மோடியின் 100 நாட்கள்...

திரைப்படங்களுக்குதான் 10வதுநாள், 25 வது நாள்,50வதுநாள்....100நாள் என் போஸ்டர் அடிப்பார்கள். இப்போது
அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சியின் 100 வது நாளை விழாவாக கொண்டாடுகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க. தனது 100 வது நாளை மிக கோலாகலமாக கொண்டாடியது. நாளிதழ்களில் பல கோடிகளுக்கு மக்கள் பணத்தில் விளம்பரங்கள். புதிய திட்டங்கள்அறிவிப்பு. அந்த கட்சி தொண்டர்கள் வெடிவெடித்து ,இனிப்பு வழங்கி கொண்டாடி முடித்துவிட்டார்கள். இப்போது மோடிக்கு 100வது நாள்...

மோடி பிரதமர் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 2014 ல்இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது யாரும் எதிர்பாராத வகையில், ஏன் பா.ஜ.க. வோ அல்லது மோடியோ கூட எதிர்பாராத வகையில் 31.3 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்ற பா.ஜ.க 284 இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 334 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி. 1984க்குப் பின்னர் ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

முதல் கோணல்

மே 26 ல் பதவி ஏற்பு விழாவின் போதேகூட்டணி கட்சி தலைவர்களின் எதிர் பார்ப்பு புஸ்வாணம் ஆகியது. தேர்தல் காலத்திலெல்லாம் இலங்கை அரசுக்கு எதிராக கூட் டணி கட்சி தலைவர்களுக்கு இணையாக பேசிய பா.ஜ.க வின் புதிய பிரதமர் மோடி பிரத மர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு தெற்கு ஆசிய தலைவர்களையெல்லாம் அழைத்த போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேக்கும் அழைப்பு விடுத்தார். தமிழக கூட்டணி தலைவர்களான வைகோ, மோடியைப் பிரதமர் ஆக்காமல் ஓயமாட்டேன் என்று ஓடித் திரிந்த தமிழருவி மணியன் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சி.  எதையும் மோடி கண்டு கொள்ளவில்லை.

கிரிமினல் அமைச்சரவை...

அடுத்து புதிய அமைச்சர்கள் பதவியேற்பு. 23 கேபினட் அமைச்சர்களும், 22 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர். புதிய அமைச்சர்களில் 14 பேர்கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள். தூய்மையான அரசைத் தருவதாக ஓடி, ஓடிபிரச்சாரம் செய்த மோடியின் அமைச்சர வையில் 2 கொலை வழக்கு உட்பட 13 கிரி மினல் வழக்குகளில் பிரதியான உமாபாரதி, மிரட்டல் வழக்கு உட்பட பல வழக்குகளில் பிரதியான நிதின் கட்காரி, லஞ்ச வழக்கில் பிரதியான உபேந்திர குஷ்காவா, கலவரம் உட்பட 4 வழக்குகளில் பிரதியான ராவ் சாகிப் தாதாராவ், பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பிரதியான நிகல் சந்த் உட்பட 14 பேர் கிரிமினல் குற்ற வழக்குகளில் பிரதிகள். எவ்வளவு அப்பழுக்கற்ற அமைச்சர்களைக் கொண்ட ஆட்சி.

மோடி அரசின் 100 நாள் அஜன்டா

முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய மோடி முதல் 100 நாட்களை இலக்காக வைத்து தீவிரமாக செயல்படுமாறு அமைச் சர்களைக் கேட்டுக் கொண்டார். மத்தியில் 10 அம்சக் கொள்கைத் திட்டத்தை உறுதியாக கடைபிடிக்க அறிவுறுத்தினார் என அரசின் செய்திக் குறிப்பு. ஆனால் பதவியேற்ற முதல் நாளிலேயே சர்ச்சைகளுக்குக் குறைவில்லை. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா பதவி யேற்றவுடன் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

இவர் தான் சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பவர். அடுத்து பிரதமர் அலுவலக விவகார இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் காஷ்மீருக்கு சிறப்பு அரசியல் அந்தஸ்து தரும் அரசியல் சட்ட பிரிவு 370 ஐ நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு துவங்கிவிட்டது என்று கூறினார். பொது சிவில் சட்டம் குறித்தும் பேசத் துவங்கினார். மேலும் இந்தியில் சமூக வலைத் தளங்களில் பதிவுக்கான உத்தரவு, சமஸ்கிருத வாரம் அனுஷ்டிப் பது எனத் துவங்கி தற்பொது குரு உற்சவ் வரையிலும் தொடர்கிறது. மோடி அரசின் அஜன்டா .

மக்களுக்கு அல்வா

 பாதுகாப்பு துறையிலும், காப்பீட்டுத் துறையிலும் 49 சதவிகித நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க அறிவிப்பு. இதற்கு ஏன் இவ்வளவு அவசரம். பெருமுதலாளிகளுக்கும், அந்நிய கார்ப்பரேட்டுகளுக் கும் பெரும் லாபத்தை ஈட்டித் தர எவ்வளவு அக்கரை என்ன வேகம்? பட்ஜெட்டில் ரயில் வேத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் அறிவிப்புகள். பொது பட்ஜெட்டில் ஏறி வரும் விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக மறைமுக வரிகள் மூலம் வாக்களித்த மக்கள் தலையில் ரூ. 7052 கோடிக்கான வரிச்சுமை.

ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் அள்ளிக் கொடுத்து ஆதரவளித்த பெருமுதலாளிகளுக்கும், கார்ப் பரேட்டுகளுக்கும் ரூ.22000 கோடிக்கான சலுகை. பொதுத் துறை பங்குகளை ரூ 43,425 கோடி அளவிற்கு விற்பனை செய்ய திட்டம். முதலாளிகளுக்கு ஆதரவாக நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம். தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தம் என 100 நாட்களில் அள்ளிக் கொடுக்கிறார் மோடி. அவர் 100 நாட்களில் பெரும்பாலான நாட்கள் வெளிநாடுகளில். எதற்கு பெருமுதலாளிகளை சிவப்புக் கம்பளம் விரித்து கொள்ளை அடிக்க நேரடி அழைப்பு.

நீதிமன்றங்களிலும் தலையீடு

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்காக ஒடிசாஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார்கோயல், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர்கள் கோபால்சுப்பிரமணியம், ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் பெயரை மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் குஜராத்தில் சொராபுத்தீன் என்கவுண் டர் வழக்கில் கோபால் சுப்பிரமணியம் கொடுத்த அறிக்கை காரணமாக மோடியின் நண்பரும், பா.ஜ.க தலைவருமான அமித்ஷா மீது வழக்கு பதிவு செய்யக் காரணமாக இருந் தார் என்பதால் தமிழகத்தைச் சார்ந்த கோபால் சுப்பிரமணியம் உச்சநீதிமன்ற நீதிபதியாவதை மத்திய அரசு தடுத்து விட்டது. இது தான் இந்தஅரசின் லட்சணம். தற்போது மாநில ஆளுநர்கள் மாற்றத்தில் கூட ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவினர் தான் இடம் பெறுகின்றனர். முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். நபர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

நச்சு மருந்து

தேர்தல் பிரச்சாரத்தின் போதெல்லாம் இனிக்க இனிக்க பேசி மக்களின் துன்ப துயரங்களுக்கு மாற்று வைத்திருக்கும் ஒரே மருத்துவர் தான் தான் என்று பிரச்சார வலம் வந்தவர் மோடி. ஆனால் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தனது வர்க்க குணத்தை வெளிப்படுத்தினார். மக்கள் கசப்பு மருந்து அருந்த தயாராகுமாறு கூறினார். மக்களுக்கு தற்போது அவர் தருவது கசப்பு மருந்தல்ல.  நச்சு மருந்து.

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments