ஆக்டோபஸ் அதிசயங்கள் : 3 இதயம், 9 மூளை, நீல ரத்தம்

 


ஆக்டோபஸ் என்ற  கடல்வாழ்  உயிரனத்தை நாம் அறிவோம்.  5  அல்லது 6 கைகள், தலை எங்கேயுள்ளது என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உருண்ட படியே செல்லும். பார்பதற்கு  பயமுறுத்தகூடிய தன்மை உள்ள கடல் உயிரினம் ஆக்டோபஸ்.

ஆனால் அதன் உடலில் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை அறிவோமா.. எல்லா உயிரினங்களுக்கும் 1 இதயம்தான் இருக்கும். ஆனால் ஆக்டோபஸ்ஸூக்கு 3 இதயங்கள். அவற்றில் 2 உடலின் செல்களுக்கு ரத்த ஓட்டத்தை சப்ளை செய்ய, மற்றொன்று உடல் உறுப்புகளுக்கு சப்ளை செய்கிறது.


           


 ஆக்டோபஸ் நீந்தும் போது இதயம் துடிப்பதில்லை என்பது கூடுதல் சுவாரசியம். அதே போல 9 மூளைகள் உள்ளன. அதில் பிரதானமான மூளை கணிப்பதற்கும், முடிவெடுப்பதற்குமான வேலையை செய்கிறது.  மற்ற 8 மூளைகளும் அதன் ஒவ்வொரு கரங்களுக்கும் அடியில் அமைந்து செயல்பாடுகளை மேற்கொள்கிறது

 அதே போல நாம் உள்பட பெரும்பாலான விலங்குகளின் ரத்தம் எல்லாம் சிவப்பாக இருக்கும் போது ஆக்டோபஸ்ஸின் ரத்தம் நீல நிறமானது. 

நமது ரத்தத்தில் இரும்பை அடிப்படையாகக் கொண்ட ஹீமோகுளோபின் செல்களுக்கு ஆக்ஸிசனை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. 

இதே வேலையை ஆக்டோபஸ்ஸில் காப்பரை அடிப்படையாகக் கொண்ட  கியனோகுளோபின் அந்த வேலையை செய்கிறது.3 இதயம் 9 மூளை நீல ரத்தம்  ஆக்டோபஸ் ஆச்சர்யமான விலங்குதான்

Comments