குழந்தைகளின் சித்ரவதைக்கூடம் ஈஷா மையம்

கடவுள நம்பலாம்... நான் தான் கடவுள்ன்னு சொல்றவன நம்பக்கூடாது...
             வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல் பேசும் வசனம் இது.
எத்தனதடவ பட்டாலும் ஜனங்க திருந்தமாட்டங்கபோல. எத்தனையோ சாமியார்கள்  பிடிபட்டு,பெண்கற்பழிப்பு, பணம் பதுக்கல், இப்படி எதெல்லாம் தப்பான காரியமோ அதெல்லாம் பண்றவங்கதான் இந்த சாமியாருங்க. ஒவ்வொரு சாமியாரும் விதவிதமா எமாத்துற ஆளுங்க.    ஈஷா  மையம் யோகா கத்துகொடுத்தல் மூலமா எமாத்துற டைப்.  கடைசியா வந்த சிவராத்திரிக்கு  அந்த சாமியார் போட்ட ஆட்டம் இருக்கே ,குடிகாரன் போட்ட ஆட்டத்தை விட கோவலம்....(வீடியோ இணைத்துள்ளேன்) ஈஷா மையத்தை பற்றி ஒருத்தர் புகார் கொடுத்தவுடன் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து புகார்கள் வர தொடங்கியுள்ளன. அதில் சில....


குழந்தைகளின் சிறுசிறு குறும்புகளுக்குக்கூட சேவா என்கிற பெயரில் அதிகபட்ச தண்டனை வழங்கி குழந்தைகளை மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் ஈஷாமையத்தின் பிடியில் இருந்து இருமகன்களை மீட்டு வந்ததாக உளவுத்துறையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற காவலர் ஒருவர்பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
வேளாண்மை பல்கலைக்  ழகத்தில்பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் தனது இருமகள்களை கட்டாயப்படுத்தி மொட்டையடித்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ளவர்களுக்கு போதை வஸ்துகள் உட்கொள்ளவைப்பதும், மூளைச்சலவை செய்து சொத்துக்களை எழுதி வாங்குவதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டி உடனடியாக தனது மகள்களை மீட்டுத்தரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.


இதனைத்தொடர்ந்து ஈசா யோகா மையத்தில் அத்துமீறல்கள் நடப்பது உண்மைதான் என அந்நிறுவனத்தில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விலகி வந்த நிர்வாகி ஒருவர்பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மதுரை திருப்பாலையம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் ஞாயிறன்று (ஆக.7) அன்று ஈஷா யோகா மையம் குழந்தைகளின் சித்ரவதைக்கூடமாக செயல்படுவதாகவும், அதிலிருந்து தனதுமகன்களை மீட்டு வந்துவிட்டதாகவும், மற்றப் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு மதுரையில் இருந்து தனது பிள்ளைகளையும் அழைத்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், அவர் கூறுகையில், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் ஈஷா யோகா மையம் குறித்தும், அங்குள்ள சமஸ்கிருத குருகுல பள்ளிகளின் சிறப்புகள் குறித்தும் தொடர்ச்சியாக வந்த செய்திகளால் எனது பிள்ளைகளை அங்கு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. இதனையடுத்து எனது மூத்த மகனை ஐந்து லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஈஷாயோகா மையத்தில் செலுத்தி 2012 ஆம் ஆண்டுசமஸ்கிருத பள்ளியில் சேர்த்தோம்.

இதனையடுத்து 2014 ல் எனது இளையமகனை ஏழு லட்சரூபாய் செலுத்தி அவனையும் சேர்த்தோம். இந்நிலையில் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஈஷா யோகா மையத்தில் இருந்துஎனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதில் உங்கள் மகனின் நடவடிக்கை சரியில்லை அதிக கோபம் வருகிறது, படிப்பு ஏறவில்லைஉடனடியாக மருத்துவரிடம் கூட்டிச்செல்லுங்கள் என்றனர். எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.இதனையடுத்து கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றபோது, குழந்தைகள் மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் தரவேண்டும் என்றனர். ஒரு மாதத்திற்கு பிறகு எனது மகனுக்கு கவுன்சிலிங் கொடுத்த மனநல மருத்துவர் உடனடியாக உங்கள் பிள்ளைகளை ஈஷாமையத்தில் இருந்து கூட்டிச்செல்லுங்கள் என்றார். என்ன காரணம் என மருத்துவரிடம் கேட்டதற்கு ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்.இதனையடுத்து மதுரைக்குச் சென்று இருவரையும் வேறு பள்ளியில் சேர்த்துவிட்டேன். சிறிது நாட்கள் கழித்தபின் அவர்களாகவே என்னிடம் ஈஷாயோகா மையத்தில் நடைபெற்ற சித்ரவதைகள் குறித்து தெரிவித்தனர். இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் லட்சக்கணக்கில் பணமும் பறித்துக்கொண்டு மகன்களையும் கொடுமைப்படுத்திய செயலை ஏற்கமுடியவில்லை. நான் காவல்துறையில் உளவுப்பிரிவில் பணியாற்றி இருப்பதால் அந்த அனுபவத்தோடு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன். ஈஷாயோகா மையத்தினர் என்னிடம் ஒன்பது லட்சம் ரூபாயை தந்துவிட்டு நடந்தசம்பவங்கள் குறித்து வெளியில் சொல்லக்கூடாது எனக் கடிதம் பெற்று சமரசத்திற்கு வந்தனர். கடந்த பலமாதங்களாக எனக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் எனது பிள்ளைகள் போல் மற்ற பிள்ளைகளும் பாதிக்கக்கூடாது எனப் பலரிடமும் சொல்லி வந்தேன். ஆனால் என்னுடைய பேச்சை யாரும் நம்பவில்லை. தற்போது கடந்த ஒருவாரமாக ஈசாயோகாமையத்தின் முறைகேடுகள் வெளிவந்துகொண்டிருக்கிற செய்திகள் எனக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. ஆகவே, எனது குழந்தைகள் அனுபவித்த வேதனையையும் பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த குழந்தைகளும் அப்படியான வேதனை அனுபவிக்கக்கூடாது என்கிற நிலையில் இருந்தே மதுரையில் இருந்து சொந்த செலவில் கோவைக்கு வந்துள்ளேன் என்றார்.

கடந்த மகா சிவராத்திரிக்கு போட்ட ஆட்டத்தை பாருங்கள்....

                மேலும், குழந்தைகள் எவ்விதமான தண்டனைகள் அனுபவித்தனர் என்பது குறித்துக் கேட்டபோது, அதை எனது குழந்தைகளிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார். அந்த சிறுவர்கள் கூறுகையில், அங்குநடைபெறும் சிறுசிறு தப்புகளுக்குகூட சேவா என்கிற தண்டனை வழங்கப்படுகிறது. இதில் தண்டனைபெற்ற பிள்ளைகள், மற்ற பிள்ளைகள் என இரண்டாகப் பிரித்து வைக்கப்படுகிறார்கள். தண்டனை பெற்றவர்களுக்கு உப்பில்லாத உணவும், மற்ற பிள்ளைகளுக்கு பலகாரத்தோடு உணவும் பரிமாறப்படுகிறது. மேலும், சேவா தண்டனை பெற்றவர்கள், கழிவறை சுத்தம் செய்ய வைப்பதும், மாட்டுச்சாணி அள்ளவைப்பதும், மையத்தில் உள்ளவர்களின் துணிகளைத் துவைத்துத் தருவதும், வெளிநாட்டவர் தங்கியுள்ள அறைகளை சுத்தம்செய்யவைப்பதும், இதுபோக தினந்தோறும், நூறு தோப்புக்கரணத்தில் இருந்து ஐநூறு தோப்புக்கரணம்வரை கட்டாயம் போட வேண்டும் என்பது போன்ற தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. எனக்கு மட்டுமல்லாமல் ஆறு வயது குழந்தைகளுக்குக்கூட இதுபோன்ற தண்டனை கொடுக்கப்படுகிறது என அச்சிறுவர்கள் தெரிவித்தனர்.


ஈஷாயோகா மைய நிர்வாகிகளிடம் நீங்கள் இதுபோன்ற வேலைசெய்திருக்கிறீர்களா எனக்கேட்டதற்கு மண்சோறு சாப்பிடு என நிர்ப்பந்தம் செய்தனர் என்றனர். இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கவில்லையா எனக் கேட்டதற்கு, கடிதம் மூலமாகஎந்த தகவலும் வீட்டுக்கு அனுப்பமுடியும், ஆனால் நாங்கள் இங்குகொடுக்கும் எந்தக் கடிதமும் பெற்றோர்களுக்குப் போய்ச்சேரவில்லை. அனைத்து கடிதங்களும் தணிக்கை செய்தே அனுப்பப்படுகிறது என்பதை எங்கள் வீட்டிற்குச் சென்றபிறகுதான் தெரியவந்தது. எங்கள் பெற்றோர்கள் வந்து அழைத்து செல்லவில்லை. ஆகவே நாங்கள்தான் தவறு செய்கிறோமோ என்கிற பயத்திலும், லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கட்டி பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். அவர்களின் பணம் வீணாகிவிடக்கூடாது என்கிற அச்சத்திலும் அங்கேயே தங்கி இருந்தோம் என்றனர்.
                 ஈஷாயோகா மையம் ஒரு சித்திரவதை கூடமாகத்தான் இருந்துள்ளது.
சாமிய நம்புங்க...நான்தான் சாமின்னு சொல்லறவன நம்பாதிங்க

தகவல்
தீக்கதீர் நாளிதழ்
தொகுப்பு : செல்வன்

         

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்