"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்" கோட்சேவின் நூல் வெளியீடு.

கோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....  


கடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.


இன்னொருபக்கம் இதுவரை தடை செய்யப் பட்டிருந்த கோட்சே எழுதிய `நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற புத்தகம் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டு தில்லியில் புத்தக கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் கோட்சேவுக்கு சிலை வைக்கப்பட வேண்டும் அதற்காக மத்திய அரசிடம் நிலம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழு வதும் கோட்சேவுக்கு சிலை வைக்கப்படும் என்று இந்து மகாசபை அறிவித்துள்ளது. இந்த நிகழ்வுகளையொட்டி `ஆர்எஸ்எஸ் - ஒரு அறிமுகம்‘ என்ற பெயரில் நூலும் வெளியிடப் பட்டுள்ளது. இந்த நூலின் மூலம் மறைமுகமாக காந்தியின் கொலையை நியாயப்படுத்தவும் செய் துள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்துத் தரப்பு மக்களையும் சாதி- மதங்கள்- வர்க்கங்கள் கடந்து திரட்டிய ஒரு தன்னலமற்ற மனிதர் காந்தியை, குக்கிராமம் தொடங்கி நாடு முழுவதும் தேசப்பிதா என்று கொண்டாடப்படும் காந்தியை சுட்டுப் படுகொலை செய்த மதவெறியன் கோட்சேவை ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்த முயற்சி மேற்கொண்டுள்ளது காவிக் கூட்டம்.

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற நூலில் கோட்டே மதவெறி விஷத்தை கொட்டியிருக்கிறார்...

மிகவும் குறுகிய வக்கிரத்துடன் காந்தியின் அரசியலைப் புரிந்து கொண்டு தனது நூலில் வெளிப்படுத்தி யுள்ளார். “காந்தி இந்து, முஸ்லிம் மக்களை ஒற்றுமைப் படுத்துவது என்ற பெயரில் வரலாற்றுரீதியாக புனிதமான இந்து பூமிக்கு கடுமையான களங்கத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தி விட்டார். இதன் மூலம் நீசர்களாகிய முஸ்லிம்கள் தனி நாடாக பாகிஸ்தான் கேட்கும் அளவுக்கு ஊக்கமளித்து விட்டார். இதை விட இந்து மரபை கொச்சைப்படுத்தும்விதமாக `அகிம்சை’ என்ற பெயரில் இந்துக்களின் ஆண்மையை நீக்கி மலடாக்கி விட்டார். இந்து மக்களுக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவித்து விட்டார்”என்று கோட்சேயின் நூலில் மதவெறி வக்கிரமும் ஆணாதிக்கத்தனமும் வழிந்தோடுகிறது.
கோட்சே ஆர்எஸ்எஸ்சை விட்டு திட்டமிட்டு வெளியேறி, இந்து மகாசபையில் சேருகின்றார். அங்கு காந்தியை கொல்லும் திட்டம் உருவாக்கப்படுகிறது. கடந்த சில காலமாகவே அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஆர்எஸ்எஸ்க்கும் கோட்சேவுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவருகிறார்.சம்பந்தமில்லை என்றால் இவர்கள் ஏன் விளக்க மளிக்க வேண்டும்.எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல வரலாற்றுக் குற்றங்களிலிருந்து தப்பிக்க  பார்க்கிறார்கள்.

1.காந்தி படுகொலை ... ஆவணங்களை எரிக்க பா.ஜ.க. முயற்சி



ஆனால், கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே, தெளிவாக கூறுகிறார்; கோட்சே ஆர்எஸ்எஸ்சை விட்டு வெளியேறியது, காந்தியின் கொலைக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்த வழக்கினால் போலீசாரால் துன்புறுத்தப்படுவார்கள்; அதைத்தவிர்க்கவே ஆர்எஸ்எஸ்சை விட்டு வெளியேறினார். ஆர்எஸ்எஸ்க்கும் அந்த உள்ளார்ந்த புரிதல் இருந்தது.” கோட்சேவுக்கு சிலை வைக்கிற, அவரை ஆராதிக்கிற வக்கிர மதவெறிகள் அடையும் மகிழ்ச்சியின் பின்னணி இதுதான்.
         மோடி அவர்களே நீங்கள் பிரதமரானது இதற்காக தானா??????.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments