கோடீஸ்வரர்களின் சட்டமன்றம்

6 -வது முறையாக ஜெயலலிதா கோலகலமாக பதிவியேற்றுவிட்டார்.  பதவியேற்பு விழா பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியது.மு.க. ஸ்டாலின் பங்கேற்றது  பரபரப்பாக பேசப்பட்டது.ஜெயலலிதா பதிவியேற்றார் என்பதை விட ஸ்டாலின் வருகை முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தான் வரும் பாதையில் கட்டவுட்களை வைக்க ஜெய தடைவிதித்துவிட்டராம். மேலோட்டமாக பார்ப்பதற்கு நிறைய மாற்றங்கள் தெரிந்தாலும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் சரி, அமைச்சர்களாக இருப்பவர்களும் கோடீஸ்வரர்கள் பெரும் கோடீஸ்வரர்கள்.
  சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில், 170 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். சராசரியாக, இந்த கோடீஸ்வர உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், 8.21 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் உள்ளது தெரியவந்துள்ளது.100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் உடைய 3 உறுப்பினர்களில், முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவும் இடம் பெற்றுள்ளார்.தேர்தலின் போது வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த, ஜனநாயக சீர்திருத்த சங்கமும், ‘தமிழ்நாடு எலக்ஷன் வாட்ச்’ அமைப்பும் புதிய எம்எல்ஏக்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளன.
வெற்றி பெற்றுள்ள 232 பேரில், 223 பேரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதில் 170 பேர் கோடீஸ்வரர்கள். இது, மொத்த உறுப்பினர்களில், 76.2 சதவீதம். கடந்த 2011 நடைபெற்ற பேரவைத் தேர்தலில், 120 கோடீஸ்வர உறுப்பினர்கள் இருந்தனர்; இது, 51 சதவீதம். 14-வது பேரவையை விட, 15-வது பேரவையில், கோடீஸ்வர உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகம். புதிய உறுப்பினர்களில், 36 பேருக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளன.100 கோடிக்கு அதிகமாக சொத்துகள் வைத்திருப்பவர்கள் வரிசையில் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எச். வசந்தகுமார் 337 கோடி ரூபாயுடன் முதலிடம் வகிக்கிறார். இவரைத்தொடர்ந்து திமுக உறுப்பினர் மோகன் 170 கோடி ரூபாயுடன் இரண்டாமிடம் வகிக்கிறார். முதல்வர் ஜெயலலிதா, 113 கோடி ரூபாய் சொத்துகளுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.இந்த, 15-வது சட்டப்பேரவையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், சராசரியாக, 8.21 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இது, 2011-ல், 3.98 கோடி ரூபாயாக இருந்தது.கட்சி வாரியாக, அதிமுக உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு, 4.54 கோடி ரூபாய், திமுக உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு 10.25 கோடி ரூபாய், காங்கிரஸ் உறுப்பினர்களின் சொத்து மதிப்பு 50.18 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.கட்சிகள் வாரியான கோடீஸ்வர எம்எல்ஏக்கள் எண்ணிக்கை:அதிமுக - 90 பேர்; திமுக - 74 பேர்; காங்கிரஸ் - 5 பேர்; முஸ்லிம் லீக் - 1 நபர்.குற்றப் பின்னணி உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை: அதிமுக - 28; திமுக - 42; காங்கிரஸ் - 42.தீவிர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை: திமுக - 23; அதிமுக - 16; காங்கிரஸ் - 3.புதிய பேரவை உறுப்பினர்களில், 32 பேர் வருமான வரி விவரங்களை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
              இவர்கள் எப்படி மக்களை பற்றி கவலைப்படுவார்கள் . மக்களுக்கு நல்லது செய்வார்கள்....
செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Seeni said…
சரிதான்....