தமிழ் உள்ளிட்ட இதர தேசியமொழிகளுக்கு அநீதி இழைக்கும் மோடி அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது. இந்நிலையில், மோடி அரசும், பாரதிய ஜனதா கட்சியும் இது தொடர்பாக விநோதமான விளக்கங்களை வெளியிடத் துவங்கியுள்ளன.இந்தித்திணிப்புக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாஉள்ளிட்ட தலைவர்களிடமி ருந்து எதிர்ப்புக்குரல் எழுந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக தனது பெயரிலான சமூக வலை தள பக்கத்தில், இந்தியைத் திணிப்பது நோக்கமல்ல என்றும், அனைத்து தேசிய மொழிகளுக்கும் சம அந்தஸ்து உறுதி செய்யப்படும் என்றும் விளக்கமளித்து அதை ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிட்டது. இதே கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தெரிவித்து, இந்தப்பிரச்சனையை முடித்துவிட எண்ணினார்.
ஆனால், ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு முரணாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்தியை அனைத்துத் துறைகளிலும் முன்னிறுத்துவதும் மேம்படுத்துவதுமே தங்களது அரசின் முதன்மையான பணி என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.பாஜக புதுவிளக்கம்மத்திய உள்துறை அமைச்சகத்தின் இரண்டு அமைச்சர்களும் முரண்பட்டு பேசியுள்ள நிலையில், இந்தி மொழி குறித்து இதுவரையிலும் எவரும் வெளியிடாத விநோதமான விளக்கம் ஒன்றை பாஜக துணைத் தலைவரும், அதன் செய்தித் தொடர்பாளருமான முக்தார் அப்பாஸ்நக்பி வெளியிட்டுள்ளார்.“இந்தி என்பது தேசிய மொழி, இந்த நாட்டின் இதயமாக இருக்கும் மொழி. எனவேஇந்திக்கு முதன்மை முக்கியத்துவம் அளிப்பது என்பது ஆங்கிலத்தை அவதூறு செய்வதாகாது. எனவே இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது என முடிவு செய்து அரசாங்கம் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கக்கூடிய நடவடிக்கையே.
மேலும், இந்தி மொழி என்பதே தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளி, அசாமி, உருது மற்றும் இதர பல்வேறு பிராந்திய மொழிகளின் கூட்டுக்கலவையே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று முக்தார் அப்பாஸ் நக்பி தில்லியில் வெள்ளியன்று கூறினார்.இந்தி மொழியை அனைத்து இடத்திலும் பரப்ப காந்தி, நேரு, தீனதயாளன் உபாத்யாயா, ராம்மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் முயற்சி செய்ததாகவும், தங்களது அரசுக்குமுந்தைய அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வில்லை என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது இந்தியை மேம்படுத்த வாய்ப்புள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதற்கான தருணமாகும் என்றும் தெரிவித்தார்.
மோடி தன் வித்தையை காட்ட ஆரமித்திருக்கிறார். ஓட்டு போட்டாச்சுல்ல இனி இப்படித்தான். ...
தொகுப்பு
செல்வன்
Comments
இந்த விசயத்தில் இந்தி பேசாத மற்ற மாநிலங்கள் எந்த நிலை எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை இதே நிலை நீடித்தால் தமிழர்கள் தனிமைப்படுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.
சில வருடங்கள் முன் வரை தமிழன் வேலைதேடி மற்ற மாநிலங்களுக்குப் போய்க் கொண்டிருந்ததையும் மனதில் கொள்ளவேண்டும். அந்நிய முதலீடுகளை நம்பித்தான் தற்போது தமிழகம் இருக்கிறது. தமிழ் சிறந்த மொழி என்பதற்காக எவரும் இங்கே முதலீடு செய்ய வருவதில்லை. இங்கே வேலைதேடி அயல் மாநிலத்தவர்கள் வரும் அதே வேளையில், இங்குள்ள தமிழன் அரசு வழங்கும் இலவசங்களைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறான். இதில் தமிழன் பெருமைப்பட என்ன இருக்கிறது.
கோபாலன்