யாகம் நடத்தினால் டெங்கு காய்ச்சலுக்கு சங்குத முடியுமா?


59 பேர் பலி..... மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதி என் மரண பீதியில் மதுரை மாவட்டம் டெங்குகாய்ச்சல் பயத்தில் உறைந்து போய் உள்ளது. தமிழகத்திலேயே டெங்கு காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டமாக மதுரை உள்ளது. அதிலும் குறிப்பாக மதுரையிலிருந்து 24 கிமீ தூரத்தில் உள்ள மேலூர் தாலுகாவில் மட்டும் 48 பேர் பலியாகியுள்ளனர்.
மதுரை மாவட்டதில் திருப்பரங்குன்ரம்,திருமங்கலம் அலங்காநல்லூர்  சேர்த்து இதுவரை 59 பேர் பலியாகி உள்ளனர்.ஆனால் தமிழக அரசும், சுகாதாரதுறை அதிகாரிகளும் டெங்கு காய்ச்சல் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் மர்மக்காய்ச்சல் என்கின்றனர்.மேலும் பலியானவர்களின் எண்ணிக்கையை மருத்துவர்களும் மாவட்ட நிர்வாகமும் பாதியாக குறைத்தே வெளியிடுகின்றனர். உண்மை தகவல் மூடி மறைக்கப்படுகிறது.
             இந்நிலையில் மதுரை ராசாசி மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட அஸ்மாபேகம், என்ற பெண் மர்மமான முறையில் இறந்தார். மேலும் நோயாளி ஒருவர் மருத்துவமனைக்குள்ளேயே தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என் பல சம்பங்கள் நடைபெற்றுவரும் சூழலில் கடந்த வியாழக்கிழமை மருத்துமனையில் உள்ள வனபத்திரகாளியம்மன் கோயிலில் மிருதபஞ்சஹமம் மற்றும் தன்வந்திரியாகம் நடத்தப்பட்டது. மரணபயம், நீங்கவும், மர்மகாய்ச்சல் ஒழியவும், டெங்கு தொலையவும் வேண்டி நடத்தப்பட்டதாக கூறினார்கள்.
               சுற்றுபுறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளமல், மருத்துவமனைகளில் போதிய செவிலியர்கள், டாக்டர்கள், இல்லாமல் டெங்குக்கு ,சங்குத முடியாது. 48க்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியான நிலையில் மரணபயத்தோடு வாழ்ந்துவரும் நிலையில் யாகம் நடத்தினால் டெங்கு காய்ச்சல் சரியாகுமா?.
-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

...ம்... இப்படியும் ஒரு நம்பிக்கை...!!!
நம் நாட்டில் மூட நம்பிக்கைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்
நம் நாட்டில் மூடநம்பிக்கைகளுக்கு தாண் அதிக முக்கியதுவம் தருகின்றனர்
ஆத்மா said…
இதில் பூஜைகள் செய்து ஒன்னும் ஆகப்போவதில்லை....
பூஜையில் எரிக்கும் கற்பூரத்துக்குப் பதிலாக சுற்றுச் சூழலில் இருக்கும் குப்பைகளையும் நீர் தேங்கக் கூடிய பொருட்களையும் எரித்தால் பிரயோசனமாவது கிட்டும்
  • கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
    06.08.2020 - 1 Comments
                     இந்த கேள்வி பல காலமாக கேட்கபடும் கேள்வி…
  • குழந்தைகளின் சித்ரவதைக்கூடம் ஈஷா மையம்
    11.08.2016 - 2 Comments
    கடவுள நம்பலாம்... நான் தான் கடவுள்ன்னு சொல்றவன நம்பக்கூடாது...            …
  • ''அரவான்'' அனுபவித்து பார்க்க வேண்டிய படம்
    05.03.2012 - 2 Comments
    படம் எப்ப முடியும்னு இருந்துச்சு சார்? என்றார் அலுவலக நண்பர். விமர்சனங்களும் ரசிகன் ரிஸ்க் எடுக்க வேண்டிய…
  • பிப். 24 ல் 100 வயதை கடக்கும் பாம்பன்பாலத்திலிந்து....... + வீடியோ
    19.02.2014 - 2 Comments
    வருகிற பிப். 24 தேதி 100 வது பிறந்த தினத்தை கொண்டாட இருக்கிறது பாம்பன் பாலம். 1913 ஆம் ஆண்டில் துவங்கி…
  • வானத்தில் இன்று இரண்டு நிலவு?
    27.08.2014 - 0 Comments
    ஆகஸ்ட் 27  (புதன்) இரவு வானத்தில் சந்திரனும் செவ்வாய்க் கோளுமாக இரண்டு நிலவுகள் தெரியும் என்று சமூக…