அப்துல் கலாமின் கனவுகள் நிறைவேறுமா?

நம்மை கனவு கான சொன்ன கலாமுக்கு இந்திய தேசத்தை பற்றிய பெரும் கனவு இருந்தது.அவரது கனவுகளில் பெரும்பாலும் தமிழக முன்னேற்றம் குறித்த கனவுகள் தான். அதிலிருந்து சில....
1.2020-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்பது
2. 2020 இந்தியா எப்படியிருகக்க வேண்டும் ?
, நிர்வாகம் வெளிப்படையானதாக இருக்கும், ஊழலற்றதாக இருக்கும், இளைஞர்கள் நிர்வாக பொறுப்பினை ஏற்று செயல்படுவார்கள், கல்லாமை என்பது ஒழிக்கப்பட்டுவிடும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் முற்றிலும் இருக்காது, தரமான குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும்,
3.தமிழகத்தைப் பொறுத்தவரை, நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ள தமிழகத்தில், நீர் நிலைகளை இணைத்து மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை சேமிக்க வேண்டும் .
இதற்காக தகுந்த பொறியாளர்களைக்கொண்டு திட்டம் ஒன்றை உருவாக்கி  தமிழகத்தின் இரண்டு முதலமைச்சர்களிடமும் (ஜெயலலிதா, கருணாநிதி) கொடுத்துள்ளார், அவர் அளித்த திட்டம் இன்று வரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
4., 36,000 கோடி ரூபாய் செலவில், 5 முதல் 8 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை இணைக்க முடியும் என்றும், அவ்வாறு இணைக்கப்பட்டால், ஆண்டுதோறும், 7 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை விவசாயத்திற்கு கொண்டு வரமுடியும் என்றும். 2150 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் 5 லட்சம் மக்களுக்கு குடிநீரும் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரும் கிடைக்கும் . அது மட்டுமல்லாமல், மீன்வளத்தை பெருக்க முடியும், 900 கி.மீ.தூரத்திற்கு நீர்வழிப் போக்குவரத்தை ஏற்படுத்த முடியும்
5.தடையில்லா மின்சாரம் மக்களுக்கு கிடைக்க வேண்டும்
6., சூரிய வெளிச்சம், காற்று, அணு, நிலக்கரி, பயோமாஸ் போன்ற இயற்கை வளங்களின் மூலம் 2 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் ,மின்சாரம் தயாரிக்க நிலக்கரி, நீர் உள்பட தற்போதுள்ள வளங்களைத்தவிர மேற்கண்ட இயற்கை வளங்களை கூடுதலாக பயன்படுத்தினால் 40 சதவீதம் சேமிக்க முடியும் .
7. , டீசலில் தண்ணீரைக் கலந்து உபயோகப்படுத்தலாம் என்றும், இதன் மூலம் 40 சதவீதம் டீசல் உபயோகத்தை குறைக்கலாம் எ னவும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
8.கிராமங்களில் சூரிய மின்சக்தி பயன்படுத்துவதின் மூலமும், தெருவிளக்குகளை சூரிய ஒளியின் மூலம் எரிய வைத்தால் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க இயலும்

சொத்து சேர்கறதுல குறியா இருக்கற நம்ம அரசியல் தலைவர்கள் கலாமின் கனவுகளை நிறைவேற்றுவார்களா?
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments