பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label எஸ்.வி.சேகர். Show all posts
Showing posts with label எஸ்.வி.சேகர். Show all posts

சேம் சைடு கோல் போடும் நகைசுவை நடிகர்

நகைச்சுவை நடிகர், அரசியல் வாதி, சமூக ஆர்வலர், ரத்ததான கொடையாளர், அரிமா சங்க நிர்வாகி என்ற பல மேடைகளில் வலம் வருபவர் எஸ்.வி.சேகர். இவர் சேராத கட்சி என தமிழ்நாட்டில் இருக்குமென்றால் அது இடதுசாரிக் கட்சிகள்தான். காங்கிரஸ் கொள்கைகளைப் பரப்பப்போவதாக காங்கிரஸ் கட்சியிலும், எம்ஜிஆர் புகழையும் ஜெயலலிதா பெருமையையும் பரப்பப்போவதாக அதிமுகவிலும் ஏற்கனவே கடைவிரித்துப் பார்த்தார். சில நேரம் திமுக தலைவர் கருணாநிதியைப் புகழ்ந்து பேசுவார். இப்படி ஏற்கனவே இருந்த கட்சிகளில் போணி ஆகவில்லை என்பதால் தற்போது இவர் முகாமிட்டிருப்பது காவிக் கூடாரம். இவர் எந்த கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு எதிராகத்தான் பேசுவார்.