ராஜபக்சேவுக்கு எதிரா நம்மால ஓன்னும் பண்ணு முடியாது?. உண்ணாவிரதம் இருக்குறது வெட்டிவேலை... நல்ல படிச்சமா? நல்ல மார்க் வாங்குனமா, அமெரிக்கா,ஆஸ்திரேலியான்னு போய் டாலர்ல சம்பாதிச்சமான்னு இல்லாம, இதெல்லம் தேவையா? மன்மோகன்சிங், நம்ம சிதம்பரமோ வந்து பழரசம் கொடுத்து, உங்க கோரிக்கையை எத்துக்க போறாங்களா? மாணவர்களே படிக்க வேண்டாம் டாஸ்மாக் போங்க நல்ல குவாட்டர் அடிங்க லைப் என்ஜாய் பண்ணுங்க, தமிழ்நாடு முழுக்க தடுக்கி விழுந்தா டாஸ்மாக் இருக்கே....
நீ வந்தால் நான் வரமாட்டேன்...
தமிழக அரசியல் வாதிகள் இப்படித்தானே இருக்கிறார்கள். கருணாநிதி பந்த் நடத்தினால் ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளமாட்டார். ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு கருணாநிதி ஒத்துழைக்க மாட்டார். விஜயகாந்த் எதுவும் பேசமாட்டார். ராமதாஸ் அறிக்கை மட்டும் தான்... இந்திய கம்யூனிஸ்ட் வந்தால் மார்க்ஸிட் வராது. வைகோ நடந்து கொண்டே இருப்பார். சீமான் இருக்காரானு தெரியல... இவ்வளவு ஒற்றுமையா இருந்தா எப்படி நல்லது நடக்கும்?...தமிழக மீனவர்கள் தினசரி தாக்கப்படுகிறார்களே அதற்காக முன்னால் முதல்வர் கருணாநிதியும், இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவும், மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதங்களை பழைய பேப்பர் கடையில போட்டக்கூட நிறைய பணம் கிடைக்கும். இங்க மட்டுமில்ல இலங்கையிலும் அப்படிதான் ஒற்றுமை பிரமாதமா இருக்கு .... தமிழன் குணமே இது தான் போலும், இதெல்லாம் தெரிஞ்ச ராஜபாக்சே பிறகு எப்படி நம்ம பார்த்து பயப்படுவார்.
உண்ணாவிரத போராட்டமும்,தீக்குளிப்புகளும்...
போராட்டம் என்றால் உண்ணாவிரதம் அல்லது தீக்குளிப்பு, ஒன்று அமைதியான முறை,மற்றொன்று மிக ஆவேசமான முறை.உண்ணாவிரதம் காந்திகாலத்து போராட்ட முறை... அது இப்ப ஒத்துவருமா? தீக்குளிப்பு தன்னையே அழித்து கொள்கிற முறை. இந்த இரண்டுமே இந்திய அரசியலில் பயனற்றுபோனவை, இந்திய அரசியல்வாதிகள் உண்ணாவிரதம்,தீக்குளிப்பு, போராட்டங்களுக்கெல்லாம் பயப்படுவதில்லை, கண்டுகொள்ளுவதுமில்லை.எத்தனையோ பேர் தீக்குளிச்சாசு, எவ்வளவோ போராட்டம் பண்ணியாச்சு எதாவது நடந்ததா?...புதுசா போராட்ட முறையை கண்டுபிடிக்க வேண்டியது தான்...
இலங்கைக்கு எதிராக இந்தியா செயல்பாடாது ....
ஏற்கனவே ஆயுத உதவி மூலம் 1லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்ய உதவிய இந்தியா, தற்போது தமிழர்களின் மேம்பாட்டுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் 1000 கோடிக்கு மேல் இலங்கைக்கு நீதியுதவி செய்துவருகிறது.மேலும் ஏர்டெல், அசோக் லேலண்ட், என்.டி.பி.சி., ஐ.ஓ.சி., தாஜ் குழுமம், டி.வி.எஸ். எஸ்.பி.ஐ., உள்ளிட்ட 108 மேற்பட்ட நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்துள்ளன. இலங்கை மீது பொருளாதார தடை வருமானால் இந்திய நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதை இந்திய முதலாளிகள் ஏற்றுக்கொள்வார்களா? தேர்தல் நேரங்களில் பண உதவி செய்வது முதலாளிகள் தானே.. அவர்கள் பாதிக்கப்படலாமா?... நீங்கள் ஒட்டுப்போடும் கட்சிகளின் பெயர் வேண்டுமானால் காங்கிரஸ்,பாஜக என்று இருக்கலாம்...நடப்பது முதலாளிகளின் அரசு தானே. ஆக மாணவர்களே படிக்கற வேலைய பாருங்க.....
- செல்வன்
Comments
அதை எதிர்த்து போராடாமல் ஜடமாக இருக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?
நீங்கள் இருந்துவிட்டு போங்க.
மத்தவனும் அப்படி இருக்கணும்னு சொல்லாதீங்க.
இந்தியாவிடமோ, அமெரிக்கவிடமோ மண்டியிடவில்லை. புரிந்து கொள்ளுங்கள்
BULIDING STRONG -BASEMENT WEEK