செருப்பில் மகாத்மா காந்தி இந்தியாவை அவமதிக்கும் அமேசான்

 
இந்திய தேசியக் கொடியைஅவமதித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் தேசத் தந்தை காந்தியடிகளையும் இழிவுபடுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் உலகின் பல்வேறுநாடுகளிலும் இணைய வழி வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிறுவனம் இந்திய தேசியக் கொடி படம் பொறித்த மிதியடியை கனடா விற்பனையகத்தில் விற்பனை செய்து வந்தது. தனது விற்பனை பட்டியலில் அதுகுறித்த விளம்பரமும் செய்திருந்தது. இந்த நிறுவனத்தின் நடவடிக்கைக்கு இந்தியர்கள் மத்தியில் கடும்எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் டுவிட்டர் பக்கத்திற்கு ஏராளமான இந்தியர்கள் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்திய தேசியக்கொடி பதித்த மிதியடியை விற்பனை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த செயலுக்கு அமேசான் நிறுவனம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும்இல்லையேல் அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இநதியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார்.

மேலும் இது அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப் பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் அமேசான் கனடா விற்பனை தளத்தின்விற்பனைக்கான பட்டியலிலிருந்து இந்திய தேசியக் கொடி பொறித்த கால்மிதியடி நீக்கப்பட்டதாக தி.வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அமேசான் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் உரிமையாளருமான ஜெய்ப்ரி பி பெசோஸ், இந்தியர்களின் உணர்வுகளை இழிவுபடுத்திய இந்த செயலுக்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை.ஆனால் அமேசான் நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான துணைத் தலைவர் அமித் அகர்வால் வருத்தம் தெரிவித் துள்ளதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வரவேற்றிருந்தார். அத்துடன் அமேசான் நிறுவனம் இந்தியர்களை அவமதிக்கும் வகையில் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மிதியடியை விற்பனை செய் யாது என நம்புவதாகவும் கூறியிருந்தார்.

செருப்பில் காந்தியடிகள் படம்






















இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் இணைய வழி விற்பனையில் இந்தியாவின் தேசத் தந்தை காந்தியடிகளின் உருவப் படங்களை காலணிகளில் போட்டுஇழிவுப்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. தனது இணைய வழி விளம்பரத்தில் காந்தியடிகளின் படம் போட்ட காலணிகள் விளம் பரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த காலணியின் விலை ரூ.1190 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனமான அமேசானின் இத்தகைய செயல், ஒட்டுமொத்த இந்தியர்களையும் இழிவுபடுத்தும் செயலாகும். இதற்கு நாடுமுழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இந்தியாவை அவமதித்த அமேசானின் இந்திய வர்த்தகத்திற்கு தடைவிதிக்க மறுத்து வருவது கண்டனத்துக்கு உரியதாகும்.இந்தியாவின் இணையவழி வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தற்போதைய பொங்கல்பண்டிகையை மையப்படுத்திக் கூட பொங்கல் கரும்பு, மஞ்சள்,வாழை இலை, சர்க்கரை, வெல்லம், அரிசி என அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்துள்ளது.
பாரம்பரிய விவசாயிகள் மற்றும் சில்லறை வர்த்தகத்தின் மீதான ‘துல்லியமான’ தாக்குதல்களையும் நடத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்திய மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்திய அமெரிக்க நிறுவனத்தை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேசியவாதம் என்ற பெயரில் பாஜக முன்வைத்த அரசியல் நாடகத்தையும் நாடு முழுவதும் தேசிய கீதத்தை திரையரங்குகளில் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும்என சமீபத்தில் உத்தரவிட்டதையும் பார்க்க முடிந்தது. ஆனால் ஒட்டுமொத்த இந்தியர்களின் உணர்வுகளை இழிவுபடுத்திய அமேசான் நிறுவனத்தின் மீது மத்திய அரசு அதிகாரப்பூர்வமான நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

தொகுப்பு
செல்வன்
தகவல் தீக்கதிர்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments