பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts
தமிழகம் வரும் மோடிக்கு ஒரு மடல்
பிரதமர் மோடி அவர்களுக்கு.... வணக்கம்.
தங்களுடைய இடையறாத வெளிநாட்டுப் பயணங்களுக்கு இடையில் தமிழகத்தில் கோவை என்று ஒரு ஊர் இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு வருகை தருவதற்கு நன்றி. நீங்கள் தேர்தலின் போது தமிழ் நாட்டிற்கு வந்து திருச்சியில் பேசினீர்கள். அப்போது உரையை துவக்கும் போது ‘வன்கோம்’ என்று செந்தமிழில் செப்பி யதை கேட்டு சுருண்டு விழுந்த தமிழ் இன்னமும் எழுந்திருக்கவே இல்லை. அடுத்து தங்கள் உரையில் வ.உ.சி இதே திருச்சியிலிருந்துதான் வேதாரண்யத்திற்கு உப்புக் காய்ச்ச புறப்பட்டார் என்று குறிப்பிட்டீர்கள் அல்லவா. அப்போதே தெரிந்து விட்டது நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வரலாறை ஒரு வழி செய்யாமல் விடமாட்டீர்கள் என்பது. கோவையில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியை துவக்கி வைக்கப் போவ தாகவும் அதைத் தொடர்ந்து பாஜக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்க போவதாகவும் அறிந்தேன்.

உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் இந்தியாவில் தமிழகம் மட்டுமே!!!!!
உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் தமிழகத்திற்கு 24வது இடத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அளித்துள்ளது. வாஷிங்டன், சிட்னியை பின்னுக்கு தள்ளியதுதமிழகம்!
தமிழகத்தின் கலை திறமை, பண்பாட்டையையும், வீரத்தையும் வட இந்திய ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும் மதிப்பதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரியா மரியாதையை கொடுப்பதில்லை.
காரணம் சமஸ்கிருதம் உயர்ந்தது எனற மனபாண்மை கொண்டவர்கள் வட இந்தியர்கள்.
சென்னை,மதுரை,கோவையில் நிலநடுக்கம் வர வாய்ப்பு???
சென்னையில் அடையாறு அதிக ஆபத்துள்ள பகுதி
கடற்கரையையொட்டி சென்னை நகரம் உள்ளதால் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதுஎன்பது மட்டும் அல்ல; நேபாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், நமது மாநிலம் அதுபோன்ற இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் உள்ளதா என்பதை பரிசீலனை செய்ய ஒருவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.சென்னை மாநகரமும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று கருதப்படும் பகுதியில்தான் உள்ளது.
சென்னை நகரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்தால் கட்டுமான நிறுவனங்கள் வானளாவிய கட்டிடங்களை கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

அரசு வேலை வேண்டுமா?
நீங்கள் அரசு வேலையில் சேர விரும்புகிறீர்களா? மிக மிக எளிதாக அரசு வேலை வாங்கலாம். கால்காசா (காலாணா) இருந்தாலும் கவுர்மெண்ட் காசா இருக்கணும் என்பது பழமொழி... அதற்கேற்ப டி.என்.பி.சி பரீட்சை எழுதி வேலை வாங்குவதை விட குறுக்குவழியில் வேலைவாங்கலாம்.குமாஸ்தா வேலைக்கு ரூ.18 லட்சம்.பள்ளி ஆசிரியர் என்றால் ரூ. 20 லட்சத்திற்கு மேல்,கல்லூரி ஆசிரியர் என்றால் ரூ.40லட்சம் . வேலையில் இட மாற்றத்திற்கு ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வாங்கப்படுகிறது உங்களுக்கு எந்த வேலைக்குவிரும்பமோ சம்பந்தபட்டவரை அணுகி வாங்கலாம்...
சொத்துக்குவிப்பு வழக்கும் முதல்வர்களும்...
18 ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு (முன்னாள்)முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்துள்ளது.இது ஜெயலலிதா சந்திக்கும் 2 வது பெரிய வழக்கு எற்கனவே டான்சி ஊழல் வழக்கை சந்தித்து சிறை சென்றவர்.அப்போது தர்மபுரியில் கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்தை அதிமுக தொண்டர்கள் எரித்து 3 மாணவிகள் பலியானார்கள்.அதற்காக அவர்களுக்கு தூக்குதண்டனை தீர்ப்பும் கிடைத்தது.டான்சி வழக்கில் சிறை சென்ற போது 6 மாதகாலம் ஓ.பன்னீர்ச்செல்வம் முதல்வராக இருந்தார்.
எட்டு மாதங்களில் 45 கொலைகள்
திண்டுக்கல் என்றால், பூட்டு, பிரியாணி என்ற நிலைமாறி தற்போது கொலை, கொள்ளைக்கு பெயர்பெற்ற நகரமாகி விட்டது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 45 கொலைகள் நடந்துள்ளன.
ஜனவரி மாதத்தில் 2 பேர், பிப்ரவரியில் 5 பேர், மார்ச்- 5 பேர், ஏப்ரல்- 6 பேர், மே மாதம் 7 பேர், ஜூன் -6 பேர், ஜூலை- 6 பேர், ஆகஸ்ட் - 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வேட்டி கட்டி காந்தியே வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.....
தமிழர் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் தனியார் கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும், அதற்கான சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.மிக மகிழ்ச்சிகுறிய செய்தி. கூடுதலாக பத்திரிக்கையாளர் மயிலைபாலு எழுதிய வேட்டி மீது வெறுப்பு ஏன்? ......
சென்னையில் சில கிளப்கள் இருக்கின்றன. இவை நாடு விடுதலை அடைவதற்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவை. கிளப் என்றால் மனமகிழ்மன்றம்.
சென்னையில் சில கிளப்கள் இருக்கின்றன. இவை நாடு விடுதலை அடைவதற்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவை. கிளப் என்றால் மனமகிழ்மன்றம்.
‘தமிழ், குஜராத்தி, வங்காளி மொழிகளின் கலவையே இந்தி’
யுவாங்சுவாங் பாதையில்.... சீனர்கள் நடத்தும் தமிழ் இணையதளம்
சீனா என்றதும் நமக்கு சில படிமங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது... சீனா அத்துமீறல், இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனா ராணுவம், சீனாவில் ஜனநாயகம் இல்லை, கருத்து சுகந்திரம் இல்லை .... இது போன்ற தகவல்கள் நமக்கு கற்பிக்கபட்டு சீனா என்பது ஒரு விரோதி நாடாக,ஜனநாயக மற்ற நாடாகவே பார்க்கப்படுகிறது. இவை ஊடகங்களால் கற்பிக்கபடும் தவறான தகவல்களே...
தமிழகத்திற்கும் சீனாவிற்குமான தொடர்பு நாம் அறிந்ததே... கி. பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனநாட்டு யுவாங்சுவாங் தமிழகப் பௌத்தம் பற்றிய பல குறிப்புகளைத் தருகிறார். சீனாவுக்கும் தமிழ்ப் பகுதிக்கும் பௌத்தம் தொடர்பாக ஆழமான உறவிருந்தது. அதைப் பற்றிச் சீனா, திபெத் பௌத்த நூல்கள் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.நடிகர் சூர்யா நடித்த 7ம் அறிவு திரைப்படம் சீனாவில் கடவுளாக போற்றப்படும் போதிதர்மரை தமிழர் என்கிறது.
மூளையிருப்பவர்கள் விளையாட வேண்டிய விளையாட்டு....
உடல் பலம் தேவையில்லை,பேட், பால்,ஸ்டெம் குச்சி, பெரிய அளவிலான இடம் தேவையில்லை... ஆனா கொஞ்சம் மூளையை பயன்படுத்தி விளையாடவேண்டிய விளையாட்டு. இந்தியாவை சுத்தியிருக்கிற எல்லா நாடுகளையும் விளையாடுறாங்க... குறிப்பா தமிழ்நாட்ல வயதான பெரிசுங்க, ஆலமரத்தடி,அரசமரத்தடியிலும் விளையாடுறாங்க ... தமிழர்களால் மறக்கப்படும் நிறைய விசயங்கள் இந்த விளையாட்டும் ஒன்று...அது ஆடு புலியாட்டம்...
சங்கப்பாடல்களில் வங்கா வரிப் பாறை என்றும், வங்காளத்தில் பாக பண்டி என்றும், நேபாளியில் பாக்சால் என்றும், பஞ்சாபில் ஷிர் பகர் என்றும், மலேசியாவில் மெயின் தபல் எம்பத் என்றும் அழைக்கப்படும் ஆடுபுலி ஆட்டம் இந்தியாவின் பாரம்பரிய விளை யாட்டாகும்.
மாணவர்களே ராஜபக்சேவுக்கு எதிரான உண்ணாவிரத்தை உடனே நிறுத்துங்கள் ...
ராஜபக்சேவுக்கு எதிரா நம்மால ஓன்னும் பண்ணு முடியாது?. உண்ணாவிரதம் இருக்குறது வெட்டிவேலை... நல்ல படிச்சமா? நல்ல மார்க் வாங்குனமா, அமெரிக்கா,ஆஸ்திரேலியான்னு போய் டாலர்ல சம்பாதிச்சமான்னு இல்லாம, இதெல்லம் தேவையா? மன்மோகன்சிங், நம்ம சிதம்பரமோ வந்து பழரசம் கொடுத்து, உங்க கோரிக்கையை எத்துக்க போறாங்களா? மாணவர்களே படிக்க வேண்டாம் டாஸ்மாக் போங்க நல்ல குவாட்டர் அடிங்க லைப் என்ஜாய் பண்ணுங்க, தமிழ்நாடு முழுக்க தடுக்கி விழுந்தா டாஸ்மாக் இருக்கே....
கூடங்குளம் அனு(ணு)மதிப்போம்
அணு ஓர் பார்வை....
அணுவை குறிக்கும் "ஆட்டம்" என்ற ஆங்கிலச்சொல் பிரிக்கமுடியாது என்ற கிரேக்க மொழி சொல்லிலிருந்து வந்தது.முதலில் அணுகொள்கை வெளியிட்ட டால்டன் அணுவை பிரிக்க முடியாது என கூறினார். ஆனால் 19ம் நூற்றாண்டின் இறுதியில் உப அணுதுகள்களான எலக்ட்ரான்,புரோட்டான் மற்றும் நீயூட்ரான் ஆகியவற்றைஅறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தனர்.1905 ல் ஐன்ஸ்டின் தனது சமன்பாட்டு தத்துவம் முலம் அணுசக்தி ரகசியத்தை கூறினார்.ஆனால் அப்பொழுது அது உணரப்படவில்லை.1930க்கு பிறகு லிசே மெய்ட்னர் என்ற பெண் இயற்பியலாளர் யுரேனியத்தின் அணுமையம் பிளவுபட்டு போரியம்,கிரிப்டான் அணுக்களாக மாறுவதையும் உதிரி நீயூட்ரான் வெளிபடுவதையும் இவற்றோடு மிக பெரிய சக்தி வெளியாவதையும் கண்டுபிடித்தார்.
Subscribe to:
Posts (Atom)
📚 தொடர்புடைய பதிவுகள்
அறிவியல்
View all
ஏற்றப்படுகிறது...
ஏற்றப்படுகிறது...
நிறைவுற்ற தொடர் • COMPLETE SERIES
எல்லோருக்குமான AI
செயற்கை நுண்ணறிவை எளிய தமிழில் • அ. தமிழ்ச்செல்வன்
4 கட்டுரைகள் | கீற்றில் வெளிவந்த தொடர்
01
AI-யை நான் ஏன் நண்பா என்று அழைக்கிறேன்
AI-யுடன் நட்பு கொள்வது ஏன் அவசியம்?
02
நம்முடனே இருக்கும் AI
நாள்தோறும் நாம் பயன்படுத்தும் AI
03
AI: வரலாறும் அதன் நம்பகத் தன்மையும்
AI-யின் பயணம் 1950-ல் இருந்து இன்று வரை
புதியது ✨
04
நானும் எனது மனித நண்பனும் – ஒரு செயற்கை நுண்ணறிவின் குறிப்பேடு
AI-யின் குரலில் - மனிதனும் AI-யும் கூட்டுப் படைப்பு
📚 இந்த தொடர் புத்தகமாக விரைவில் • அ. தமிழ்ச்செல்வன்