சொத்துக்குவிப்பு வழக்கும் முதல்வர்களும்...


18 ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு (முன்னாள்)முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்துள்ளது.இது ஜெயலலிதா சந்திக்கும் 2 வது பெரிய வழக்கு எற்கனவே டான்சி ஊழல் வழக்கை சந்தித்து சிறை சென்றவர்.அப்போது தர்மபுரியில் கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்தை அதிமுக தொண்டர்கள் எரித்து 3 மாணவிகள் பலியானார்கள்.அதற்காக அவர்களுக்கு தூக்குதண்டனை தீர்ப்பும் கிடைத்தது.டான்சி வழக்கில் சிறை சென்ற போது 6 மாதகாலம் ஓ.பன்னீர்ச்செல்வம் முதல்வராக இருந்தார்.

             தற்போது வெளிவந்துள்ள சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு பலமுறை தள்ளி போன போதே ஜெயலலிதாவுக்கு எதிரானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.ஆனால் தமிழக மக்கள் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாகவே வரும் என்றே நம்பினார்கள். ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்றே நம்பினார்கள்.அதனால்தான் கேரளா,ஆந்திரா,கர்னாடகா அரசுகள் தமிழகத்துக்கு செல்லும் தங்கள் பேருந்துகளை நிறுத்திக்கொண்ட போது கூட தமிழகம் இயல்பாக தான் இயங்கி கொண்டிருந்தது. பேருந்துகள் இயங்கின. கடைகள் திறக்கப்பட்டிருந்தன.காலை 11 ம ணிக்கு வரவேண்டிய தீர்ப்பு மதியம் 3மணிக்கு மாற்றினார்கள்.கர்னாடகாவில் தீர்ப்பு வழங்கும் கோர்ட்பகுதியில் 144 தடை உத்தரவு போட பட்டபோது தான் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வன்முறைகள் துவங்கி தமிழக முழுவதும் பதட்டம் பரவியது. சட்டம் ஒழுங்கை முறைப்படுத்த ஆளில்லை. அமைச்சர்கள் எல்லோரும் கர்னாடகாவில் முகாமிட்டிருந்தார்கள். அன்றைய இரவு முழுவதும் தமிழக மக்கள் பயத்திலேயே வீடுகளில் முடங்கி கிடந்தார்கள்.பேருந்துகள் கடைகள் தாக்குப்பட்டு மூடப்பட்டன.வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்த சிலரின் வாகனங்கள் கூட தாக்கப்பட்டன.ஓருவழியாக அடுத்தநாள் 28 காலை 10.மணி முதல் பதட்டம் குறையாமலேயே இயல்புக்கு திரும்பிக்கொண்டுருக்கிறது தமிழகம்.


       இது சரிதானா?

ஜரோப்பிய, அமெரிக்க,ஜப்பான் நாடுகளில் தங்கள் மீது ஊழல் குற்றாச்சாட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்தாலே  அமைச்சர்கள்  ராஜினாமா செய்வதை பார்க்கலாம். அவ்வளவு  ஏன் தமிழக முதலமைச்சராக ஓமந்தூர் ரெட்டியார்(தமிழகத்தின் முதல் முதலமைச்சர் என்று நினைக்கிறேன்) கால்த்தில் தன்மீது  ஊடகங்கள் ஊழல்குற்றச்சாட்டு சுமத்திய போது அமைச்சர் ஓருவர் (பெயர் ஞாபகம் இல்லை) ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் அரசு இருந்தபோது அமைச்சராக இருந்த கக்கன் கடைசிகாலத்தில் வறுமையில் மரணமடைந்தார்.காமராசர்   சொத்து சேர்த்ததில்லை.அதிமுகவும்,திமுகவும் உரிமை கொண்டாடுகிற அண்ணா சொத்து சேர்த்ததில்லை.எம்ஜிஆரும் கூட சேர்த்ததில்லை.
                  கேரளமுதல்வராக இ.கே.நாயனார் இருந்த போது மதுரையில் ஓரு கூட்டத்திற்கு வந்திருந்தார்.மதுரை நகருக்குள் நுழைவதற்கு முன்பாக தெருவோர டீகடையில் அவரும் ,அவருக்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்களும் டீ சாப்பிட்டதை பார்த்திருக்கிறேன்.மேற்கு வங்க முதல்வராகஇருந்த ஜோதிபாசு தன் சொந்த வேலைகளுக்கு அரசு வாகனங்களை பயன்படுத்தமாட்டார் .இந்தியாவின் மேற்கு கோடி மாநிலமான திரிபுரா முதல்வராக உள்ள மாணிக்கசர்கார் சொத்துமதிப்பு 2 லட்சம்.அவரது மனைவி ஆசிரியரா  வேலை செய்து வருகிறார். இப்படி மறைந்தும்,வாழ்ந்தும் வரும் நல்ல ஊதரணங்கள் இருக்கின்றன.

            இன்றைக்கு இருக்கிற புதியதலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஜெயலலிதா தனது வளப்பு மகன்  சுதாகர் திருமணத்தை எப்படி நடத்தினார் என்பது. சென்னையே குழுங்க,குழுங்க ராஜா வீட்டு திருமணத்தை போல நடந்தது.தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வாகஅது இருந்தது. கோர்ட்... தீர்ப்பு... அரசியல்வாதிகளுக்கு சகஜம்ப்பா... மாட்டுதீவ ண ஊழலில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற லல்லூபிரசாத்யாதவ் இரண்டே மாதங்களில் வெளியே வந்து விட்டார்.எப்படியோ பன்னீச்செல்வத்துக்கு மீண்டும் முதல்வராக வாய்ப்பு....

செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

தருமி said…
/எம்ஜிஆரும் கூட சொத்து சேர்த்ததில்லை.//

அப்டியா ....??!!
மணவை said…
அன்புள்ள அய்யா,
வணக்கம்.
இன்றைக்கு இருக்கிற புதியதலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஜெயலலிதா தனது வளப்பு மகன் சுதாகர் திருமணத்தை எப்படி நடத்தினார் என்பது. சென்னையே குழுங்க,குழுங்க ராஜா வீட்டு திருமணத்தை போல நடந்தது.தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வாகஅது இருந்தது.
அனைவரும் படித்து நாட்டுக்குக் பயன்படும் படி இனிமேலாவது நடந்துகொள்ள வேண்டும்.
எனது ‘வலைப்பூ‘ பக்கம் வருகை புரிந்து கருத்திடஅன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in