல்லாம் காரணம் வாழ்க்கையை எதிர்கொள்ளும் பயம், அதனால் ஏற்படுகிற மன இறுக்கம் மரணத்தில் கொண்டு போய்விடுகிறது.விண்ணை முட்டும் அளவிற்கு விஞ்ஞானம் உயர்ந்து நிற்கும் இந்த காலகட்டத்தில் மன இறுக்கம் என்பது அனைத்து வயதினரிடமும் காணப்படுகிறது.
கொஞ்சம் முயற்சித்தால் மன இறுக்கத்தை எளிதாக சரி செய்யலாம். இதோ சில வழிகள்....
நடிகை அஞ்சலி விவகாரமும் பதிவர்களும்....
கடந்த வாரத்தில் ஒரு நாள் நடிகை அஞ்சலி எனது சித்தி கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், எனது சித்தியும்,இயக்குனர் களஞ்சியமும் சேர்ந்து எனது சொத்தை அபகரித்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.அடுத்த நாள் இயக்குனர் களஞ்சியம் அஞ்சலி மீது வழக்கு தொடர்ந்தார். சித்தி அஞ்சலியை காணவில்லை, கடத்தப்பட்டுள்ளார் என புகார் கொடுக்க.. ஆந்திரா, தமிழக காவல் துறை நடிகையை தேட நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை ) நான் கடத்தபடவில்லை என்து மனநிலை காரணமாக மறைவிடத்தில் இருந்தேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன். என பேட்டி கொடுக்க....இதெல்லாம் தமிழகத்தின் மாலை நேர நாளிதழில்களில் தலைப்பு செய்திகள்,சில காலை நாளிதழில் கூட முக்கியதுவம் கொடுக்கபட்டு வெளிவர துவங்கின.
சில ஆண்டுகளுக்கு முன் கடந்த ஆண்டாக கூடஇருக்கலாம் நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகளுக்குமான பிரச்சனை, முதல் கணவர், இரண்டாவது கணவர் விவகாரம், என 10 நாட்கள் தினசரிகள் எழுதி தங்களது வருமானத்தை பெருக்கி கொண்டன.
2வீலர்- 4வீலர் வைத்திருப்பவரா நீங்கள்.....
உங்களிடம் 2வீலர், 4வீலர் இல்லையா? மற்றநாடுகளில் எப்படியோ இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மரியாதை கிடைக்காது. தெருமுனை பெட்டிக்கடையில் ''கருவேப்பிலை வாங்க வேண்டுமானால்'' கூட 2வீலர் வேண்டும். வண்டியை சர்வீஸ் கொடுத்துவிட்டு நடந்து போனால் ''வண்டி என்னாச்சி'' என்ற கேள்விகளுக்கு நிறைய பேருக்கு பதில் சொல்லவேண்டிவரும். கல்யாணம், காதுகுத்துக்கு போனால் 2வீலரில் போகவேண்டும்... காரில் போனால் உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனி... நம்ம ஊர்களை பொருத்தவரை நண்பர்கள், உறவுகளுக்கு முன்னால் பகுமானம் செய்தாகவேண்டியதிருக்கிறது.
இயக்குனர் வசந்தபாலனை மாற்றிய எதிர் வீடு
4 பாட்டு, 4பைட் காதாநாயகன்,வில்லன்,கவர்ச்சி நாயகிகள், குத்துபாட்டு என்ற பாதையில் பயணித்துக்கொண்டிருந்த தமிழ்சினிமாவில் பாலுமகேந்திரா, மகேந்திரன், போன்றவர்களுக்கு பிறகு சினிமாவின் முகத்தை மாற்றுகிற பாலா, வசந்தபாலன், சிம்புத்தேவன்,பாலாஜி சக்திவேல் இவர்களில் வசந்தபாலனுக்கு என்று தனியான பாதை உண்டு. அவரின் ''அங்காடித்தெரு'' படம் வெளிவந்த பிறகு சென்னையின் மிகப்பெரும் வியாபார பகுதியான ரங்கநாதன் தெரு தொழிலாளர்களின் பிரச்சனைகள்,வேதனைகள், வெளிச்சத்திற்கு வந்தன. அங்குமட்டுமல்ல தமிழகமுழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தபட்டன.வரலாற்று படம் என்றால் ராஜாகளே கதைநாயகர்கள் என்ற நிலையை மாற்றி ஒரு அடிமை குழுவின் வாழ்க்கை முறையை ''அரவான்'' முழமாக வெளிகொண்டுவந்தவர் வசந்தபாலன். எப்படி வசந்தபாலன் படைப்புகள் மாறுபட்டு வெளிப்படுகிறது... வசந்தபாலனே சொல்கிறார் என்னை மாற்றியது எதிர் வீடு தான் என்கிறார். எதிர் வீட்டில் என்னதான் இருந்தது..
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)




