நான் வார ம் ஒரு சினிமா பார்ப்பவன் . நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல திரில்லர் படம் பார்த்த திருப்பதியான படமாக தனியொருவன் அமைந்தது. படத்தின் ஹீரோவாக ஜெயம்ரவி இருந்தாலும் உண்மையில் தனியொருவன் அரவிந்த்சாமி தான் ஹீரோ. ஸ்டைலிஷ் வில்லனாக நம் கண்முன் நிற்கிறார். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு வில்லத்தனம். கடைசிவரை அலட்டக்கொள்ளமல் அவர் செய்யும் வில்லதனம் புதுசு. இப்படி ஒரு மிக அழகான வில்லன் இந்திய சினிமாவில் இல்லை எனலாம்.
hello பூளூட்டோ....
நாம் வாழும் சூரியமண்டலத்தின் கடைசி கிரகத்திற்கு hello சொல்லிவிட்டோம். 480 கோடி கிலோமீட்டர் தூரம், 9 ஆண்டுகள் பயணம் செய்து வெற்றிகரமாக பூளூட்டோ கிரகத்தை அடைந்திருக்கிறது அமெரிக்காவின் நியூ ஹொரைசன்ஸ்' விண்கலம் .பூமியிலிருந்து பார்க்கும் போது அமெரிக்காவின் வெற்றியாக தெரியும் ஆனால் இந்த வெற்றி ஒட்டுமொத்தமாக மனிதகுலத்தின் வெற்றி.
‘நாசா’வை சேர்ந்த விஞ்ஞானி ஜான் கிரன்ஸ்பெல்டு, ‘‘புளூட்டோ கிரகத்தை நியூ ஹாரிஸன்ஸ் விண்கலம் சென்றடைந்திருப்பது மனித குல வரலாற்றில் உன்னதமான தருணம்’’ என குறிப்பிட்டார்.
11 வயது சிறுமியின் யோசனை....
சூரியமண்டலத்தில் சனி கிரகம் வரை பலநூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு நாள்காட்டியில்(காலண்டர்) பயன்படுத்திவருகிறோம்.சனிகிரகம் வரை வெறும் கண்காளால் பார்க்கலாம்.நம் முன்னோர்கள் அவற்றை தொடர்ந்து கண்காணித்து ஜோதிடம் ,பஞ்சாங்கம் வரை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

30 லட்சத்திற்குமேல் பகிரப்பட்ட கொடைக்கானல் ராப் பாடல்...
20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மூடப்பட்ட இந்துஸ்தான் லீவர் -தெர்மா மீட்டர் தயாரிக்கும் நிறுவனம் 1983 ல் கொடைகானல் மலைப்பகுதியில் துவங்கப்பட்டது. புதிதாக வேலை கிடைக்கிறதே என்ற சந்தோசத்தில் அந்த நிறுவனத்தில் பலர் வேலைக்கு போனார்கள்.தெர்மா மீட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பாதரசத்தை இந்துஸ்தான் லீவர் முறையான பாதுகாப்புடன் அதைக் கையாளவில்லை.
தமிழ் படிப்பதே பெருமை - சீனப் பெண் நிலானி
தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வ தற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க.
“நான் சீனாவில் தமிழ் மொழியில் படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் புழங்கும் பேச்சுத் தமிழ் அவ்வளவாகத் தெரியவில்லை. கொச்சைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு” என்று புன்னகைக்கிறார் நிலானி.

Subscribe to:
Posts (Atom)