பஸ் நிறுத்தம் சரியானதே...

24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிற ஊர் மதுரை.தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள்,வருபவர்கள்  சந்திக்கிற இடம் மதுரை என்பதால்  24 மணி நேரமும் மாநகர டவுன் பஸ்கள் இயக்கப்படும்.
ஆனால் நேற்று மதுரை, மதுரையை அடுத்த திருமங்கலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிகாலையிலேயே குவிந்து கிடந்தார்கள்.குழந்தைகள் ,பெண்களுமாக அங்கும்,இங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.சிலர் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்தார்கள். சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்த மினிபஸ்கள், தனியார்  பஸ்கள்களில் தொங்கிய படியே பயணம் செய்தார்கள். அஞ்சலக தேர்வு எழுத முடியாமல் பலர்  சிரமப்பட்டார்கள். இன்னும் இது போல பல பிரச்சனைகள்.

           பஸ் போக்குவரத்து ஊழியரகள் தீடிர்  ஸ்டிரைக்கால்   தமிழகமே தவித்து போனது உண்மைதான். இதற்கெல்லாம் யார் காரணம்? போக்குவரத்து ஊழியர்கள் தானா? இல்லை.கிட்டத்தட்ட 15 மாதங்களாக சிறும் ,பெரிதுமாக  அனைத்து அனைத்து கட்சி பஸ் ஊழியர்களும் போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால் இதை போக்குவரத்து துறை அமைச்சரோ, முதலமைச்சரோ கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள். வேலைநிறுத்தம் நடைபெற பொறுப்பற்ற முதல்வரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமே காரணம் என்றும் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
       
போக்குவரத்து ஊழியர்களின் குமுறல்....

அரசு போக்குவரத்து கழகத்தொழிலாளர்கள் ஊதிய உயர்வுகோரிக்கையின் மீது பேச்சுவார்த்தை 1.9.2013 முதல் நடத்தாமல் காலம் கடத்தியதையும், தினக்கூலி தொழிலாளர்கள் ஊதியம் வழங்குவதில் வஞ்சனை செய்தது, விடுப்பு இருந்தும் விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட் போடுவதால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், வைப்பு நிதி, ஓய்வூதிய பங்குதொகைகள் 1.4.2003 க்கு பின் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்காமல் இருப்பது, பேருந்துகளில் பணிசெய்வதற்கு கூட லஞ்சம் வாங்குவது போன்ற தொடர்ந்து ஏற்பட்டுள்ள இன்னல்களும், போக்குவரத்துக் கழகத்தில் மூன்றாண்டுக்கு ஒருமுறை, போக்குவரத்துத் துறை அமைச்சரே முன்னின்று பேசி முடிக்கும் வரலாற்றை அதிமுக அரசு முறியடித்துவிட்டது. 15 மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தாமல் இழுத்தடித்து, வழக்கு நீதிமன்றத்திலிருப்பதால் பேச்சுவார்த்தைக்கு அது தடையாக உள்ளதாக சட்டமன்றத்தில் ஒரு பொய்யை திரும்ப, திரும்பச் சொல்லி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு பேச்சுவார்த்தை நடத்த கேட்டுக் கொண்ட பிறகும், எதையும் மதிக்காமல் தன்னிச்சையாக இடைக்கால நிவாரணம் மாதம் ரூ. 1000 வீதம் 1.1.2015 முதல் என்று அறிவித்தது.தொழிலாளர் துறை கூட்டிய பேச்சுவார்த்தையில் பொறுப்புள்ள அதிகாரிகளோ, அமைச்சரோ வருகை தராமல் தொழிற்சங்கங்களை அவமானப்படுத்துகின்ற வகையில் நடந்துகொண்டனர். மாநிலஅரசுபொறுப்புணர்ச்சியில்லாமல் அளித்த பதிலில் திருப்தியளிக்காத தொழிலாளர்கள் தானாகவே முடிவெடுத்து ஒருநாள் முன்னதாக வேலைநிறுத்தத்தை துவக்கி இருக்கிறார்கள்.
விஷம் போல் ஏறிவரும் விலைவாசிக்கு ஏற்ப ஊதி உயர்வு வேண்டாமா, விடுமுறை வேண்டாமா? அமைச்சர்களே நீங்கள் உங்கள் சொகுசு வாழ்கைகயை கொஞ்சமாவது விட்டு கொடுப்பீகளா?

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
This stirke is very important , no doubt. The pakki payals (ADAMK govt) will not do anything right way. get lost....
இதுவும் சரி தான்...
Anonymous said…
பஸ் ஊழியர்கள் அரசால் பல வருடங்களாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் ,இப்போதும் கூட எதிர்க்கட்சியின் சதி என்று அரசு சதி செய்கிறதே தவிர ,மக்களின் கஷ்டத்தை போக்க முன் வரவில்லை !