பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் கார்ப்பரேட் கும்பல்களால் இயக் கப்படுகிற கள்ளச் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் 109 ஏக்கர்நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்ற உண்மையை, வேறுவழியின்றி தமிழகஅரசு பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு நிலத்தில் செயல்பட்டு வரும்ஈஷா மையத்தின் மிக பிரம்மாண்டமான விழாவில் பங்கேற்று சட்டவிரோதஆதிசிவன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடியும், அவருடன் விழாவில்பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழக அரசே தன்னையும் அறியாமல் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது.ஈஷா யோகா மையத்தால் 109 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவே ஈஷாமையம் சட்டவிரோதமானது என்பதைஅம்பலப்படுத்தும் விதத்தில் அமைந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளும், பல்வேறு மக்கள் அமைப்புகளும் இடைவிடாமல் அம்பலப்படுத்தி வந்தன.
ஈஷாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்தன என்பதும் கவனிக்கத்தக்கது.கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாகக் கட்டியுள்ள கட்டுமானங் களை இடிக்கக் கோரி மலைவாழ் பழங் குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முத்தம்மாள் தொடுத்த வழக்கில் மாநில அரசும், ஈஷா யோகா மையமும் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் புதனன்று தமிழக அரசின் நகர்ப்புற திட்டமிடல் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:ஈஷா மையம் சார்பில் சிவன் சிலைஅமைப்பதற்காகவும், மூன்று மண்டபங்கள் கட்டுவதற்காகவும் ஒரு லட்சம்சதுர அடி அளவிற்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 8, 2016மற்றும் பிப்ரவரி 15, 2017 ஆகிய தேதிகளில் 19 ஹெக்டேர் தரிசு நிலங்களை மாற்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஈஷாயோகா மையத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார். இந்த அனுமதியானது மத வழிபாடு மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு தான் வழங்கப்பட்டுள்ளது.இக்கரை போளுவம்பட்டியில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு அனுமதி கோரி ஈஷா சார்பில் விண்ணப் பிக்கப்பட்டது. அவற்றை பரிசீலித்த மாவட்ட ஆட்சியரும், தீயணைப்பு துறையும் அனுமதி அளித்தனர். மேலும்மலைப்பகுதி பாதுகாப்புக் குழு, வனத்துறை, வேளாண்துறை, மண்ணியல்மற்றும் சுரங்கத் துறை ஆகியவற்றிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்றும்ஈஷா மையத்திற்கு அறிவுறுத்தப் பட்டது.ஈஷா மையத்திடம் உள்ள நான்கு நிலப் பட்டாக்களில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பான பணி நிறுத்த உத்தரவும், மூடி சீல் வைப்பதற்கான உத்தரவும் 2012 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய பதிவுகள்
1.குழந்தைகளின் சித்ரவதைக்கூடம் ஈஷா மையம்
2. ஆதிசிவனை திறக்க வராதீர் பிரதமரே! ஆன்மீகத்தின் பெயரால் சட்டவிரோதம்:
அரசின் உரிய அங்கீகாரம் இல்லாமல் ஈஷாமையம் சார்பில் பல கட்டடங்கள் கட்டப் பட்டு வருகின்றன. இதுதொடர்பாக 2012ல் அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து ஈஷா மேல் முறையீடு செய் துள்ளது.ஈஷா மையத்தில் 109 ஏக்கர் நிலத் தில் அங்கீகாரம் இல்லாத கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஈஷா தியான லிங்க மத வழிபாடு என்ற பெயரில் கட்டப் பட்டு வருகின்றன. இதுதவிர சிவன் சிலை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய ஈஷா மையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அங்கீகாரமற்ற இடங்களில் கட்டப்படும் கட்டுமானங்கள் தொடர்பாகஉரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டுமென 2007ல் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அதிகாரிகள் வசூலிக்காததால் அரசுக்கு வருவாய் இழப்புஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு மார்ச் 3ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தகவல் -தீக்கதீர்
தொகுப்பு - செல்வன்
Comments