பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label பிஜேபி. Show all posts
Showing posts with label பிஜேபி. Show all posts

மோடியின் 100 நாட்கள்...

திரைப்படங்களுக்குதான் 10வதுநாள், 25 வது நாள்,50வதுநாள்....100நாள் என் போஸ்டர் அடிப்பார்கள். இப்போது
அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சியின் 100 வது நாளை விழாவாக கொண்டாடுகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க. தனது 100 வது நாளை மிக கோலாகலமாக கொண்டாடியது. நாளிதழ்களில் பல கோடிகளுக்கு மக்கள் பணத்தில் விளம்பரங்கள். புதிய திட்டங்கள்அறிவிப்பு. அந்த கட்சி தொண்டர்கள் வெடிவெடித்து ,இனிப்பு வழங்கி கொண்டாடி முடித்துவிட்டார்கள். இப்போது மோடிக்கு 100வது நாள்...

மோடி வாய் மூடி இருப்பது ஏன்?


முஸ்லிம்களுக்கு எதிரானவை என்று கருதப்படும் சம்பவங்கள் குறித்து நாட்டின் புதிய பிரதமர்நரேந்திர மோடி வாய் மூடி மௌனம் காத்து வருகிறார். நரசிம்ம ராவ் போபர்ஸ் ஊழல் குறித்தும், மன்மோகன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் குறித்தும் மௌனம்காத்தது போல் மோடி மதவன்முறைகள், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மௌனம் சாதித்து வருகிறார். .

காந்தி படுகொலை ... ஆவணங்களை எரிக்க பா.ஜ.க. முயற்சி

ஜூன் 23 அன்று பிடிஐ செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதன்படி, “பிரதமர் நரேந்திர மோடியின் கட்டளைக்கிணங்க, மத்திய உள்துறை அமைச்சகம் தூய்மைப் படுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு மாதத் திற்குள்ளாகவே சுமார் ஒன்றரை லட்சம் கோப்புகளை அழித்துவிட்டன ...’’ என்றுகுறிப்பிட்டிருந்தது. அது மேலும், “... (மத்தியஉள்துறை அமைச்சகம் அமைந்துள்ள) நார்த் பிளாக்கில் உள்ள ஸ்டீல் பீரோக் களில் வைக்கப்பட்டிருந்த கோப்புகளைப் பார்வையிட்டபோது மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பல கோப்புகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித் தனர்’’ என்றும் குறிப்பிட்டிருந்தது.

‘தமிழ், குஜராத்தி, வங்காளி மொழிகளின் கலவையே இந்தி’

சமூக ஊடகங்களில் இந்தி மொழியை திணிக்கக்கூடாது என்று தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புக்குரல் எழுந்துள்ள நிலையில், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளின் கலவைதான் இந்தி என்றுவிநோதமான, அறிவிலித்தன மான விளக்கம் ஒன்றை பாரதிய ஜனதா கட்சி அளித்துள்ளது.சமூக ஊடகங்களில் அரசுத் தகவல்களை இந்தியில் மட்டுமே வெளியிடுவது என மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து அமலாக்கியது.

ஆள்பிடிப்பு வேலயும் ....நாற்காலிச் சண்டைகளும்

அமையப்போவது மோடி அரசுதான் என்று கார்ப்ப ரேட் ஊடகங்கள் போட்டி போட் டுக்கொண்டு பிரச்சாரம் செய்துகொண்டிருக்க, மறுபுறம் பாஜகவுக்குள் அதிகாரத்தை பங்கு போட்டுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆலோசனைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. ஆட்சி கிடைத்தால் யாருக்கெல்லாம் முக்கிய பதவிகளை பங்குபோட்டுத் தரலாம் என்பது பற்றி கடுமையான சர்ச்சை நடந்து வருகிறது.

கடந்த காலங்களைப் போல தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தவறாகிவிட்டால் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.