யாகம் நடத்தினால் டெங்கு காய்ச்சலுக்கு சங்குத முடியுமா?


59 பேர் பலி..... மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதி என் மரண பீதியில் மதுரை மாவட்டம் டெங்குகாய்ச்சல் பயத்தில் உறைந்து போய் உள்ளது. தமிழகத்திலேயே டெங்கு காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டமாக மதுரை உள்ளது. அதிலும் குறிப்பாக மதுரையிலிருந்து 24 கிமீ தூரத்தில் உள்ள மேலூர் தாலுகாவில் மட்டும் 48 பேர் பலியாகியுள்ளனர்.
மதுரை மாவட்டதில் திருப்பரங்குன்ரம்,திருமங்கலம் அலங்காநல்லூர்  சேர்த்து இதுவரை 59 பேர் பலியாகி உள்ளனர்.ஆனால் தமிழக அரசும், சுகாதாரதுறை அதிகாரிகளும் டெங்கு காய்ச்சல் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் மர்மக்காய்ச்சல் என்கின்றனர்.மேலும் பலியானவர்களின் எண்ணிக்கையை மருத்துவர்களும் மாவட்ட நிர்வாகமும் பாதியாக குறைத்தே வெளியிடுகின்றனர். உண்மை தகவல் மூடி மறைக்கப்படுகிறது.
             இந்நிலையில் மதுரை ராசாசி மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட அஸ்மாபேகம், என்ற பெண் மர்மமான முறையில் இறந்தார். மேலும் நோயாளி ஒருவர் மருத்துவமனைக்குள்ளேயே தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என் பல சம்பங்கள் நடைபெற்றுவரும் சூழலில் கடந்த வியாழக்கிழமை மருத்துமனையில் உள்ள வனபத்திரகாளியம்மன் கோயிலில் மிருதபஞ்சஹமம் மற்றும் தன்வந்திரியாகம் நடத்தப்பட்டது. மரணபயம், நீங்கவும், மர்மகாய்ச்சல் ஒழியவும், டெங்கு தொலையவும் வேண்டி நடத்தப்பட்டதாக கூறினார்கள்.
               சுற்றுபுறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளமல், மருத்துவமனைகளில் போதிய செவிலியர்கள், டாக்டர்கள், இல்லாமல் டெங்குக்கு ,சங்குத முடியாது. 48க்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியான நிலையில் மரணபயத்தோடு வாழ்ந்துவரும் நிலையில் யாகம் நடத்தினால் டெங்கு காய்ச்சல் சரியாகுமா?.
-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

...ம்... இப்படியும் ஒரு நம்பிக்கை...!!!
நம் நாட்டில் மூட நம்பிக்கைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்
நம் நாட்டில் மூடநம்பிக்கைகளுக்கு தாண் அதிக முக்கியதுவம் தருகின்றனர்
ஆத்மா said…
இதில் பூஜைகள் செய்து ஒன்னும் ஆகப்போவதில்லை....
பூஜையில் எரிக்கும் கற்பூரத்துக்குப் பதிலாக சுற்றுச் சூழலில் இருக்கும் குப்பைகளையும் நீர் தேங்கக் கூடிய பொருட்களையும் எரித்தால் பிரயோசனமாவது கிட்டும்
  • பெண்கள் படிக்க வேண்டாம்... ஆண்களுக்கு மட்டும்
    22.02.2013 - 2 Comments
    பெண்கள் படிக்க கூடாத பதிவு... பெண்கள் மட்டும் போல ஆண்களுக்கு மட்டும். அவள்விகடன், குமுதம் சினேகிதி…
  • செவ்வாயில் ஓடிய நதி வீடியோ +மங்கல்யாண்
    23.09.2014 - 0 Comments
    நொடிக்கு 22.1 கிமீ வேகத்தில்  செவ்வாயை நோக்கி பயணத்து கொண்டிருந்த மங்கள்யானை தற்போது வேகத்தை…
  • மதுரை அருகே 500 ஆண்டுகள் பழமையான வளரி வீரன் நடுகல் கண்டுபிடிப்பு
    24.09.2022 - 0 Comments
      மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தி.குண்ணத்தூரில் 500 ஆண்டு பழமையான வளரி வீரன்  சிற்பம்…
  • அப்துல் கலாமின்  கனவுகள் நிறைவேறுமா?
    29.07.2015 - 1 Comments
    நம்மை கனவு கான சொன்ன கலாமுக்கு இந்திய தேசத்தை பற்றிய பெரும் கனவு இருந்தது.அவரது கனவுகளில் பெரும்பாலும்…
  • கடந்த 160 ஆண்டுகளில், 2012 ஆம் ஆண்டுதான் மிகவும் சூடான ஆண்டாக இருக்கும்-  வானிலை ஆய்வாளர்கள் தகவல்
    09.01.2012 - 0 Comments
    குளிர் ஓரளவு குறைந்து அதனால் பாதிக்கப்பட்டு வந்தவர்கள் ஓரளவு பெருமூச்சு விட்டுக் கொள்ளும் நிலை…