தேர்தல் முடிஞ்சு போச்சு. திரும்பவும் புரட்சித்தலைவி தங்த்தாரகை ஆட்சிதான்.என்ன ஒரு சந்தோசம்னா வலுவான எதிர்கட்சியாக திமுக வந்திருக்கு. அதிமுக கட்சியாளுங்க ஆட்டம் போட முடியாது. கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க...
எல்லாம் முடிஞ்சு போனாலும் தேர்தலுக்கு பிறகு சீமான் செய்ய வேண்டி முக்கியமான வேலை பாக்கி இருக்கு. அது அவரோட கட்சியை கலைக்கிறது .நான் சொல்லப்பா... அவரே சொன்னத்து தான்.எது கட்சியை கலைக்கனும் சொல்றேன் கேளுங்க.....
மே 19 அன்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அப்போது தந்தி டி.வி.யில் ‘சவாலில் வெற்றிபெற்ற சீமான்’என்ற தலைப்பில் , பேராசிரியர் அருணனுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே ஏற்கெனவே நடந்த விவாத படக்காட்சியை ஒளிபரப்பினர். அதில் பேசிய சீமான், ‘சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்கவில்லையென்றால் நாம் தமிழர் கட்சியைகலைத்துவிடுகிறேன்‘ என்று கூறியிருந்தார்.இந்த படக்காட்சியை தந்தி டி.வி.யில் ஒளிபரப்பி, மக்கள் நலக்கூட்டணியைவிட நாம் தமிழர் கட்சி அதிக ஓட்டுகளை வாங்கிவிட்டதாகவும், சீமான் தான்விடுத்த சவாலில் வெற்றி பெற்று விட்டதாகவும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டது. நாம் தமிழர் கட்சி அதிக ஓட்டுகள் வாங்கியதாக தந்தி டி.வி.எப்படி கணக்கிட்டது என்று தெரியவில்லை.