Showing posts with label பாஜக. Show all posts
Showing posts with label பாஜக. Show all posts

நீங்கள் தேசவிரோதியா?

தமிழகத்தில் தேர்தல் வேலைகள் துவங்கி விட்டது. யார் யாரோடு கூட்டணி,எந்த கட்சி ஜெயிக்கும் என்ற கவலையில் வட இந்தியாவில் நடந்துவரும் பிரச்சனைகளை பற்றி நாம் கவலைப்படுவதில்லை...
             இந்தியாவில் புகழ் பெற்ற ஜவர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சிலரை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தூண்டுதலால் தேச தூரோகிகளாக குற்றம் சாட்டி கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.இதற்கு எதிராக போராடிய மாணவர்களை  போலிஸ் மற்றும் காவிக்கூட்டமும் கண்முடித்தனமாக தாக்கியுள்ளது. போராடும் மாணவர்களுக்கு  ஆதரவாக ராகுல்காந்தி, சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் போராட்டத்தில் கலந்து கொணாடார்கள்.

0’வை அழுத்தினால் கேஸ் மானியம் குளோஸ் - பாஜக அரசு நூதன மோசடி

செல்போன் மற்றும் தரைவழி போன்களில் இருந்து தானியங்கி முறையில் கேஸ்சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறை தற்போது அமலில் இருந்து வருகிறது.முன்பதிவு செய்வதற்கான எண்ணுக்கு பேசும்போது அதில் வரும் தகவல்களுக்கு ஏற்ப பட்டனை அழுத்தி கேஸ் சிலிண்டரை பெறுகிறோம்.வழக்கமாக புக்கிங் சேவை போன் இணைப்பு கிடைத்தவுடன் கியாஸ் முன்பதிவு செய்ய எண்.1–ஐ அழுத்தவும் என்ற தகவல் முதலில் வரும். நாம் எண்.1ஐ அழுத்தினால் கேஸ் பதிவு எண் சொல்லப்பட்டு நமது மொபைலுக்கு அந்த எண் எஸ்.எம்.எஸ். மூலம் வரும். அதன் பிறகு சில நாட்களில் நமது வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் அனுப்பப்படும். கேஸ் சிலிண்டர் சப்ளை ஆனதும் அதற்கான மானியத் தொகை நமது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

மோடியின் மெளனத்திற்கு கிடைத்த பரிசு...

டெல்லி தேர்தல் இந்தியாவில் மட்டுமல்ல உலகமுழுவதும் மிகப்பெரிய அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த கட்சிக்கும் கிடைக்காத தோல்வி... தோல்வி என்பதை விட மரணஅடி என்று சொல்லலாம்
மோடியை பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லாமே பொய் என்பதை பாஜகவின் இந்த 6 மாத ஆட்சி சொல்லிவிட்டது. ஓபாமா வந்த போது மோடியின் உடை அலங்காரத்தை பார்த்து நாடே  அதிர்ந்தது. மோடியால் இந்தியா வல்லரசாகும் என்றார்கள். இலங்கையில் ஆட்சி மாற்றமே மோடியால்தான் என்றார்கள்.... இப்படி இன்னும் பல பில்டப்புகள் கொடுத்தார்கள் .

காளைகளே இல்லாமல் போகும்’-அலங்காநல்லூரில் பெண்கள் ஒப்பாரி

ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் முடிந்து போய்விட்டது. ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் பட்டாசு இல்லாத தீபாவளி போல இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.  பாஜகவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பாஜக வினர் பிராமண பண்டிகைகளை தவிர மற்றவற்றை ஓடுக்க பார்பார்கள் என்பதே உண்மை.பிராமண பண்டிகைகளை எதாயாவது  நிறுத்து சொல்லுங்களேன் பார்க்கலாம்.

இந்து பெண்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பெற வேண்டும்

மகாத்மா காந்தியை படுகொலை செய்த கொடியவனான கோட்சேயை தேச பக்தன் என்று புகழ்ந்துரைத்த பாஜகவை சேர்ந்த எம்.பியும் சாமியாருமான சாக் ஷி மகராஜ், இந்து பெண்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் அப்போதுதான் இந்துமதத்தை பாதுகாக்க முடியும் என்று பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.உ.பி. மாநிலம் மீரட் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இந்து பெண்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தையை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும். ஒரு குழந்தையை இந்து சன்னியாசியாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். ஒரு குறிப்பிட்டமதத்தில் நான்கு மனைவிகளை மணந்து 40 குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள்.