காந்தி படுகொலை ... ஆவணங்களை எரிக்க பா.ஜ.க. முயற்சி

ஜூன் 23 அன்று பிடிஐ செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதன்படி, “பிரதமர் நரேந்திர மோடியின் கட்டளைக்கிணங்க, மத்திய உள்துறை அமைச்சகம் தூய்மைப் படுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு மாதத் திற்குள்ளாகவே சுமார் ஒன்றரை லட்சம் கோப்புகளை அழித்துவிட்டன ...’’ என்றுகுறிப்பிட்டிருந்தது. அது மேலும், “... (மத்தியஉள்துறை அமைச்சகம் அமைந்துள்ள) நார்த் பிளாக்கில் உள்ள ஸ்டீல் பீரோக் களில் வைக்கப்பட்டிருந்த கோப்புகளைப் பார்வையிட்டபோது மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பல கோப்புகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித் தனர்’’ என்றும் குறிப்பிட்டிருந்தது.

“ஆர்வத்தைக் கிளப்பிய அத்தகைய கோப்புகளில் ஒன்று மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் பற்றியது’’ என்று ஓர் அதிகாரி தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது என்பதை வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் அனைவரும் நினைவுகூர்வார்கள். இந்த செய்தியை நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் எப்படிஅறிவிப்பது என்பது குறித்து அதிர்ச்சி யடைந்த அரசியல் தலைமையும் அரசாங்கமும் ஆடித்தான் போயிருந்தன. இதுதொடர்பாகத் தீர்மானித்திட அன் றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி இருந்தார். விவாதங்களுக்குப்பின்னர், அகில இந்திய வானொலி மூலம் பிரதமரே இப்படு கொலை செய்தியை அறிவிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. “நம்மிடையே வாழ்ந்துகொண்டிருந்த ஒரு விளக்கு அணைந்து விட்டது என்று தொடங்கும் அவரது பேச்சுஇன்று வரை தலைமுறை தலைமுறையாக நினைவுகூரப்பட்டு வந்த உரையாகும்.

திரித்து எழுத...


இந்தியாவின் வரலாற்றைத் திரித்து எழுதிட நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசாங்கம் தன் வேலைகளைத் துவக்கி விட்டது என்று ஆழமான முறையில் சந்தேகங்கள் எழுந்திருப்பது தெளிவு.
மகாத்மா காந்தி படுகொலை குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ பதி வேடுகளிலிருந்து ஆர்எஸ்எஸ் அல்லது அதன் உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பாக எந்த சாட்சியம் இருந்தாலும், அதனை அழித்தொழித்திட முயற்சிகள் மேற்கொள்வதுடன், இன்றைய இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற - ஜன நாயக குணாம்சத்தை ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கு அது இன்றைக் கும் முயற்சிப்பதும், தெள்ளத்தெளிவான ஒன்றேயாகும்.
இத்தகைய ஆர்எஸ் எஸ்-ன் திட்டம் விடுதலைப் போராட் டக் காலத்தில் முழுமையாகத் தோற்கடிக்கப் பட்டது. சுதந்திர இந்தியாவில் மதச்சார் பின்மை மற்றும் ஜனநாயகத்தின் அடிப் படைகளின் மேல் அரசமைப்புக் குடியரசு நிறுவப்பட்டது. ஆயினும், ஆர்எஸ்எஸ் இயக்கம் நவீன இந்தியக் குடியரசை தன்னுடைய `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்ததை இது தடுத்திடவில்லை.

ஒத்தி வைத்ததை உடனே நிறைவேற்ற...

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 31 சதவீத அளவிற்கு மட்டுமே வாக்குகளைப் பெற்றிருந்தபோதிலும், அபரிமித மான அளவில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்துள்ள ஆர்எஸ்எஸ்/பாஜக இந்தியக் குடியரசைத் தங்கள் விருப்பம்போல் மாற்றியமைத்திட அனைத்து முயற்சிகளையும் இப்போதே தொடங்கி விட்டன.
பாஜகவின் முன்னாள் தலைவர் ஒருவர், தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது பாடப் புத்தகங்களை மாற்றி அமைத் திடுவோம் என்று பேசியிருப்பது குறித்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. (இந்துஸ் தான் டைம்ஸ், 2013 ஜூன் 24). “இதனை நாங்கள் முன்பும் செய்ய முயற்சித்தோம். இப்போது மீண்டும் தொடர்வோம்,’’ என்று அவர் கூறியிருக்கிறார். இப்போது மீண்டும் ஆர்எஸ்எஸ் அடிப்படைகளுக்குத் திரும்பிட ஒரு வாய்ப்பாக அவர்கள் இதைப்பார்க்கிறார்கள்.

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
DEAR WHAT IS THE OLD NEWS IMPORTANT???

SESHAN



Anonymous said…
இந்திய அரசின் பாடநூல்கள் அனைத்தும் மேற்கத்திய நாட்டு வரலாற்று ஆசிரியர்களாலும், கம்யூனிஸ்டுகளாலும், காங்கிரஸ்காரர்களாலும் புனையப்பட்ட்ட கட்டுக்கதைகள். இவைகளை நம்பியதால்தான் இளம் தலைமுறையினர் நமது உண்மை வரலாற்றை அறியாமல் தம்மை தாமே இழிவாக எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நம் நாடு தலை நிமிர வேண்டுமானால் உண்மை வரலாற்றை நாம் அறிய வேண்டும். இஸ்லாமிய மன்னர்கள் செய்த கொடுங்கோல் ஆட்சியின் வரலாறு பற்றி எந்த பாடநூலாவது கூறுகிறதா? அல்லது கூற முடியுமா? வாஸ் கோடா காமா இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடித்தார் என்று கூறும் உங்கள் பாடநூல், அவர் கேரளாவிலும், கோவாவிலும் கிறிஸ்தவ மத மாற்றத்திற்காக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்றதைப் பற்றி ஏன் கூறவில்லை?. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார் என்று திப்பு சுல்தானை பாராட்டும் உங்கள் பாடநூல், அவர் முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தவர்களை கொடுரமாக கொன்றதை ஏன் கூறவில்லை?. இந்தியாவின் வரலாறு என்பது பல கட்டாயங்களுக்காகவும், சிலரை திருப்திபடுத்துவதர்காகவும் புனையப்பட்ட கட்டுக்கதைதான். இனியாவது இந்தியாவின் உண்மையான வரலாறு குறித்து அறிய நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்கு உங்கள் மூளை ஜென் கதையில் கூறப்படுவது போலி காலி கோப்பையாக இருக்க வேண்டும்.