கத்தி... இடதுசாரியின் விமர்சனம்

இன்ன கதையைச் சொல்லக்கூடாது, இந்த வசனங் களைச் சேர்க்கக்கூடாது, இவ்வகைகதாபாத்திரங் களை வைக்கக் கூடாது, இப்படியான பெயரைச் சூட்டக்கூடாது என்பதான கெடுபிடி யெல்லாம் கடந்து போக இன்னார் தயாரித்ததால் வெளியிடக்கூடாது என்ற புதுவகை எதிர்ப்பைக் கிழித்துக்கொண்டு வந்திருக்கிறது இந்தக் ‘கத்தி.’பொதுவாக வரக்கூடிய பல படங்கள் மக்களின் பிரச்சனை களைப் பேசுவதில்லை, பிரச்சனை களைப் பேசுகிற படங்களோ தேர்ந்தெடுத்த சிலர் மட்டுமே பார்க்கக் கூடியதாக, மக்களைச் சென்றடைய முடியாததாக இருக்கின்றன.

வலைப்பதிவர் திருவிழா... நிர்வாகிகளின் சிறப்பு பேட்டி..

தினகரன் நாளிதழ்
(அக்.24) மதுரையில் வ லைபதிவர் சந் திப்பு திரு விழா செய்தி வெளியி ட்டு  ள்ளது.

சந்தி ப்பு திருவிழா தொடங்கவுள்ள நிலையில் மதுரை நிகழ்ச்சி யின்  நிர்வாகி கள் சீனா அய்யா, திண்டு க்கல் தனபா லன்,
தமிழ்வாசி பிரகாஷ் மின்னஞ்சல் மூலமாக கிடைத்த நேர்காணல் .....



1.வலைபதிவு, வலைப்பதிவர் சுருக்கமான விளக்கம் தரமுடியுமா?

வலைப்பதிவு என்பது கூகிள் வழங்கும் இலவச பகுதியான  BLOGSPOT (BloggerBlogger) ) மற்றும் WORDPRESS தளங்கள் மூலம் இலவசமாக நமக்கு என ஒரு இணையதள முகவரியை ஏற்படுத்தி, அதன் மூலம் நமது கருத்துகளை இடுகையாக (பதிவு) பகிரும் தளமே வலைப்பூ அல்லது வலைப்பதிவு எனலாம். பெரும்பாலான வலைப்பதிவர்கள் Blogger தரும் சேவையையே பயன்படுத்தி வருகிறார்கள்.

ரஜினி என்னும் வியாபாரி...

கடந்த வாரத்தில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா (முன்னாள் முதல்வர்
என்று சொல் லக்கூடா தாம்)ஜாமீன் விடுதலை பரபரப்புக்கு பிறகு ரஜினி ,ஜெயலலி தாவுக்கு வாழ்த்து தெரிவித் ததும்,அவருக்கு ஜெயல லிதா நன்றி தெரிவித்ததும் அடுத்த பரபரப்பு செய்தி.
தமிழக பாஜகவுக்குள் ரஜினியால் வெட்டுக்குத்து நடந்து கொண்டிருக்கிறது. பாஜக மாநில தலைவர் தமிழிசை ரஜினி பாஜகவுக்கு வரவேண்டும் என்று அழைப்புவிடுக்க.இல.கணேசன் ரஜினி அரசியலுக்கு வரகூடாது என்கிறார்.காங்கிரஸ் தலைவர்களுக்கு பாஜகவுக்கு போய்விடுவாரோ என்ற பீதி.காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன் ரஜினி எல்லோருக்கும் பொதுவானவர் என்று சொல்லி வைத்திருக்கிறார்.

வலைப்பதிவர் சந்திப்பு ... ஆக்கபூர்வமான விழா

வருடத்தில் 280 நாட்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஆன்மீக நிகழ்வுகள் நடக்கும்.வழக்காடு மன்றங்கள், பட்டிமன்றங்கள்,இலக்கிய திருவிழா,கலைஇரவுகள், விருச்சத்திருவிழா என ஏதேனும் ஒரு திருவிழா  மதுரையில் தினசரி இருக்கும்.இந்தாண்டு கூடுதலாக வலைப்பதிவர் திருவிழா இணைந்திருக்கிறது.
மதுரை திருவிழா ஏற்பாட்டாளர்களான தமிழ்வாசி பிரகாஷ், சீனாஅய்யா, திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் திருவிழா ஏற்பாடுகளை கடந்த ஓரு மாதகாலமாக செய்து வருகிறார்கள்.தீபாவளி பண்டிகை விட வலைபதிவர் விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைகளை செய்து வருகிறார்கள்.
தமிழ்வாசி பிரகாஷ் பல முறை தொலைபேசியில் பேசிய போது வலைப்பதிவர் திருவிழாவை எப்படியெல்லாம் சிறப்பாக நடத்தலாம் என்பது குறித்து ஆர்வத்தோடு பேசுகிறார்.

தமிழ் சினிமா தவறான பாதையில் செல்கிறது.. உயர் நீதிமன்றம் எச்சரிக்கை...


தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா தயாரிக்க வேண்டும் என நீதிபதி விருப்பம் தெரிவித்தார்.

செவ்வாயை சுத்திகாட்டுறேன் வாங்க....

உண்மைதான்... ஏதோ மதுரைய சுத்திகாட்டுற மாதிரி இருக்கே... . பொய்யில்லை உண்மை.இப்போ இந்தியாவோட மங்கள்யானை சேர்த்து மொத்தம் 7 சேட்டிலைடுகள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருது.

ஊழல் செய்த நபர் முதல்வராக யார் காரணம்?

ஊழல் செய்த நபர் முதல்வராகக் கூடிய அள விற்கு வாய்ப்பு எதனால் கிடைக்கிறது என்று உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை கேள்வி எழுப்பியுள்ளார். நியாய மற்ற நபர் நமது பிரதிநிதி யாக, ஒரு முதல்வராக பதவியேற்கும் நமது தேர்தல் முறையில் பெரிய குறை பாடு உள்ளது என்பதை யும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நிரூபிக்க வேண்டியது யார்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல் லாது என்று கூறி அதிமுக வினர் வாதம் செய்து வரு கின்றனர். மக்கள் சேவை யாற்றக் கூடியவர்கள் திடீ ரென சொத்துக்குவித்தால், முறையான ஊதியத்தைக் கொண்டு சொத்துக்கள் வாங்க முடியுமா என்ற அளவுகோல்கள் உள்ளன. வங்கிக்கடன் மூலம் சொத் துக்கள் வாங்க ஆதாரங் களைக் காட்ட வேண்டும்.

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு நகல் இலவச டவுன்லோட் செய்ய...

செப்.28ல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது கர்னாடகாவில் உள்ள பார்ப்பன அக்ரஹா சிறையில் அடைக்கப்பட்டுள் ளார்.அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது கட்சிக்காரர்கள் பஸ்எரிப்பு,மறியல், பந்த், உண்ணாவிரதம், மொட்டை அடித்தல்,எல்லாம் முடித்துவிட்டு தற்போது சர்வமதப்பிரர்த்தனை செய்கிறார்கள்.

இந்தியாவின் உண்மையான அழுக்கை சுத்தம் செய்வாரா மோடி?

காந்தியின் பிறந்த நாளான நேற்று இந்தியாவை தூய்மையாக வைக்க அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.நடிகர் கமல் ஹாசன்,டென்டுல்கர் , உள்ளிட்ட இந்திய பிரபல ங்களை தனது தூய்மை திட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக் கிறார்.கமல் பிரதமரின் அழைப்பை ஏற்பதாக பேட்டி கொடுத் திருக்கிறார். நல்ல விஷயம் செய்யவேண்டிய காரியம் தான்.
         ஆனால் இந்தியர்க ளின் மனதில் இருக்கும் அருவருப்பான உண்மை யான அழுக்கை  எப்படி தூய்மைப்படுத்துவது.சாதிரீதியான,மதரீதியானா அழுக்கு அப்பிக்கிடக்கிடதே அதை எப்படி தூய்மை செய்வது.அதைத்தானே முதலில் தூய்மை படுத்தவேண்டும். அந்த அழுக்கை சுத்தம் செய்தால் இந்தியாவின் மற்ற  அழுக்குகள் சுத்தம் செய்வது எளிது.