ஒபாமா தாஜ் மகாலுக்கு போகாதது ஏன்?

கடந்த மூன்று நாட்களாக இந்திய அரசியல்வாதிகளும், இந்திய பணக்காரர்களும் தலைகால் புரியாமல் அலைகிறார்கள். ஒபாமாவின் இந்திய வருகையால் பிஜேபி வகையாரக்கள் புள்ளரித்துபோய் திரிகிறார்கள். அமெரிக்காவுக்குள் மோடிக்கு  நுழைய தடைசெய்யப்படிருந்தது ஒருகாலம். இன்றைக்கு அமெரிக்காவே மோடியை தேடி வந்திருக்கிறது.எல்லாம் அமெரிக்க வியாபாரிகளுக்காகத்தான்.
அமெரிக்கா இந்தியாவில் உருவாக்கும் அணுஉலைகளில் விபத்து ஏற்ப்பட்டால் அமெரிக்கா பொருப்பல்ல என்பது உட்பட இந்தியாவுக்கு ஆபத்தான ஓப்பந்தம் போட்ப்பட்டுள்ளது.

           ஒபாமா டீ குடித்தார். நடந்து போனார். மோடியை பேர் சொல்லி கூப்பிட்டார். கைசைத்தார்.இப்படி ஊடகங்கள்  கடந்த மூன்று தினங்களாக  படங்களை விதவிதமாக வெளியிட்டு வருகின்றன.
             ஒபாமாவின் பயணத்தில் அக்ராவில் உள்ள தாஜ்மகாலும் ஓன்று. ஆனால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  சவுதிஆரோபியா செல்வதால் ரத்து செய்யப்பட்டதாக தகவல். ஆனால் உண்மை வேறு என்கிறார்கள்.  ஊடகங்களும் ஆளுக்கொரு கதை செல்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய வருகையின் பொழுது தாஜ் மகாலுக்கு செல்லவிருந்த பயணத் திட்டம் ரத்தானதற்கு காரணம் உச்ச நீதிமன்றத்தின் ஆணைப் படி தாஜ்மகால் வளாகத்திற்குள் ஜனாதிபதி சிறப்பு பாதுகாப்பு வசதி கொண்ட வாகனங்களை அனுமதிக்க முடியாது என்பதால் அதற்கு அனுமதி மறுத்து உத்தரப்பிரதேச அரசாங்கம் ...
சாதாரண கால்ப் வாகனத்தில் தான் தாஜ் மகாலுக்குள் சென்று சுற்றிப் பார்க்க அனுமதிக்க உச்சநீதிமன்ற அறிவுரை உள்ளது என்றும் வேண்டுமானால் அதை உச்ச நீதிமன்றத்திற்கு சென்று திருத்தம் செய்து ஆணையை கொண்டு வாருங்கள் அனுமதிக்கிறோம் என்றும் கூறிவிட்டதாகவும் , அதற்கு போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்றும் தெரிய வருகிறது...

தில்லியில் இருக்கும் குரங்குகள் முதல் பெருச்சாளிகள் வரை அனைத்தையும் ஒபாமா வருகையை காரணம் காண்பித்து விரட்டிக் கொண்டும் மிரட்டிக் கொண்டும் இருக்கும் மத்திய அரசாங்கத்திற்கு அடிபணியாமல் இருந்த உத்தரப்பிரதேச அரசாங்கத்திற்கு வாழ்த்துகள்”- இது போன்ற செய்திகளும் முகநூல்கள் மற்றும் இணையங்களில்  வலம் வந்தன.
சவூதி அரேபிய மன்னர் மறைவுக்கு செல்வதால் ஆக்ரா பயணம் ரத்து என்பது அதிகாரப்பூர்வ சமாளிப்பு. ஆயினும் இரண்டையும் ஏற்க முடியவில்லை. அரசு விரும்பினால் இந்திய பயணத்தில் சில நிகழ்வுகளை மாற்றி அமைத்து தாஜ்மகாலை பார்வையிடச் செய்திருக்க முடியும் . உலகை வியக்க வைக்கும் அந்த கலைப்பெட்டகத்தை அவரும் கண்டு மகிழ்ந்திருப்பார். உ.பி அரசின் தடையும் உச்சநீதிமன்ற உத்தரவும் கூட காரணமாக இருக்க முடியாது. அரசு விரும்பினால் ஒரு மணி நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் விதிவிலக்கு பெறமுடியும்.

ஏனெனில் நீதிபதிகளின் அமெரிக்க மோகமும் குறைவல்ல. ஆக , உண்மைக்காரணம் இரண்டும் அல்ல. ஆக்ரா நிகழ்ச்சி ரத்தானதால் மோடி மகிழ்ச்சியடைந்தாராம். ஏன் தெரியுமா?
தாஜ்மகாலை ஒபாமா பெருமைப் படுத்துவதையோ புகழ்வதையோ மோடி அரசு - ஆர் எஸ் எஸ் தலைமை விரும்பவில்லை. ஏற்கெனவே அதனை இடிக்க வேண்டும் என்றும் சிவன் கோயில் இருந்த இடமென்றும் காவிக்கூட்டம் மதவெறியோடு பிதற்றி வருகிறது.

ஒபாமா அங்கு சென்றால் தாஜ்மகாலின் சரித்திரப் பெருமை மீண்டும் ஒரு முறை உலக அரங்கில் பேசப்படும். இதனை தடுக்க என்ன செய்வதென்று மோடி தவித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கிடைத்த சின்ன சாக்குகளைக் காட்டி அதனை பார்வையிடாமல் மோடி தடுத்துவிட்டாரோ....

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

All of the new one is the new one more information contained within the other day of this email address so we have any questions are you are not sure if we can be in a few months ago but it is a lot of this message
மதவெறி ஆரம்பித்து விட்டதா...? நல்லவேளை....