சீமான் கட்சியை கலைப்பாரா?????

தேர்தல் முடிஞ்சு போச்சு. திரும்பவும் புரட்சித்தலைவி தங்த்தாரகை ஆட்சிதான்.என்ன  ஒரு சந்தோசம்னா வலுவான எதிர்கட்சியாக திமுக  வந்திருக்கு. அதிமுக கட்சியாளுங்க ஆட்டம் போட முடியாது. கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்க...
          எல்லாம் முடிஞ்சு போனாலும் தேர்தலுக்கு பிறகு சீமான் செய்ய வேண்டி முக்கியமான  வேலை பாக்கி இருக்கு. அது அவரோட கட்சியை கலைக்கிறது .நான் சொல்லப்பா... அவரே சொன்னத்து தான்.எது கட்சியை கலைக்கனும் சொல்றேன் கேளுங்க.....

  மே 19 அன்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அப்போது தந்தி டி.வி.யில் ‘சவாலில் வெற்றிபெற்ற சீமான்’என்ற தலைப்பில் , பேராசிரியர் அருணனுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே ஏற்கெனவே நடந்த விவாத படக்காட்சியை ஒளிபரப்பினர். அதில் பேசிய சீமான், ‘சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்கவில்லையென்றால் நாம் தமிழர் கட்சியைகலைத்துவிடுகிறேன்‘ என்று கூறியிருந்தார்.இந்த படக்காட்சியை தந்தி டி.வி.யில் ஒளிபரப்பி, மக்கள் நலக்கூட்டணியைவிட நாம் தமிழர் கட்சி அதிக ஓட்டுகளை வாங்கிவிட்டதாகவும், சீமான் தான்விடுத்த சவாலில் வெற்றி பெற்று விட்டதாகவும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டது. நாம் தமிழர் கட்சி அதிக ஓட்டுகள் வாங்கியதாக தந்தி டி.வி.எப்படி கணக்கிட்டது என்று தெரியவில்லை.
232 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 4 லட்சத்து 58 ஆயிரத்து 104 ஓட்டுகள் வாங்கியுள்ளது. இது 1.1 சதவீதம் ஆகும். கடலூரில்போட்டியிட்ட சீமான் 5வது இடத்திற்குதள்ளப்பட்டார். தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு 3 லட்சத்து 40 ஆயிரத்து 290 ஓட்டுகள் வாங்கியுள்ளது. இது 0.7 சதவீதம் ஆகும். மக்கள்நலக்கூட்டணியில் உள்ள மதிமுக, சிபிஎம்,சிபிஐ, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் வாங்கிய ஓட்டுகள் மொத்தம் 3.2 சதவீதம் ஆகும். தந்தி டி.வி. எந்த கால்குலேட்டரை வைத்து கணக்கிட்டது என்று தெரியவில்லை. நாம் தமிழர் கட்சி பெற்ற 1.1 சதவீத வாக்குகள், மக்கள் நலக்கூட்டணியின் 3.2 சதவீத வாக்குகளைவிட அதிகமா? சீமான் தனது கட்சியை கலைத்துவிடக்கூடாது என்று அவசர, அவசரமாக அவருக்கு வக்காலத்து வாங்கி, சவாலில் வெற்றிபெற்றதாக செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் சீமானுக்கும்நாம் தமிழர் கட்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகளையும், அந்த கட்சியின் விளம்பரத்தையும் வெளியிட்ட தந்தி டி.வி., இனம் காண முடியாத பாசத்தில்சீமானைத் தூக்கிப்பிடிக்கும் வேலையை தேர்தலுக்குப் பிறகும் செய்து கொண்டிருக்கிறது. மக்கள் நலக்கூட்டணி குறித்து தவறான செய்தி வெளியிடுவதே தந்தி டி.வி.யின் வேலையா? ஏன் இந்த சின்னத்தனம்?தான் விடுத்த சவாலில் தோற்றுள்ள சீமான், கட்சியை கலைப்பதாக சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவாரா?

தொகுப்பு
செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
Rendu pakkigalum orae inamaa (nadar) irrukurathalayaa ?