வாட்ஸ்ஆப் - டெலிகிராம் எது பெஸ்ட்?
வாட்ஸ் ஆப் செயலிக்கு போ ட் டியாக வளர் ந்துவரு வது டெலிகிராம் செயலி. வாட்ஸ்ஆப் செயலி வெளியிட ப்பட்டது 2009ஆம் ஆண்டில். ஃபே ஸ் புக்கிற்கு போ ட்டியாக வளர்ந்து வந்த சூழலில் 2014ல் ஃபேஸ்புக் நிறுவனம் அந்த வாட்ஸ்ஆப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலர்களுக்கு விலைக்கு வாங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது.இந்த பரிவர்த்தனை நடந்த 2013 காலகட்டத்தில்தான் டெலிகிராம் செயலியும் வெளியானது. ஜெர்மனியைத் தாயகமாகக் கொண்டு வெளியான இச்செயலியை உருவாக்கியவர்கள் ரஷ்யாவின் நிகோலாய் மற்றும் பவல் டுரவ் சகோதரர்கள்.ஐரோப்பிய நாடுகளில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிகம் பயன்பாட்டில் இருக்கும் விகே எனும் சமூக வலைத்தளத்தை உருவாக்கி நிர்வகித்து வருவது இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் ஏன் இரவில் தூங்குகிறோம்?
நாம் ஏன் இரவில் தூங்குகிறோம்?இந்தகேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்கு முன்னால் ...
நம் எல்லோருடைய உடலுக்குள் உள்ள கடிகாரம் பற்றி பார்க்கலாம்..
டிஜிட்டல் கடிகாரம், முட்களை கொண்ட கடிகாரம், இவற்றை போல தற்போது கூகுள் கடிகாரம் வந்திருக்கிறது.இந்த கடிகாரங்கள் நம் அன்றாட வாழ்க்கையை திட்டமிட உதவுகிறது. இதே போல மனிதர்கள் உட்பட மரங்கள்,விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரனங்களுக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது.அந்த கடிகாரம் தான் நம்மை,விலங்குகளை, மரம்,செடி ,கொடிகளையும் கட்டுப்படுத்துகிறது. நம் அன்றாட செயல்பாடுகளை வழிநடத்துகிறது.
நாம் ஏன் இரவில் தூங்குகிறோம்?
இது கொஞ்சம் நகைசுவை கேள்வியாக தோன்றும்.... பகலில் வேலை செய்கிறோம், இரவில் தூங்குகிறோம்.இது என்ன கேள்வி?என கேட்க தோன்றும்... உங்களுக்கு மேலும் சில கேள்விகள்.
விடிகாலையில் ஏன் சேவல் கூவுகிறது?சிட்டுக்குருவிகள் அதிகாலையில் எழுந்து ஏன் இறைதேடப் புறப்படுகின்றன?கொசுக்கள் ஏன் இரவில் கடிக்கின்றன? பகலில் கடிப்பதில்லை.வௌவால்கள் இரவில் மட்டும் ஏன் வெளியே வருகின்றன?.
செவ்வாய் கிரகம் சென்று வந்தேன்...

நேற்று மதியம் 2.40 மணியிலிருந்து 5 மணி வரை செவ்வாய் கிரகத்தில் தான் இருந்தேன்.
த மார்ஷியன் படம் செவ்வாய் கிரத்திற்கு சென்று வந்த அனுபவத்தை கொடுத்திருக்கிறது.3டி படம் ... படம் பார்ப்பவர்களை செவ்வாய்கிரகத்திற்கே அழைச்சென்றுவிடுகிறது படக்காட்சிகள்.
எதோ ஒரு பலைவனத்தில் படம்மாக்கபட்ட த மார்ஷின் படம் பார்வையாளர்களை செவ்வாய் கிரகத்தில் கதை நடப்பதாக சரியாக நம்ப வைக்கிறது. படத்தில் செவ்வாய் கிரக காட்சிகள் அருமை படமாக்கப்பட்டுள்ளன.
நாசா வெளியிட்டுள்ள செவ்வாய் கிரத்தன் அசல் புகைப்படங்களை பார்த்திருக்கிறேன், அதை அப்படியே படத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். கதை மிகச்சிறியது தான் , கதை என்ன என்பதற்கு முன்னால் படத்தின் சில காட்சிகள் பற்றி...
Subscribe to:
Posts (Atom)


