யாகம் நடத்தினால் டெங்கு காய்ச்சலுக்கு சங்குத முடியுமா?


59 பேர் பலி..... மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதி என் மரண பீதியில் மதுரை மாவட்டம் டெங்குகாய்ச்சல் பயத்தில் உறைந்து போய் உள்ளது. தமிழகத்திலேயே டெங்கு காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டமாக மதுரை உள்ளது. அதிலும் குறிப்பாக மதுரையிலிருந்து 24 கிமீ தூரத்தில் உள்ள மேலூர் தாலுகாவில் மட்டும் 48 பேர் பலியாகியுள்ளனர்.
மதுரை மாவட்டதில் திருப்பரங்குன்ரம்,திருமங்கலம் அலங்காநல்லூர்  சேர்த்து இதுவரை 59 பேர் பலியாகி உள்ளனர்.ஆனால் தமிழக அரசும், சுகாதாரதுறை அதிகாரிகளும் டெங்கு காய்ச்சல் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் மர்மக்காய்ச்சல் என்கின்றனர்.மேலும் பலியானவர்களின் எண்ணிக்கையை மருத்துவர்களும் மாவட்ட நிர்வாகமும் பாதியாக குறைத்தே வெளியிடுகின்றனர். உண்மை தகவல் மூடி மறைக்கப்படுகிறது.
             இந்நிலையில் மதுரை ராசாசி மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட அஸ்மாபேகம், என்ற பெண் மர்மமான முறையில் இறந்தார். மேலும் நோயாளி ஒருவர் மருத்துவமனைக்குள்ளேயே தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என் பல சம்பங்கள் நடைபெற்றுவரும் சூழலில் கடந்த வியாழக்கிழமை மருத்துமனையில் உள்ள வனபத்திரகாளியம்மன் கோயிலில் மிருதபஞ்சஹமம் மற்றும் தன்வந்திரியாகம் நடத்தப்பட்டது. மரணபயம், நீங்கவும், மர்மகாய்ச்சல் ஒழியவும், டெங்கு தொலையவும் வேண்டி நடத்தப்பட்டதாக கூறினார்கள்.
               சுற்றுபுறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளமல், மருத்துவமனைகளில் போதிய செவிலியர்கள், டாக்டர்கள், இல்லாமல் டெங்குக்கு ,சங்குத முடியாது. 48க்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியான நிலையில் மரணபயத்தோடு வாழ்ந்துவரும் நிலையில் யாகம் நடத்தினால் டெங்கு காய்ச்சல் சரியாகுமா?.
-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

...ம்... இப்படியும் ஒரு நம்பிக்கை...!!!
நம் நாட்டில் மூட நம்பிக்கைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்
நம் நாட்டில் மூடநம்பிக்கைகளுக்கு தாண் அதிக முக்கியதுவம் தருகின்றனர்
ஆத்மா said…
இதில் பூஜைகள் செய்து ஒன்னும் ஆகப்போவதில்லை....
பூஜையில் எரிக்கும் கற்பூரத்துக்குப் பதிலாக சுற்றுச் சூழலில் இருக்கும் குப்பைகளையும் நீர் தேங்கக் கூடிய பொருட்களையும் எரித்தால் பிரயோசனமாவது கிட்டும்
  •  ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கி சாதனைகள் படைத்த மாவீரருக்கு கோவில் கட்டி வழிபடும் கிராமமக்கள்:
    17.01.2018 - 0 Comments
    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக…
  • வேற்றுகிரகவாசிகளை எப்போது  நாம் சந்திப்போம்?
    29.09.2014 - 0 Comments
    கடந்த மாதம்  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா காணொளி(வீடியோ) ஒன்றை தனது இணையதளத்தில்…
  • மோடியால் உருவாக்கப்பட்ட செயற்கை  பேரழிவு
    08.11.2017 - 0 Comments
    சுனாமி,பூகம்பம்,புயல்,எரிமலை வெடிப்பு உருவாக்கும் பேரழிவைபோல மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8 உருவாக்கிய…
  • கமலின் பெர்சனல் முகம்
    28.09.2012 - 8 Comments
    உலகநாயகன்,ஆஸ்கார்நாயகன் என ரசிகர்களாலும், அவரின் நண்பர்களாலும் அன்போடு அழைக்கப்ட்ட கமல் தற்போது அதை…
  • முண்டாசுப்பட்டி - புதியகளம்
    15.06.2014 - 3 Comments
    புதிய களம், கதைகளோடு தமிழ் சினிமாக்கள் வரதொடங்கியிருப்பது நல்ல அம்சம். அதில் முண்டாசுப்பட்டி…