யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனையை ரத்து செய்க!

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப்மேமன் தூக்குதண்டனையை நிறைவேற்றுதலுக்கு எதிராக தாங்கள் அனுப்பியுள்ள கருணைமனுவைப் பரிசீலிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு நாட்டிலுள்ள புகழ்பெற்றநீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கள் முதலானோர் ஞாயிறன்று கருணை மனு அளித்துள்ளார்கள். இந்தக் கருணை மனுவில் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் பனசந்த் ஜெயின், எச்.எஸ். பேடி, பி.பி. சாவந்த், எச். சுரேஷ், கே.பி. சிவசுப்பிரமணியம், எஸ்.என்.பார்கவா, கே. சந்துரு, நாக்மோகன் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்ருகன் சின்கா, மணிசங்கர் ஐயர், ராம்ஜெத்மலானி, மஜீத் மேமன், சீத்தாராம் யெச்சூரி (பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), து. ராஜா(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), கே.டி.எஸ். துளசி, எச்.கே. துவா, டி. சிவா (திமுக) ஆகியோரும் பிரகாஷ் காரத் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஎம்),பிருந்தா காரத் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஎம்), திபங்கர் பட்டாச்சார்யா (பொதுச் செயலர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-லிபரேசன்) மற்றும் எண்ணற்ற கல்வியாளர்கள், சட்டவல்லுநர்கள், நசிருதீன் ஷா, மகேஷ் பட் போன்ற திரைப்படக்கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோரும் இக்கருணை மனுவில் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்.

மனுவில் கூறப்பட்டுள்ள விவரம் ......:‘தடா’ நீதிமன்றத்தின் நிறைவேற்றல் ஆணை (எக்சிகியூசன் வாரண்ட்) யின் படி, வரும் 2015 ஜூலை 30 அன்று மேற்கொள்ளவிருக்கும் யாகூப் அப்துல் ரசாக் மேமன் தூக்குதண்டனையை நிறுத்திவைக்க கோரி புதிய கருணை மனுவை அளிக்கிறோம். கீழே குறிப்பிட்டுள்ள 11 - காரணங்களைப் பரிசீலித்து, தண்டனையை உடனடியாக நிறுத்தி வைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

1.தூக்குதண்டனை ஒழித்துக்கட்டு வதற்காக சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கருணை மனுவில்இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் 72வது பிரிவின்கீழ் சில வழக்குகளில் தூக்குதண்டனை பெற்றவரை மன்னித்து விட்டுவிடவோ, தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்கவோ, தூக்குத்தண்டனையை சிறைத்தண்டனையாக மாற்றிட வோ குடியரசுத்தலைவர் அதி காரம் பெற்றிருக்கிறார். இந்தவகையில்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் மேல்முறையீட்டுக்கான உரிமையை அனுமதிக் கிறது. குடியரசுத்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு உரிமையை அவர் எப்போதாவது பயன்படுத்திட வேண்டும் என்று 2007 தீவன் சிங் (எதிர்) ராஜேந்திரபிரசாத் அர்தேவி வழக்கில் உச்சநீதிமன்றம் குடியரசுத்தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளது.

(2) தூக்குதண்டனை நிறைவேற்றுவதற்கான தேதியைக் குறிப்பிட்டு மரண ஆணை பிறப்பித் திருப்பது சட்டவிரோதமாகும். யாகூப்மேமனுக்கு மரண ஆணை குறித்து முன்னறிவிப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. அதன்காரணமாக அவரோ அல்லது அவருடைய வழக்குரை ஞர்களோ இதுதொடர்பாகத் தங்களது கருத்துக்களைச் சொல் லவே முடியவில்லை. இது உச்சநீதி மன்றத்தின் பல்வேறு தீர்ப்பின் முடிவுகளுக்கு எதிரானதாகும்.

(3) யாகூப்மேமன் 20 ஆண்டு களுக்கும் மேல் சிறையில் இருந் திருக்கிறார். அவர்மீதான வழக்கு விசாரணையே 14 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றிருக்கிறது.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இதர 10 குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள்தண்டனையாகக் குறைத்துள்ள அதே சமயத்தில்,யாகூப்பிற்கு வேறுவிதமான அளவு கோல் பிரயோகிக்கப்படுகிறது. இது கூடாது

.(4) தூக்குதண்டனை கைதிகள் நீண்டகாலம் சிறையிலிருந்ததைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களது தண்டனைக்காலம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் திரும்பத்திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறது. நீதியின்நலன் கருதிதாங்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு களைப் பரிசீலிக்க வேண்டும்.

(5) யாகூப்மேமன், தூக்குதண்டனையை எதிர்கொள்ளக் கூடிய மனநிலையில் இல்லை. இதனை சிறை மருத்துவர்கள் சான்றிட்டுள்ளார்கள்.இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்டவரை தூக்கில் தொங்கவிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஒருதீர்ப்பில் கட்டளையிட்டுள்ளது.

(6) யாகூப்மேமனுடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை அடைந்த இதர 10 நபர் களுக்கு தூக்குதண்டனை ரத்துசெய்யப் பட்டுவிட்டது. வழக் கில் குற்றச்செய்கையைப் பரிசீலித்துப்பார்த்தோமானால் யாகூப் மேமனைவிட அவர்கள் அதிக அளவில் குற்றச்செய்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கருணை காட்டப்பட் டிருக்கக்கூடிய சூழலில் யாகூப்மேமனுக்கும் அது காட்டப்பட வேண்டும்.

(7) உண்மையில் யாகூப் மேமன் சாட்சியாகத்தான் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவரே புலன்விசாரணை அதிகாரிகளிடம் சரணடைந்து இந்த வழக்கில் பாகிஸ்தான் சம்பந்தப் பட்டிருக்கிறது என்று சாட்சிய மளித்த நபராவார்.

(8)இவ்வழக்கில் டைகர் மேமனின் தம்பியாக இருப்பதால் தான் யாகூப் அப்துல் ரசாக் மேமன் தூக்கிலிடப்படுகிறார் என்பதையே இது காட்டுகிறது

.(9) வீரப்பனின் ஆட்கள், ராஜீவ்காந்திக் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றிருப்பவர்கள், மற்றும் தேவேந்தர் பால் சிங்புல்லார் ஆகியோர் உச்சநீதி மன்றத்தால் தண்டனை குறைக்கப் பட்டிருக்கிறார்கள். வீரப்பன் ஆட்கள், ராஜீவ் கொலை வழக்கின் மூன்று கைதிகள், தேவேந்தர்பால் சிங் புல்லார் ஆகியவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக குடியரசுத்தலைவர் காலதாமதமாக முடிவு எடுத்ததற்காக, அவர்களுக்கு தாமதமான தற்காக விடுதலை வழங்கவேண்டும் என்கிற சட்டஇயலின் அடிப் படையில் கோரி வருகிறார்கள். அதனால்தான் உள்துறை யாகூப் மேமன் வழக்கில் அவசரம் காட்டி யிருக்கிறது.

(10) மரண தண்டனை தடா சட்டத்தின்கீழ் அளிக்கப்பட் டுள்ளது. அந்தச் சட்டமே மோசமான ஒன்று என்பதால் ரத்து செய்யப்பட்ட ஒன்று.

 (11) எனவே குடியரசுத்தலைவர் இவ்வழக்கைப் பரிசீலனை செய்து யாகூப் மேமனை தூக்குதண்டனையிலிருந்து விடுவித்திடவேண்டும் என்று கேட்டுக்கொள் கிறோம்.இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கோரியுள்ளார்கள்

தகவல் தீக்கதீர்
தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments