நகைச்சுவை நடிகர், அரசியல் வாதி, சமூக ஆர்வலர், ரத்ததான கொடையாளர், அரிமா சங்க நிர்வாகி என்ற பல மேடைகளில் வலம் வருபவர் எஸ்.வி.சேகர். இவர் சேராத கட்சி என தமிழ்நாட்டில் இருக்குமென்றால் அது இடதுசாரிக் கட்சிகள்தான். காங்கிரஸ் கொள்கைகளைப் பரப்பப்போவதாக காங்கிரஸ் கட்சியிலும், எம்ஜிஆர் புகழையும் ஜெயலலிதா பெருமையையும் பரப்பப்போவதாக அதிமுகவிலும் ஏற்கனவே கடைவிரித்துப் பார்த்தார். சில நேரம் திமுக தலைவர் கருணாநிதியைப் புகழ்ந்து பேசுவார். இப்படி ஏற்கனவே இருந்த கட்சிகளில் போணி ஆகவில்லை என்பதால் தற்போது இவர் முகாமிட்டிருப்பது காவிக் கூடாரம். இவர் எந்த கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு எதிராகத்தான் பேசுவார்.
சிலநேரம் அதில் உண்மையும் இருக்கும்.தற்போது அவர் உள்ள பாஜக வரும் சட்டப்பேரவைத்தேர்தலில் தோற்பது நிச்சயம் என்பதால் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திரமோடியும் கட்சித் தலைவர் அமித் ஷாவும் தமிழகத்திற்கு வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்கள் வந்த பிறகு கட்சி தோற்றால் அவர்கள் இவரும் சரியில்லை என்று மக்கள் பேசிக்கொள்வார்களாம். இதற்காகவே இந்த வேண்டுகோள் என்கிறார் சேகர்!இந்த லட்சணத்தில் இவர்தான் பாஜகவின் மாநில கொள்கை பரப்பு செயலாராம்! இவர் போட்ட இந்த சரவெடி கமலாலயத்தில் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, நாங்க அவரைத் திட்டுவதும், அவர் எங்களைத் திட்டுவதும் எங்க கட்சியில் இதெல்லாம் சகஜமப்பா, இதைப்போய் பெரிதுபடுத்தலாமா என்று வழக்கமான சிரிப்புடன் மழுப்பினாராம். ‘இதில் மட்டும்தான் இவங்க கட்சியிலே ஜனநாயகம் இருக்குது போல’ என்று செய்தியாளர்களும் நடையைக் கட்டினார்களாம்.

தொகுப்பு
செல்வன்
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்