ரஜினியுன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்...

மை நேம்ஸ் பில்லா...,வாழ்க்கை எல்லா.... விசில் சத்தமும்,கிழித்தெரியப்பட்ட காகித துண்டுகளுக்கிடையே தலைவர் பாடிக்கொண்டிருந்தார். பில்லா படம் பார்க்க எங்கள் ஊர் மீனாட்சி திரையரங்கில் சட்டை கிழிய,வியர்வையில் நனைந்து டிக்கெட் எடுத்தேன்.
           நான் உட்பட பல கோடி தமிழர்களை ரசிகர்களாக ரஜினி பெற்றமைக்கு என்ன காரணமாக இருக்கும். மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னதைப்போல "ரஜினியின் நிறமும்,தோற்றும் திராவிட தன்மைகொண்டது.அதுவே அடிப்படை காரணமாக இருக்கலாம்" என்றார்.              ரஜினி மிக நுட்பமாக வியாபாரம் தெரிந்த நடிகர்.தனக்கும்,தன்னை வைத்து படம் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் நஷ்டம் எற்பாடமல் பார்த்துக்கொள்வார்.வினியோகஸ்தர்கள்,தியோட்டர்காரர்களையோ ,ரசிகர்களை பற்றியோ கவலைப்படமாட்டர். இதற்கு சமீபத்திய படமான கபாலி மிகச்சிறந்த ஊதாரணம்.கபாலி டிக்கெட்கள்  விலை குறிப்பிடபடமலேயே விற்கப்பட்டன. என்ன விலை வேண்டுமானலும் விற்றுக்கொள்ளலாம். அது உன் சாமர்த்தியம். அதற்கு நான் பொறுப்பல்ல என ஒதுங்கிக் கொண்டார் ரஜினி.
               கடந்த மாதத்தில்  ரசிகர் சந்திப்பு மற்றும் புகைப்படம் எடுத்து கொள்ளுதல் நிகழ்ச்சியை கூட அப்பட்டமான வியாபாரமாக மாற்றினார். புகைப்படம் எடுத்தக்கொள்ள வழங்கப்பட்ட டோக்கன் அதிக விலைக்கு விறக்கப்பட்டிருக்கிறது.அப்படியும் "போருக்கு தயாராக  இருங்கள் என்ற அரசியல் பிரவேச ஆசையை நிறைவேற்ற ரசிகர்கள் சந்தோசமாக வரவேற்கிறார்கள். மதுரையில்      மகாபாரதத்தில் வரும் குருச்சேத்திர  போர் காட்சியில் கிருஷ்ணரின் முகத்திற்கு பதிலாக ரஜினியின் முகத்தை இணைத்து "தர்மத்தின் தலைவா "போருக்கு தயாராக இருக்கிறோம்...வா. என்ற சுவரொட்டிகள் வரவேற்கின்றன.

ரஜினிகாந்தின் அரசியல் பார்வை...
1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ,- த.மா.க வுக்கு  ஆதரவாக ''மீண்டும் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாத்த முடியாது'' என்ற வசனம் தான் அவரது முதல் அரசியல் கருத்து. அந்த தேர்தலில் ஜெயலலிதா தோற்றுப்போனார், ரஜினி வாய்ஸ் கொடுக்காவிட்டாலும் அன்றைய சூழ்நிலைக்கு ஜெயலலிதா தோற்றிருப்பார்,அன்றைய அரசியல் சூழல் அப்படி.
     படையப்பா,மன்னன்,எஜமான்.....என அடுத்தடுத்து வந்த  படங்களில் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி எதிப்பார்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் பட வியாபாரத்தை அதிபடுத்திக்கொண்டார்
 1996 க்கு பிறகு வந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார், அவருக்கு நடிகர்கள் நடத்திய விழாவில் ரஜினிகாந்த், ஜெயலலிதாவை தைரியலட்சுமி,அஷ்டலட்சுமி என்று புகழ்ந்து பல்டி அடித்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றிக்கு வாழ்த்து அனுப்பினார் . அவரின் அரசில் நிலைபாடு தலைகீழாக மாறியது ஏன்? இதுவரை அவர் அரசியலுக்கும் வரவில்லை,தனது ரசிகர்களுக்கு வழிகாட்டியாகவும் இல்லை.ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சிஸ்டம் சரியில்லை, போருக்கு தயாராக இருங்கள் என்று சொன்ன அதே மேடையில் "நான் அரசியலுக்கு வருவதை  ஆண்டவன் தான் முடிவு செய்யவேண்டும்" ... என  மீண்டும் முதலிலிருந்து அரம்பித்துள்ளார்.


ரஜினி -25ம் வியாபார நோக்கமும்...
 ரஜினிக்கும்  என்னை போன்ற அவரது ரசிகர்களுக்கும் விரிசல் விழத்தொடங்கிய புள்ளி என்றால் அது ரஜினி 25 விழா நிகழ்வுதான்.ரஜினி சினிமாவிற்கு வந்த 25 ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வு குறித்து அப்போதைய பத்திரிக்கை செய்திகள் சில...

 பாராட்டுவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்தவும் பூச்செண்டு கொடுக்கவும் தயார்.ஆனால் அவருக்கு பூக்களை தூவி ஆன்மீக குரு போல் நடத்த எங்களால் முடியாது என்கிறார்கள் திரைப்பட நடிகைகள் -  தினமலர்

ரஜினி எங்களிடமிருந்து தனிமைப்பட்டு விட்டார் என்கிறார்கள் சினிமாக்காரர்கள் - ஜூனியர்விகடன்

ரஜினி விழாவா? லதாவிழாவா? விழாவை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் சினிமா அளவுக்கு பணம் சம்பாதிக்க நினைப்பது வேதனை - ஜூனியர்விகடன்

ரஜினி விழாவில் ரசிகர்கள் உட்காரவே இடம் கிடையாதாம்.ஆனா டிக்கெட் ரூ.100 கொடுத்து வாங்கனுமாம் -  நக்கீரன்

மிக உயர்ந்த அளவுக்கு எளிமையானவர்னு பேசப்பட்ட அவர் தீடிர்ரென இப்படி ஒரு விழாவுக்கு எப்படி சம்மதிச்சாருன்னு தெரியல - இந்தியன் எக்ஸ்பிரஸ்

ரஜினி 25 விழாவின் வசூல்கள்

ரஜினி பொம்மை மட்டும் வைத்திருந்த ரஜினி 25 கண்காட்சியை முழுவதும் ஒன்று விடாமல் பார்க்க ஒருவருக்கு மட்டும் ஆகும் செலவு 2213 ரூபாய், அபிராமி தியோட்டரில் போடப்பட்ட 15 ரஜினி திரைப்படங்களை பார்க்க ஒரு ரசிகனிடம் ரூ100 வசூல் இன்னும் பல....

ரஜினி 25 விழாவை ரஜினியின் துணைவியார் லதாரஜினிகாந்த் தன்னுடைய ஆஸ்ரம் பள்ளியின் வளர்ச்சிக்காக இந்த விழாவை நடத்துவதாக கூறியிருக்கிறார் இப்படி வசூலித்துதான் பள்ளி நடத்த வேண்டுமா? ரஜினியிடம் கூறி ஒரு படத்தின் முதல் நாள் வசூலைப் பெற்றாலே போதுமே.இது போன்ற நிகழ்வுகளால் ரஜினிகாந்தின்  ரசிகர்கள் கொஞ்சம்,கொஞ்சமாக ரஜினிமன்றங்களில் இருந்து விலகத்தொடங்கினர்.

ரஜினி தமிழக ரசிகர்களுக்காக  2 -வாக்குறுதிகளை கொடுத்தார். 1.நதிநீர் இணைப்புக்கு 1 கோடி கொடுப்பேன். 2.சமீபத்தில் உடல்நிலை மோசமடைந்து தேறியபிறகு இலவச மருத்துவமனை கட்டித்தருவேன் என்றார். இரண்டுமே என்ன ஆனாது. இப்படி வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் தகுதி போதும் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு.ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொள்ளும் துவக்க விழாவில் "தமிழர்கள் சில விஷயங்கள் ஈசியா க ஏமாந்து விடுவார்கள்" என பேசினார் ரஜினி.அது இது தான் போலும்.
                    இப்படி ரஜினியை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனாலும் நான் சினிமா ரசிகனாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பகிறேன்...
.- அ.தமிழ்ச்செல்வன்


Comments

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தங்களது வலைப்பதிவை நாம் அவதானித்துள்ளோம். தொடர்ந்து எழுதுங்கள். எமது வலைத்திரட்டியுடனும் இணைந்திருங்கள். விரைவில் தங்கள் தளமும் எமது திரட்டியில் இணைக்கப்படும்.

அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
நன்றி நண்பரே.. என்து தளத்தை இணைக்க நான் என்ன செய்ய வேண்டும். எனது வலைத்தளத்தில் விளம்பரம் தோன்ற ஏற்பாடு செய்து தர உங்கள் உதவு கோட்டுள்ளேன் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.