22 ஜூன், 2017

இந்துத்துவாவுக்கு ஏதிராக தீவிரமாக செயல்பட வேண்டிய காலமிது - சு.வெங்கடேசன்


தமிழகத்தில் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் புவிப் பரப்பெங்கும் தமிழர் உரிமை மாநாடு அதிர்வை உருவாக்கும். ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு பிறகு நிகழும் அடுத்த பண்பாட்டு பாதுகாப்பு நகர்வு இது!

15 ஜூன், 2017

முலையறுத்தான் சந்தை...

கவிச்சியான தலைப்பாக தெரிகிறதே... கட்டுரையும் கவிச்சி,அவமானம்,போராட்டம் நிறைந்ததுதான்.
        கடந்த மார்ச் -8 சர்வதேச மகளிர் தினத்திற்காக இலக்கிய அமைப்பிற்காக மிக சுருக்கமாக பேச அழைத்தார்கள். புதிதாக எதாவது தகவல் கிடைக்குமா நூலகம்,இணைத்தில் தேடியதில் பெண்கள் முலைகளை அறுத்து எறிந்து போராட்டம் நடைத்திய அவமானமும்,கோபத்தையும் உருவாக்குகிற தகவல் கிடைத்தது.
          நம் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த   வரலாறு. 200 ஆண்டுகளுக்கு முந்தைய நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலோயர்களே "உலகில் வேறு எங்கும் கண்டதில்லை "என மிக கொடூரமான நிகழ்வாக பதிவு செய்திருக்கிற வரலாறு அது.
                      கன்னியாகுமரிக்கு வருகை புரிந்த விவேகானந்தர் "திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம் " என கோபத்தோடு சொல்லியிருக்கிறார்.

30 மே, 2017

பாஜகவைத் துரத்தும் மாடு!

2016-17ம் ஆண்டில் மட்டும் இந்தியா 1.33 மில்லியன் டன் எருமை மாட்டுக் கறியைஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 3.9 பில்லியன் டாலராகும்.மாட்டிறைச்சி திங்கத்தான் தடை ஏற்றுமதி பண்ணலாம். இதுதான்  பாஜக அரசியல்...
கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்ந்து, மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் மோடி அரசின் சட்டம் தங்கள் மாநிலத்தைக் கட்டுப்படுத்தாது என்று கர்நாடகம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களும் அறிவித்துள்ளனர்.மத்திய அரசு தனது சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இறைச்சிக்காக மாடுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய பாஜக அரசுகொண்டு வந்துள்ள சட்டத்திற்கு நாடு முழுவ தும் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...