பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

ஜெ. மரண அறிக்கையின் இறுதி பக்கத்தில் இருந்த திருக்குறள் !!!!


 ஜெ.மரண அறிக்கையில்  இறுதி பக்கத்தில் உள்ள திருக்குறளின் அர்த்தம் இது தான்.

   சட்டசபையில் இன்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையால் அதிமுவுக்கும் , தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.



        ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் இறுதியில் "காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த  களிறு" என்ற திருக்குறள்  இடம் பெற்றுள்ளது.


 அமேசானில் இந்தபொருளை வாங்க படத்தை கிளிக் செய்க

இந்த  திருக்குறளின்  விளக்கம் என்னவென்றால் "வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற  ஆற்றல் படைத்த யானை ,சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக்கொன்று விடும்" என்பதாகும்.இந்த குறள் மூலம் யானைபோன்ற பலமிக்க ஜெயலலிதாவை  நரிகள் போன்ற சிலர் சேர்ந்து கொன்று விட்டதாக மறைமுக   பொருளும் அடங்கி இருக்கிறது


ரஜினியுன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்...

மை நேம்ஸ் பில்லா...,வாழ்க்கை எல்லா.... விசில் சத்தமும்,கிழித்தெரியப்பட்ட காகித துண்டுகளுக்கிடையே தலைவர் பாடிக்கொண்டிருந்தார். பில்லா படம் பார்க்க எங்கள் ஊர் மீனாட்சி திரையரங்கில் சட்டை கிழிய,வியர்வையில் நனைந்து டிக்கெட் எடுத்தேன்.
           நான் உட்பட பல கோடி தமிழர்களை ரசிகர்களாக ரஜினி பெற்றமைக்கு என்ன காரணமாக இருக்கும். மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னதைப்போல "ரஜினியின் நிறமும்,தோற்றும் திராவிட தன்மைகொண்டது.அதுவே அடிப்படை காரணமாக இருக்கலாம்" என்றார்.              ரஜினி மிக நுட்பமாக வியாபாரம் தெரிந்த நடிகர்.தனக்கும்,தன்னை வைத்து படம் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் நஷ்டம் எற்பாடமல் பார்த்துக்கொள்வார்.வினியோகஸ்தர்கள்,தியோட்டர்காரர்களையோ ,ரசிகர்களை பற்றியோ கவலைப்படமாட்டர். இதற்கு சமீபத்திய படமான கபாலி மிகச்சிறந்த ஊதாரணம்.கபாலி டிக்கெட்கள்  விலை குறிப்பிடபடமலேயே விற்கப்பட்டன. என்ன விலை வேண்டுமானலும் விற்றுக்கொள்ளலாம். அது உன் சாமர்த்தியம். அதற்கு நான் பொறுப்பல்ல என ஒதுங்கிக் கொண்டார் ரஜினி.
               கடந்த மாதத்தில்  ரசிகர் சந்திப்பு மற்றும் புகைப்படம் எடுத்து கொள்ளுதல் நிகழ்ச்சியை கூட அப்பட்டமான வியாபாரமாக மாற்றினார். புகைப்படம் எடுத்தக்கொள்ள வழங்கப்பட்ட டோக்கன் அதிக விலைக்கு விறக்கப்பட்டிருக்கிறது.அப்படியும் "போருக்கு தயாராக  இருங்கள் என்ற அரசியல் பிரவேச ஆசையை நிறைவேற்ற ரசிகர்கள் சந்தோசமாக வரவேற்கிறார்கள். மதுரையில்      மகாபாரதத்தில் வரும் குருச்சேத்திர  போர் காட்சியில் கிருஷ்ணரின் முகத்திற்கு பதிலாக ரஜினியின் முகத்தை இணைத்து "தர்மத்தின் தலைவா "போருக்கு தயாராக இருக்கிறோம்...வா. என்ற சுவரொட்டிகள் வரவேற்கின்றன.

ரஜினிகாந்தின் அரசியல் பார்வை...
1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ,- த.மா.க வுக்கு  ஆதரவாக ''மீண்டும் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாத்த முடியாது'' என்ற வசனம் தான் அவரது முதல் அரசியல் கருத்து. அந்த தேர்தலில் ஜெயலலிதா தோற்றுப்போனார், ரஜினி வாய்ஸ் கொடுக்காவிட்டாலும் அன்றைய சூழ்நிலைக்கு ஜெயலலிதா தோற்றிருப்பார்,அன்றைய அரசியல் சூழல் அப்படி.
     படையப்பா,மன்னன்,எஜமான்.....என அடுத்தடுத்து வந்த  படங்களில் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி எதிப்பார்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் பட வியாபாரத்தை அதிபடுத்திக்கொண்டார்
 1996 க்கு பிறகு வந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார், அவருக்கு நடிகர்கள் நடத்திய விழாவில் ரஜினிகாந்த், ஜெயலலிதாவை தைரியலட்சுமி,அஷ்டலட்சுமி என்று புகழ்ந்து பல்டி அடித்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றிக்கு வாழ்த்து அனுப்பினார் . அவரின் அரசில் நிலைபாடு தலைகீழாக மாறியது ஏன்? இதுவரை அவர் அரசியலுக்கும் வரவில்லை,தனது ரசிகர்களுக்கு வழிகாட்டியாகவும் இல்லை.ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சிஸ்டம் சரியில்லை, போருக்கு தயாராக இருங்கள் என்று சொன்ன அதே மேடையில் "நான் அரசியலுக்கு வருவதை  ஆண்டவன் தான் முடிவு செய்யவேண்டும்" ... என  மீண்டும் முதலிலிருந்து அரம்பித்துள்ளார்.


ரஜினி -25ம் வியாபார நோக்கமும்...
 ரஜினிக்கும்  என்னை போன்ற அவரது ரசிகர்களுக்கும் விரிசல் விழத்தொடங்கிய புள்ளி என்றால் அது ரஜினி 25 விழா நிகழ்வுதான்.ரஜினி சினிமாவிற்கு வந்த 25 ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வு குறித்து அப்போதைய பத்திரிக்கை செய்திகள் சில...

 பாராட்டுவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்தவும் பூச்செண்டு கொடுக்கவும் தயார்.ஆனால் அவருக்கு பூக்களை தூவி ஆன்மீக குரு போல் நடத்த எங்களால் முடியாது என்கிறார்கள் திரைப்பட நடிகைகள் -  தினமலர்

ரஜினி எங்களிடமிருந்து தனிமைப்பட்டு விட்டார் என்கிறார்கள் சினிமாக்காரர்கள் - ஜூனியர்விகடன்

ரஜினி விழாவா? லதாவிழாவா? விழாவை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் சினிமா அளவுக்கு பணம் சம்பாதிக்க நினைப்பது வேதனை - ஜூனியர்விகடன்

ரஜினி விழாவில் ரசிகர்கள் உட்காரவே இடம் கிடையாதாம்.ஆனா டிக்கெட் ரூ.100 கொடுத்து வாங்கனுமாம் -  நக்கீரன்

மிக உயர்ந்த அளவுக்கு எளிமையானவர்னு பேசப்பட்ட அவர் தீடிர்ரென இப்படி ஒரு விழாவுக்கு எப்படி சம்மதிச்சாருன்னு தெரியல - இந்தியன் எக்ஸ்பிரஸ்

ரஜினி 25 விழாவின் வசூல்கள்

ரஜினி பொம்மை மட்டும் வைத்திருந்த ரஜினி 25 கண்காட்சியை முழுவதும் ஒன்று விடாமல் பார்க்க ஒருவருக்கு மட்டும் ஆகும் செலவு 2213 ரூபாய், அபிராமி தியோட்டரில் போடப்பட்ட 15 ரஜினி திரைப்படங்களை பார்க்க ஒரு ரசிகனிடம் ரூ100 வசூல் இன்னும் பல....

ரஜினி 25 விழாவை ரஜினியின் துணைவியார் லதாரஜினிகாந்த் தன்னுடைய ஆஸ்ரம் பள்ளியின் வளர்ச்சிக்காக இந்த விழாவை நடத்துவதாக கூறியிருக்கிறார் இப்படி வசூலித்துதான் பள்ளி நடத்த வேண்டுமா? ரஜினியிடம் கூறி ஒரு படத்தின் முதல் நாள் வசூலைப் பெற்றாலே போதுமே.இது போன்ற நிகழ்வுகளால் ரஜினிகாந்தின்  ரசிகர்கள் கொஞ்சம்,கொஞ்சமாக ரஜினிமன்றங்களில் இருந்து விலகத்தொடங்கினர்.

ரஜினி தமிழக ரசிகர்களுக்காக  2 -வாக்குறுதிகளை கொடுத்தார். 1.நதிநீர் இணைப்புக்கு 1 கோடி கொடுப்பேன். 2.சமீபத்தில் உடல்நிலை மோசமடைந்து தேறியபிறகு இலவச மருத்துவமனை கட்டித்தருவேன் என்றார். இரண்டுமே என்ன ஆனாது. இப்படி வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் தகுதி போதும் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு.ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொள்ளும் துவக்க விழாவில் "தமிழர்கள் சில விஷயங்கள் ஈசியா க ஏமாந்து விடுவார்கள்" என பேசினார் ரஜினி.அது இது தான் போலும்.
                    இப்படி ரஜினியை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் நான் சினிமா ரசிகனாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பகிறேன்...
.- அ.தமிழ்ச்செல்வன்


‘முத்தலாக்’கின் அரசியல் அவதாரம்

சமீபத்தில் மோடி அரசாங்கம் முத்தலாக் குறித்தஅவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இதை விடவும் அவசரமும், முக்கியத்துவமும் வாய்ந்த பல்வேறு பிரச்சனைகளில் காட்டாத அவசரமும் அக்கறையும் இதில் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. 2018 செப்டம்பர் 19ஆம் தேதி நாட்டின் குடியரசுத்தலைவரால் பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டத்தின் பெயர் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) அவசர சட்டம், 2018. இது முத்தலாக் அவசரச்சட்டம் என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது.ஒரு முஸ்லிம் கணவர் தனது மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தடவை தலாக் செய்வதாகக் கூறி விவாகரத்து செய்வதைத் தான் முத்தலாக் என்று பொதுவாக அழைக்கின்றனர். இது தலாக் இ பித் ஹத் என அழைக்கப்படுகிறது. இறைவனின் பார்வையில் விவாகரத்து வெறுக்கத்தக்கது என்று குர் ஆன் கூறுகிறது.ஷரியத் சட்டத்தின் படியும், இஸ்லாமிய கோட்பாடுகளின்படியும் இப்படி கணவரால் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்வது சட்டப்பூர்வமானது அல்ல என்று பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து கூறுகின்றனர். குறிப்பாக கணவன்மனைவி இடையே பிணக்கு ஏற்படும் போது தம்பதியினரிடையே சமரசம் ஏற்படுத்த உரிய முயற்சி தேவை என்றும் குர் ஆன் வற்புறுத்துகிறது. குடும்ப கவுன்சலிங் ஒவ்வொரு கட்டத்திலும் தேவை என்பதையும் கூறுகிறது.இத்தகைய முயற்சிகள் தோல்வியுற்று, விவாகரத்தை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுமாயின் உரிய சாட்சிகள் முன்னிலையில் மூன்று மாத இடைவெளிகளுக்குள் தனித் தனியாக மூன்று தடவை தலாக் என்று அறிவித்து, அது முறைப்படி அவரது மனைவிக்கும் உரிய முறையில் தெரியப்படுத்தினாலே அது ஷரியத் அடிப்படையில் முறையான விவாக ரத்தாகும் என்று அத்தகைய மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இதற்கு மாறாக முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்யும் கணவர்கள் சிலரால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. இத்தகைய முறை பெரும்பாலானோரால் ஏற்கப்பட இயலாதது.

முத்தலாக் முறையை தடை செய்துள்ள இஸ்லாமிய நாடுகள்

இஸ்லாமிய முறைப்படி ஆட்சி நடக்கும் நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளான எகிப்து, இராக், ஜோர்டான், குவைத், லிபியா, மொராக்கோ, சூடான், சிரியா, துனீசியா, ஐக்கிய அரபு எமிரேடுகள், ஏமன், இந்தோனேசியா , மலேசியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சட்டப்படிதிருமண விவாகரத்துக்கான விதிமுறைகள் வகுக்கப் பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே முத்தலாக்என்ற முறையில் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையிலும், விவாகரத்தில் தன்னிச்சையான முறைகள் பின்பற்றப்படக் கூடாது என்ற அடிப்படையிலும், உரிய சட்டப்பூர்வமான அனுமதியுடனேயே விவாகரத்து செய்யப்பட வேண்டும் என்பதை அந்நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இந்தியாவில் இப்போது ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பா.ஜ.க. ஆட்சியின்நோக்கம் அதுவல்ல. மாறாக தங்களுடைய அரசியல்நோக்கங்களுக்கு பயன்படுத்தவே தற்போது எத்தனையோ அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் உள்ள நிலையில் இதை கையிலெடுத்துள்ளது.

முத்தலாக் வழக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்

2017 ஆகஸ்ட் 22இல் உச்சநீதிமன்றம் முத்தலாக் குறித்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளி யிட்டது. இந்த தீர்ப்பு மாண்புமிகு நீதிபதிகள் ஜகதீஷ் சிங்கெஹார், குரியன் ஜோசப், ரொஹிண்டன் பாலி நாரிமன்,உதய் உமேஷ் லலித், அப்துல் நசீர் என்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவின் அடிப்படையில் முத்தலாக் என்று ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் தலாக் இ பித்ஹத் எனும்முறை சட்டப்பூர்வமானது அல்ல என்று அறிவித்து, அதை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பு குறித்து பரவலாக வரவேற்பும் ஒரு சிலரால் விமர்சனமும்முன் வைக்கப்பட்டாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு அரசியல்சட்டப்படி இறுதியானது என்பதால் அந்த தீர்ப்பின்படி முத்தலாக் எனும் முறை தடை செய்யப்பட்டு, செல்லாதது என்ற நிலை ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டாகி விட்டது. அத்தீர்ப்பு கூறிவதாவது:தனிநபர் சட்டம் அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் அனைத்து நீதிமன்றங்களும்அதை பராமரிக்கவும், பாதுகாக்கவும் செய்ய வேண்டியது அரசியல் சட்டப்படியான கடமை. அதனால் இதில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டுமாயின் அரசியல் சட்ட ஷரத்து 25(2) மற்றும் 44இன் படியான நாடாளுமன்ற சட்டத்தின் மூலமே அது சாத்தியப்படும். அத்தகைய சட்டம் ஒன்று நிறைவேற்றப்படுவது வரை முஸ்லிம் கணவர்கள் தனதுவிவாக உறவை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்முத்தலாக் அறிவிப்பு வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது. இத்தடை 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும், 6 மாதத்திற்குள் நடவடிக்கை துவங்கி முத்தலாக்குறித்த நாடாளுமன்ற சட்ட ரீதியான மறு விளக்கம் அல்லதுமுழுமையாக அம்முறையை நீக்கும் சட்ட நடைமுறை துவக்கப்பட்டால் அந்த சட்ட நடைமுறை முடியும் வரை தடை தொடரும் என்று அத்தீர்ப்பு கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்

அத்தீர்ப்பின்படி நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வந்து விவாகரத்துக்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இத்தீர்ப்பை சாதகமாக்கி கொண்டு நரேந்திர மோடி அரசாங்கம் தனது இயல்பான முஸ்லிம் வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும்,பழி வாங்கும் வகையிலும் ஒரு புதிய சட்ட முன் வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால்அச்சட்ட முன்வடிவின் மீது உரிய கலந்தாலோசனை களையோ, கருத்து அறிதலையோ செய்ய மறுத்துவிட்டது. இத்தகைய தனிநபர் சட்ட முன்வடிவுகளைக் கொண்டு வரும் போது அம்மதம் சார்ந்த மார்க்க அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோரிடத்தில் விரிவான ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். மேலும் முழுமையான கருத்துப் பரிமாற்றங்களுக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். சட்ட முன்வடிவை தயாரிக்கும் முன்னரும், தயாரித்த பின்னரும் கூட இத்தகைய கலந்தாலோசனைகள் விரிவான கருத்தொற்றுமையை ஏற்படுத்த வழி வகுக்கும். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அத்தகைய நோக்கம் எதுவும் இல்லை. தங்களது அரசியல் நோக்கம் மட்டுமே அதன் முன்னால் இருந்தது. எனவே தான் எத்தகைய கருத்துப் பரிமாற்றமும்இன்றி அந்த சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததோடு, தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் முறையான, விரிவான விவாதம்ஏதும் இன்றி நாடாளுமன்ற மக்களவையில் அந்த சட்ட முன்வடிவை நிறைவேற்றியது. அந்த சட்ட முன்வடிவில் ஏராளமான குளறுபடிகள் இருந்தன.நமது நாட்டிலும், பிற நாடுகளிலும் திருமணம், திருமண முறிவு ஆகியவை சிவில் சட்டங்களாகவே இருந்துவருகின்றன. ஆனால் இந்த சட்டம் மட்டும் கிரிமினல் சட்டவகையாக உருவாக்கப்பட்டு, விவாகரத்து செய்யும் கணவருக்கு சிறைத் தண்டனை வழங்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை எதிர்த்தன விமர்சித்தன. எனவே இச்சட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி, விரிவான ஆலோசனைகளுக்கும், பரிசீலனைக்கும் உட்படுத்த வேண்டுமென்று மாநிலங்களவையில் வற்புறுத்தப்பட்டது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையை தடை செய்துள்ள நிலையில் அவசர அவசரமாக இச்சட்டத்தை நிறைவேற்ற தேவை யில்லை என்றும், சட்ட நடவடிக்கைகள் துவங்கி முடிவது வரை அத்தடை நீடிக்கும் என்றும் உச்சநீதிமன்றம்தனது தீர்ப்பில் தெளிவுபடுத்திவிட்டதால் அவசரப்படத் தேவையில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறியும் அரசு செவி சாய்க்கவில்லை. எனவே தனக்கு பெரும்பான்மை இல்லாததால் மத்திய பா.ஜ.க. அரசால் மாநிலங்களவையில் இதை நிறைவேற்ற இயலாமல் போயிற்று. இந்நிலை யில் தான் அவசரச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக நாடாளுமன்ற பரிசீலனையில் உள்ள ஒரு சட்டம் குறித்து அவசரச் சட்டம் வெளியிடுவது முறையல்ல என்றாலும், அரசியல் சட்டத்தை கிஞ்சிற்றும் மதிக்காத பாஜக அரசு இத்தகைய அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது.

அவசரச் சட்ட விதிகள்

சட்டம் மற்றும் நீதித் துறையினால் பிறப்பிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் ( திருமண உரிமைகள் பாதுகாப்பு ) அவசரச் சட்டம் ஜம்மு-காஷ்மீர் தவிர இந்தியா முழுவதும்உடனடியாக அமலுக்கு வரும். என்று ஷரத்து 1 கூறுகிறது. இச்சட்டத்தின் ஷரத்து 4இன் படி முத்தலாக் கூறும் கணவர் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கும், அபராதத்திற்கும் உள்ளாவார். ஷரத்து 5இன்படி விவாகரத்து செய்யப்பட்ட திருமணமான பெண் மாஜிஸ்டிரேட்டால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை தனக்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் வாழ்க்கைப்படியாகப் பெற உரிமையுள்ளவராவார். ஷரத்து 7இன் படி இத்தகைய விவாகரத்து புரிந்ததாக திருமணமான பெண்ணாலோ அல்லது உறவினராலோ ஒரு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டால் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் கைது செய்யத்தகுந்த குற்றம்புரிந்தவர் ஆகிறார். அப்படிகுற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டால் அவரின் மனுவின் அடிப்படையில் திருமணமான பெண்ணின் தரப்பையும் கேட்டபின்னர் உரிய காரணங்கள் இருந்தால்மட்டுமே அவருக்கு மாஜிஸ்டிரேட்டால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று இந்த அவசரச் சட்டம் கூறுகிறது.

அவசரச் சட்டம் குறித்த விமர்சனங்கள்

இந்த அவசரச் சட்டம் குறித்து மதச்சார்பற்ற அரசியல்சட்ட நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், பெண்ணியவாதிகள் உட்பட பல தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்த அவசரச் சட்டம் எவ்வித கலந்தாலோசனைகளோ, கருத்துப் பரிமாற்றமோ இன்றி அவசரஅவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. பிற மதங்களைச் சார்ந்த மக்களின் திருமணம் மற்றும், விவாகரத்து குறித்தசட்டங்கள் எல்லாம் சிவில் சட்டமாகவே இருக்கின்ற போது முஸ்லிம்களின் விவாகரத்து குறித்த இச்சட்டம் கிரிமினல் சட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பதைவிட முஸ்லிம் ஆண்களை பழிவாங்கும் வகையில் தண்டனை வழங்குவதே முக்கிய நோக்கமாக வுள்ளது. எனவே தான் பிணையில் வர முடியாதவகை யில் கைது நடவடிக்கையும், 3 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் சிறையில்அடைக்கப்படும் ஒரு கணவரிடமிருந்து மனைவி தனக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம்பெறுவதற் கான வாய்ப்பு எப்படி உருவாகும் என்ற புரிதல் கூட இல்லாமல் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நாடாளு மன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைப்படி சட்ட முன்வடிவு நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படாமலும் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் இத்தகைய அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது அரசின் துர்நோக்கத்தையே காட்டுகிறது. கணவனால் கைவிடப்படும் முஸ்லிம் பெண்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் தான், தனது
திருமண உறவைக் கூட தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில் மறைத்து வந்தார் என்பதும், விவாகரத்து கூட செய்யாமல் தனது மனைவியை இளம் வயதிலேயே கைவிட்டு அபலையாக்கினார் என்பதும் அவரது நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது.

-எஸ்.நூர்முகம்மது
நன்றி தீக்கதீர் நாளிதழ்






ரபேல் ஊழல்: எளிமையாகப் புரிந்துகொள்வது எப்படி?


ரபேல் விமானம்: என்ன தேவை?

இந்தியா கடைசியாக வாங்கியது  சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996-ல் வாங்கியதுதான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி, 2001-ல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமாகி 2016-ல்தான் விமானப் படையில் இது சேர்க்கப்பட்டது.இதற்கிடையில் போர் விமானங்களின் தேவை உணரப்பட்டதால் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சியில், 2007-ல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற பல நாட்டு  நிறுவனங்களில் பல்வேறு பரிசீலனைகளுக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்தின் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டது.

மன்மோகன் ஆட்சியின் ஒப்பந்தம் என்ன?

126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது. இவற்றில்  18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை  தஸ்ஸோ நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. இதன்படி ஹெச்ஏஎல் – தஸ்ஸோ இரு நிறுவனங்கள் இடையேயான  ‘வேலை ஒப்பந்தம்’ 2014 மார்ச்சில் கையெழுத்தானது.

மோடி அரசு செய்த மாற்றம் என்ன?

2014 மே மாதம் மோடி அரசு ஆட்சிக்கு வருகிறது. 2015 ஏப்ரலில் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக  36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக அறிவிக்கிறார். அடுத்து, 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்கிறார் அன்றைக்குப் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர். அடுத்து, 2016 செப்டம்பரில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதை ஏன் ஊழல் என்கிறார்கள்?

1. விலை: முந்தைய மன்மோகன் அரசு விமானத்தை வாங்கவிருந்த விலை சுமார்

ரூ. 526 கோடி. மோடி அரசு வாங்குவது சுமார் ரூ. 1,670 கோடி!

2. உற்பத்தி: முந்தைய ஒப்பந்தப்படி, 18 விமானங்கள் மட்டுமே பறப்பதற்குத் தயாராக வாங்கப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இப்போதைய ஒப்பந்தப்படி, எல்லாமே பிரான்ஸில்தான் தயாரிக்கப்படும்.

3. தொழில்நுட்பம்: முந்தைய ஒப்பந்தத்தில், தஸ்ஸோ நிறுவனம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும். இன்றைய ஒப்பந்தத்தில்,  ‘சில தனியார் நிறுவனங்களுக்கும்’ தொழில்நுட்பம் தரப்படும். அந்தத் தனியார் நிறுவனம் எது? அதுதான் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’.

4. அனுபவம்: பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் விமானத் துறையில் அனுபவம் உள்ள நிறுவனம். ஏற்கெனவே போர் விமானங்களைத் தயாரித்துக்கொண்டும் உள்ளது. மோடி அரசில் முடிவு செய்யப்பட்ட ரிலையன்ஸுக்கு விமானத் துறையில் எந்த அனுபவமும் இல்லை.

5. மோடியின் மீறல்: 2015-ல் பிரான்ஸுக்குச் சென்றபோது ரபேல் விமானங்கள் வாங்குவதாக தடாலடியாக அறிவித்தார் மோடி. இது போன்ற பல்லாயிரம் கோடி ஆயுதங்கள் வாங்கும் விஷயங்களில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற விஷயங்களில் போர் விமானம் குறித்த தொழில்நுட்பம்தான் ரகசியமே தவிர, விலை ரகசியமாக வைக்கத் தேவையில்லை.  ஆனால், மோடி அரசு விலையை ரகசியம் என்கிறது.

6. சந்தேக ரிலையன்ஸ்: 2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோடி, ரபேல் விமானம் வாங்கப்படும் என்று அறிவித்தார் அல்லவா, அப்போது கூடவே சென்றவர் அனில் அம்பானி. இந்தப் பயணத்துக்குச் சில நாட்கள் முன்தான்  ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ எனும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. பிரதமர் பிரான்ஸுக்குச் சென்று ரபேல் வாங்குவதென அறிவித்ததற்கு இரண்டு நாட்கள் முன்புகூட, போர் விமானங்கள் விஷயத்தில் ஹெச்ஏஎல் இருக்கிறது என்று பேட்டி அளித்திருக்கிறார் வெளியுறவுத் துறைச் செயலர். இந்தப் பின்னணியில்தான் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் வந்ததைக் கேள்விக்குள்ளாக்குகின்றன எதிர்க்கட்சிகள்.

7. ஒல்லாந் குண்டு: ரபேல் ஊழலில் ரிலையன்ஸ் விவகாரம் வெளியே வந்ததும், “ரிலையன்ஸுக்கும் தஸ்ஸோவுக்கும் என்ன ஒப்பந்தம் என்று எங்களுக்குத் தெரியாது. தஸ்ஸோ தனக்கு விருப்பமான கூட்டாளியைத் தேர்வுசெய்யலாம், அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று சொன்னார்கள்  மோடியும் அவரது அமைச்சர்களும்.  ஆனால், “மோடி அரசு, ரிலையன்ஸ்தான் கூட்டாளியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது, எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை” என்று பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஒல்லாந் சொல்லியிருப்பது பெரும் திருப்பம். ஏனென்றால்,  அவர்தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்!

-ஆர்.ஷாஜஹான், எழுத்தாளர்.
நன்றி- தி இந்து தமிழ் நாளிதழ்

புளூவேல் வெறும் விளையாட்டா, விபரீத விதையா?


புளூவேல்’ என்ற இணைய விளையாட்டு, உலக அளவில் இளைய தலைமுறையின் உயிரை குடிக்கும் விளையாட்டாக மாறி வருகிறது. இந்த விளையாட்டின் இறுதிக் கட்டம், தற்கொலைக்கு தூண்டுவதே நோக்கமாக உள்ளது. ‘புளூ வேல்’ என்ற இணைய விளையாட்டால் பாதிக்கப்படுவதில் ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லை.இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான இணைய விளையாட்டுக்கள், இணைய செயலிகள் நமது ரகசிய தரவுகளையும் புகைப்படங்களையும் நமக்கு தெரியாமலே திருடிச்சென்றனர். தற்போது ஒரு படி மேலே சென்று மனித உயிர்களுடன் விளையாடுகின்றனர். உலகின் எங்கோ ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் மெல்ல மெல்ல இந்த விளையாட்டு இந்தியாவுக்குள் ஊடுருவி தற்போது தமிழ்நாட்டிற்குள்ளும் புகுந்துவிட்டது.

இணைய அடியாட்களின் களமாகிறதா தமிழகம்?

தமிழகத்தில் இணையதள கும்பல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களையும் எதிர்க் கருத்துக்களையும் ஆபாச வசவுகளால் வீழ்த்துவது, குறிப்பாக பெண்களை பாலியல் அடிப்படையில் தாக்குவது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது.

தென்மேற்கு, வடகிழக்கைப் போல ‘வடக்கும்’ வஞ்சித்துவிட வேண்டாம்! கவிஞர் வைரமுத்து


தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் வஞ்சித்து விட்ட நிலையில், வடக்கும் (மத்திய அரசு) வஞ்சித்துவிட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.இதுதொடர்பாக சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வைரமுத்து விடுத்துள்ளார்.
          அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:“எங்கள் தமிழ்நாட்டு விவசாயிகள் ஜந்தர் மந்தரின் வெய்யில் வீதியில் வெந்து வெந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள்மீது உரியவர்களின் பார்வை விழவில்லை என்பது பதற்றம் தருகிறது.வானத்தால் ஏய்க்கப்பட்டவர்களையும் பூமியால் கைவிடப்பட்டவர்களையும் அரசாங்கமும் வஞ்சித்துவிடக் கூடாது.

போயஸ் தோட்ட வீட்டு முன்பு சங்கு ஊதிய தொண்டர்கள் : சசிகலா நேரில் பார்த்து அதிர்ச்சி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ''என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்" என்று அதிரடியாக கூறினார்.
  இதனையடுத்து கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்தார்.

செருப்பில் மகாத்மா காந்தி இந்தியாவை அவமதிக்கும் அமேசான்

 
இந்திய தேசியக் கொடியைஅவமதித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் தேசத் தந்தை காந்தியடிகளையும் இழிவுபடுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் உலகின் பல்வேறுநாடுகளிலும் இணைய வழி வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிறுவனம் இந்திய தேசியக் கொடி படம் பொறித்த மிதியடியை கனடா விற்பனையகத்தில் விற்பனை செய்து வந்தது. தனது விற்பனை பட்டியலில் அதுகுறித்த விளம்பரமும் செய்திருந்தது. இந்த நிறுவனத்தின் நடவடிக்கைக்கு இந்தியர்கள் மத்தியில் கடும்எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் டுவிட்டர் பக்கத்திற்கு ஏராளமான இந்தியர்கள் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்திய தேசியக்கொடி பதித்த மிதியடியை விற்பனை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த செயலுக்கு அமேசான் நிறுவனம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும்இல்லையேல் அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இநதியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார்.

சசிகலா வெற்றிக்காக திருமங்கலத்தில் இடைத்தேர்தல்? 2009 பார்முலாவை கையிலெடுக்கும் அதிமுக



அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவிற்காக ஆள் ஆளுக்கு பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதால் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. (ஒரு உண்மையை சொல்லிவிடுகிறேன் நான் அரசியல் பார்முலா புகழ் திருமங்கலத்தை சேர்ந்தவன்)திருமங்கலத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் 2009
மதுரை: திருமங்கலம் சட்டசபை தொகுதி இந்திய அளவில் பிரபலமானதற்கு காரணம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து சத்தியம் வாங்கி ஓட்டுக்களை பெற்றதுதான். 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். உடல் நலக்குறைவினால் அவர் மரணமடையவே, திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. 2009ம் ஆண்டு ஆளும் கட்சியாக இருந்த திமுக, அப்போது அழகிரியின் மூலம் அரங்கேற்றிய அராஜகங்கள் வரலாற்றில் இடம் பெறும் அளவிற்கு சென்றது. இன்றைக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் திருமங்கலம் பார்முலா என்று பேசும் அளவிற்கு இந்திய தேர்தல் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

தலைமைச் செயலாளருடன் ஒரு சந்திப்பு!

தமிழக வரலாற்றிலேயே இதற்குமுன்பு எப்போதும் இல்லாத வகையில் தலைமைச் செயலாளர் வீடுமற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளரின் அறையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் தலைகுனிவாகவே உள்ளது. மேலும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றுள் ளது.இந்நிலையில் இப்படியும் தலைமை செயலாளர்கள் இருக்கிறாக்ளா என்று கேட்கும் வகையில் ஒருவர் இருக்கிறார். 

மரியாதைக்குரிய மோடிஜி அவர்களே!


நீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .

பிரதமர் மோடியின் ‘வான்வழி’ தாக்குதல்

மோடி கருப்பு பணத்திற்கு எதிரான துல்லிய தாக்குதல் என்ற பெயரில் தன் சொந்த பணத்தை எடுக்க பாமரமக்களை பாடாய்படுத்தி வருகிறார். பெரும் கருப்பு பண முதலைகள் சல்லாபித்திருக்க ஏழைகள் மட்டுமே துயரமடைகிறார்கள். இப்போது துல்லிய தாக்குதல் அடுத்ததாக வான்வழிதாக்குதல் தொடுத்திருக்கிறார்...
ரூபாய் நோட்டுகளை முற்றாக ஒழிக்க திட்டமிட்டிருப்பதாகவும், ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து நாட்டு மக்களைஇன்னலுக்குள்ளாக்கிய பிரதமர் நரேந்திரமோடி இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க மறுத்து வருகிறார். ஆனால் வெளியில் தனது சாதனை இதுவென்று மார்தட்டி வருகிறார்.

இந்நிலையில், மனதோடு பேசுவேன் என்ற வானொலி நிகழ்ச்சியில் ஞாயிறன்று அவர் உரையாற்றினார்.ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்று நவம்பர் 8 ஆம்தேதி அறிவித்ததாகவும், 50 நாட்கள் இதனால் கஷ்டம் இருக்கும் என்று தான் ஏற்கெனவே தெரிவித்ததாகவும் கூறிய அவர், இடர்களை சந்திக்கும் மக்களுக்கு தனது வாழ்த்துக் கள் உரித்தாகட்டும் என்றார்.ஜன்தன் என்ற அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை துவக்கியபோது வங்கி பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டார்கள்.

அதேபோல இப்போதும் கஷ்டப்படுகிறார்கள்.

காவிரி பிரச்சனை : தீர்வு என்ன?

3 வது உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காத்தான் நடக்கும் என்கிறார்கள் ,உலக முழுவதுமே தண்ணீர் பிரச்சனை  அதிகரித்துவருகிறது.இந்தியாவில் பக்கத்து பகத்து மாநிலங்கள் தண்ணீர் பிர்ச்சனைகாக  அடித்துக்கொள்கின்றன. இந்த முறை காவிரி பிர்சனையில் கர்நாடக மாநிலம் பொங்களூர் ,அங்கள்ள தமிழர்களும் படாதபாடு பட்டுவிட்டார்கள். சரி காவிரி பிச்சனைக்கு தீர்வு தான் என்ன....

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழுவின் அதிகாரப்பூர்வ வார ஏடான `பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யில், ‘THINKING TOGETHER’ என்ற தலைப்பில் கேள்வி - பதில் வெளியாகி வருகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், `பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ ஏட்டின் ஆசிரியருமான பிரகாஷ் காரத் பதிலளிக்கிறார்.
கேள்வி: தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டதை தொடர்ந்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகாவில் வன்முறை எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. இப்பிரச்சனையில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலை என்ன?எம்.துரைராஜ்/ சென்னை.

ராம்குமார் - கொலை முதல் 'தற்கொலை' வரை...


ராம்குமார்  மரணம் தற்கொலையா?கொலையா? என்ற விவாதம்  பரபரப்பாக பேசப்படுகிறது.  அரசியல் தலைவர்கள் உட்பட  எல்லோருமே போலீஸ் ராம்குமாரை கொன்றுவிட்டதாகதான் நம்புகிறார்கள். இதற்கு காரணம் தமிழக காவல் நிலையங்களில் லாகப் மரணங்கள் அடிக்கடி நிகழகூடிய சம்பவமாகும். விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவர்கள் கூட சந்தேக மரணம் அடைந்திருக்கிறார்கள். காவல் நிலையம் சென்று திரும்பிய பலர் அவமானத்தாலும்,பயத்தாலும் தற்கொலை செய்து கொண்ட செய்திகளும் உண்டு.
      இவ்வளவு ஏன் தமிழத்தை பொருத்தவரை காவல்நிலையம் செல்வதையே அவமானமாக கருத்துகிற சுழ்நிலை தான் அதிகம்.  அங்கும் அப்படித்தான் நடத்துகிறார்கள். பணம் கொடுத்தால் ,அல்லது சமூகத்தில் பெரிய மனிதர்கள்,பணம் உள்ளவர்களை மரியாதையாக நடத்தும் காவல்துறை,சாமானியர்களை அவமானப்படுத்தி ,மிரட்டி அனுப்புகிறது என்பது உண்மை தான்.

குழந்தைகளின் சித்ரவதைக்கூடம் ஈஷா மையம்

கடவுள நம்பலாம்... நான் தான் கடவுள்ன்னு சொல்றவன நம்பக்கூடாது...
             வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் பேசும் வசனம் இது.
எத்தனதடவ பட்டாலும் ஜனங்க திருந்தமாட்டங்கபோல. எத்தனையோ சாமியார்கள்  பிடிபட்டு,பெண்கற்பழிப்பு, பணம் பதுக்கல், இப்படி எதெல்லாம் தப்பான காரியமோ அதெல்லாம் பண்றவங்கதான் இந்த சாமியாருங்க. ஒவ்வொரு சாமியாரும் விதவிதமா எமாத்துற ஆளுங்க.    ஈஷா  மையம் யோகா கத்துகொடுத்தல் மூலமா எமாத்துற டைப்.  கடைசியா வந்த சிவராத்திரிக்கு  அந்த சாமியார் போட்ட ஆட்டம் இருக்கே ,குடிகாரன் போட்ட ஆட்டத்தை விட கோவலம்....(வீடியோ இணைத்துள்ளேன்) ஈஷா மையத்தை பற்றி ஒருத்தர் புகார் கொடுத்தவுடன் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து புகார்கள் வர தொடங்கியுள்ளன. அதில் சில....

கோடீஸ்வரர்களின் சட்டமன்றம்

6 -வது முறையாக ஜெயலலிதா கோலகலமாக பதிவியேற்றுவிட்டார்.  பதவியேற்பு விழா பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியது.மு.க. ஸ்டாலின் பங்கேற்றது  பரபரப்பாக பேசப்பட்டது.ஜெயலலிதா பதிவியேற்றார் என்பதை விட ஸ்டாலின் வருகை முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தான் வரும் பாதையில் கட்டவுட்களை வைக்க ஜெய தடைவிதித்துவிட்டராம். மேலோட்டமாக பார்ப்பதற்கு நிறைய மாற்றங்கள் தெரிந்தாலும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் சரி, அமைச்சர்களாக இருப்பவர்களும் கோடீஸ்வரர்கள் பெரும் கோடீஸ்வரர்கள்.
  சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில், 170 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். சராசரியாக, இந்த கோடீஸ்வர உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், 8.21 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் உள்ளது தெரியவந்துள்ளது.100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் உடைய 3 உறுப்பினர்களில், முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவும் இடம் பெற்றுள்ளார்.தேர்தலின் போது வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த, ஜனநாயக சீர்திருத்த சங்கமும், ‘தமிழ்நாடு எலக்ஷன் வாட்ச்’ அமைப்பும் புதிய எம்எல்ஏக்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளன.

சீமான் கட்சியை கலைப்பாரா?????

தேர்தல் முடிஞ்சு போச்சு. திரும்பவும் புரட்சித்தலைவி தங்த்தாரகை ஆட்சிதான்.என்ன  ஒரு சந்தோசம்னா வலுவான எதிர்கட்சியாக திமுக  வந்திருக்கு. அதிமுக கட்சியாளுங்க ஆட்டம் போட முடியாது. கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க...
          எல்லாம் முடிஞ்சு போனாலும் தேர்தலுக்கு பிறகு சீமான் செய்ய வேண்டி முக்கியமான  வேலை பாக்கி இருக்கு. அது அவரோட கட்சியை கலைக்கிறது .நான் சொல்லப்பா... அவரே சொன்னத்து தான்.எது கட்சியை கலைக்கனும் சொல்றேன் கேளுங்க.....

  மே 19 அன்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அப்போது தந்தி டி.வி.யில் ‘சவாலில் வெற்றிபெற்ற சீமான்’என்ற தலைப்பில் , பேராசிரியர் அருணனுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே ஏற்கெனவே நடந்த விவாத படக்காட்சியை ஒளிபரப்பினர். அதில் பேசிய சீமான், ‘சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்கவில்லையென்றால் நாம் தமிழர் கட்சியைகலைத்துவிடுகிறேன்‘ என்று கூறியிருந்தார்.இந்த படக்காட்சியை தந்தி டி.வி.யில் ஒளிபரப்பி, மக்கள் நலக்கூட்டணியைவிட நாம் தமிழர் கட்சி அதிக ஓட்டுகளை வாங்கிவிட்டதாகவும், சீமான் தான்விடுத்த சவாலில் வெற்றி பெற்று விட்டதாகவும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டது. நாம் தமிழர் கட்சி அதிக ஓட்டுகள் வாங்கியதாக தந்தி டி.வி.எப்படி கணக்கிட்டது என்று தெரியவில்லை.

இவர்களில் யாருக்கு ஓட்டுப்போட????

ஒருவழியாக தேர்தல் நெருங்கிவிட்டது. அன்பார்ந்த வாக்காள  பெருமக்களே என்ற வார்த்தைகளை கேட்டுகேட்டு அலுப்போய்விட்டது. தமிழகத்தில் 6 முனை போட்டி என்கிறார்கள் சிலர், உண்ணையில் 24 முனை போட்டியாம்!!!!!. மக்களுக்கு சேவை செய்ய நான்,நீ ன்னு போட்டி போட்டு நீக்கிறார்கள்?????
        சரி நமக்கு சேவை செய்யறவங்கள யாரை தேர்வு பண்ணலாம் அப்படின்னு பார்த்த? கோடிஸ்வரர்களும்,கிருமில்களும் தான் போட்டி போடுறாங்க அப்படின்னு சொல்லாறங்க. இருக்குறது நல்லவங்களா பாத்து ஓட்டு போடலாம் அப்படின்னு பாத்தா எல்லாருமே இப்படியா? வேட்பாளர்களை பத்தி ஆய்வு பண்ணுன தனியார் தொண்டு நிறுவன அமைப்போட அறிக்கை படித்துபாருங்களேன்...
         தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். 283 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘அசோசியேஷன் ஆப் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ்’ (ஏடிஆர்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களின் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் குறித்து ஏடிஆர் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

திண்டிவனத்து ஒபாமாவின் சொத்து எவ்வளவு?

யார் அந்த திண்டிவனத்து ஒபாமா?தேர்தல் நேரத்துல ஏன் இப்படி குழப்புறீங்க என்று கேள்வி கேட்கிறது.சிலருக்கு

தெரிந்திருக்கலாம், தெரியாதவர்களுக்கு சில தகவல்.மற்ற அரசியல் வாதிகளை  போல வேட்டி சட்டை இல்லாமல்,இன் செய்யப்பட்ட சட்டை, நடந்த கொண்டேஒபாமாவை நினைவுபடுத்தும் அழகு,முகத்துக்கு முன்னால் மைக் வைக்காமல் காதில் பொருத்தபட்ட மைக்கில் பேசியபடியே அவர் நடக்கும் அழுகு,,,அழகே,,,, அழகு. யார் என தெரியலவில்லையா?நம்ம அன்புமணி ராம்தாஸ் தான். முதல்வர் வேட்பாளராக வேட்பு மனு செய்துவிட்டார்.அவரது சொத்து கணக்கை பார்த்தால் தமிழ்நாட்டிலேயே மிக ஏழை வேட்பாளராக இவர் தான்.மேலும் முன்னாள் முதல்வர்களின் சொத்துக்கணக்கும்(குவிப்பு தனி கணக்கு)