இந்திய தேசியக் கொடியைஅவமதித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் தேசத் தந்தை காந்தியடிகளையும் இழிவுபடுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் உலகின் பல்வேறுநாடுகளிலும் இணைய வழி வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிறுவனம் இந்திய தேசியக் கொடி படம் பொறித்த மிதியடியை கனடா விற்பனையகத்தில் விற்பனை செய்து வந்தது. தனது விற்பனை பட்டியலில் அதுகுறித்த விளம்பரமும் செய்திருந்தது. இந்த நிறுவனத்தின் நடவடிக்கைக்கு இந்தியர்கள் மத்தியில் கடும்எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் டுவிட்டர் பக்கத்திற்கு ஏராளமான இந்தியர்கள் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்திய தேசியக்கொடி பதித்த மிதியடியை விற்பனை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த செயலுக்கு அமேசான் நிறுவனம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும்இல்லையேல் அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இநதியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார்.