பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts

அடேங்கப்பா!! 1 கிலோ டீத்தூள் இவ்வளவு ரூபாயா?..

 


எனது   நண்பர் ஒருவர்   தினசரி 50 டீக்கு மேல் குடிப்பார்.மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய அங்கம் வகிப்பது டீ. ஒரு சிலர் அல்ல வெகு சிலருக்கே காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் அந்த நாள் புத்துணர்ச்சியாக அமையவில்லை என்று கூறுவது உண்டு.  

 வாழ்வின் முக்கியஅங்கமான டூ 1 கிலோ அதிகபட்டமாக எவ்வளவுக்கு விறபனையாகிறது என பாருங்களேன்








நிலாவில் மர்ம க்குடில்... ஏலியான்களின் வீடாக இருக்குமோ?

 


நிலாவில் மர்கமகுடில் ஒன்றை  அங்கு  ஆய்வு செய்துவரும் சீன விண்கலம் கண்டுபிடித்துள்ளது.வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா?இல்லையா ?  என்றால் இருக்கு ஆனா இல்லை என்றபதிலைத்தான் இப்போது சொல்லமுடியும்.சில மாதங்களுக்குமுன் கூட பூமியின் வான பரப்பில் சில மர்ம் பொருட்கள் வந்து செல்வது உண்மை தான்  என அமெரிக்க விண்வெளி நிறுவமான நாசா உறுதி செய்துள்ளது.மர்ம பொருளை பறக்கும் தட்டு என்று ம் வேற்றுகிரவாசிகளின் வருகை என்றோ உறுதிப்படத்தவில்லை.

                      இந்நிலையில் நிலாவில் மர்ம குடில் ஒன்றை கண்டுபிடித்துள்ளது சீன விண்கலம் அது குறித்து தகவல்களுக்கு ....




பூமியில் எந்த இடத்திற்கு வெறும் 1 மணிநேத்தில் போகலாம்???

 


பூமியில் எந்த இடத்திற்கு வெறும் 1 மணிநேத்தில்   போகலாம்???

 சீனாவை   எத்தனை தான் குறைசொன்னாலும் அவர்களின்   வளர்ச்சி குறிப்பாக அறிவியல் வளர்ச்சி  பிரமிக்கத்தான் வைக்கிறது. 

பூமியில் இனி விமானம் மூலம் எங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால், வெறும் 1 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் சென்றடையலாம் என்று சீனா கூறியுள்ளது. இதற்கு காரணம், ஒலியை விட 5 மடங்கு வேகமாக மாக் 5 (Mach 5) நிலையில் பயணிக்கக் கூடிய ஹைப்பர்சோனிக் விமானத்தை அந்நாடு உருவாக்கி வருகிறது.  

முழுமையான தகவலுக்கு





உலகிலேயே முதல் காகிதமற்ற அரசு எது தெரியுமா????

  


உலக அளவில் காகித பயன்பாடு முற்றிலும்  குறைந்து வருகிறது.10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது 50 சதவீதத்திற்கு மேலாக காகிதபயன்பாடு குறைந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் பண பரிவர்தனை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிடும். இப்படி மாறிவரும சூழலில்  உலகின்  முதல் காதித மற்ற அரசாக தூபாய் மாறியிருக்கிறது

 மேலும்தெரிந்து கொள்ள...



இனி மவுஸ் வேண்டாம் வந்துவிட்டதுஸ்மாட்ரிங்..

 


இன்றைக்கு கம்யூட்டர் துறை எவ்வளவோ வளர்ந்து விட்டது . பலவேலைகளை எளிதாகசெய்ய   புதிய  சப்'ட்வேர்கள்  வந்துவிட்டன. ஆனால்  பல ஆண்டுகளாக மவுஸ் போன்ற சில விஷயங்களில் மாறமலேயே இருந்துவந்தது.  இப்போது மவுஸ்க்கு பதிலாக சுமாரட்ரிங் வந்தாச்சு அது குறித்து தெரிந்து கொள்ள



வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன எந்திரம்...!

 


தற்கொலை செய்து கொல்வது  சட்டபூர்மாக தவறு.வாழ்க்கையில் தோற்றுப்போனவர்கள்,குடும்ப பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியாதவர்கள்,நாள்பட்ட நோய்வாய்பட்டவர்கள் தற்கொலையை நாடுகிறார்கள். அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது  என்கிறார் அவ்வையார். அப்படி அரிதாக வாழ்க்கையை தற்கொலை மூலம் முடித்துக்கொள்ள கூடாது. ஆனால்

 தற்கொலை எந்திரம் குறித்து தெரிந்து கொள்ள





இனி ரோபோக்களும்குழந்தைகளை பெற்றெடுக்கும் ...



எந்திரன் படம் பார்த்திருப்பீர்கள் அதில் ஒரு ரோபோ மற்றொரு ரோபோவை உருவாக்குவதை பார்த்திருப்பீர்கள்  அது கற்பனை,சினிமாவிற்காக உருவாக்கப்பட்ட காட்சி என நினைத்திருந்தோம்.அது உண்மையாகி விட்டது. ஒரு உயிருள்ள ரோபோ உருவாக்ப்பட்டு அது குழந்தைகளையும் பெற்றேடுக்கிறது. முழுவிபமும் தெரிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை காண்க

 எனதுசேனலை subcribe  செய்க





70,000 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கப்போகும் அரிய வாய்ப்பு

 


70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் 'லியோனார்ட்' வால் நட்சத்திரம்.. 

  மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய அருமையான செய்தி, பிரபஞ்சத்தின் அழகை ரசிக்கக் கிடைக்கும் வாய்ப்பாகக் கூட இதை நாம் பார்க்கலாம். நம் பூமியின் வழியில் இப்போது ஒரு வால் நட்சத்திரம் வருகிறது.  

            இதுகுறித்து தெரிந்துகொள்ள காணொளியை காண்க


 காணொளி பார்க்க





ஒரே செடியில் கத்தரிக்காய், தக்காளி

 


ஒரே செடியில் கத்திரிக்காய் ,தக்காளி  கேட்கவே சந்தோசமா இருக்கல்ல... இன்னிக்கு இருக்குற காய்கறி விலைவாசிக்கு இப்படி ஒரு செடி கிடைத்தால் நன்றாக இருக்குமே.

 இநத் செடியை நீங்களேஉருவாக்கலாம்...காணொளியை பாருங்கள்





ஒமிக்ரோன் - மனித இனத்தின் மீது கொரோனோ நிகழ்த்தும் கடைசி யுத்தம்..

 


உலகை  அச்சுறுத்தும் புதிய கொரோனா வைரஸ் ஒமிக்ரோன்  - மனித இனத்தின் மீது கொரோனோ நிகழ்த்தும்  கடைசி யுத்தமாக இருக்கும் 

முழுமையன தகவல்  காணொளி காண்க

 எனது சேனலை  சப்கிரைப் செய்க...





ஆக்டோபஸ் அதிசயங்கள் : 3 இதயம், 9 மூளை, நீல ரத்தம்

 


ஆக்டோபஸ் என்ற  கடல்வாழ்  உயிரனத்தை நாம் அறிவோம்.  5  அல்லது 6 கைகள், தலை எங்கேயுள்ளது என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உருண்ட படியே செல்லும். பார்பதற்கு  பயமுறுத்தகூடிய தன்மை உள்ள கடல் உயிரினம் ஆக்டோபஸ்.

ஆனால் அதன் உடலில் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை அறிவோமா.. எல்லா உயிரினங்களுக்கும் 1 இதயம்தான் இருக்கும். ஆனால் ஆக்டோபஸ்ஸூக்கு 3 இதயங்கள். அவற்றில் 2 உடலின் செல்களுக்கு ரத்த ஓட்டத்தை சப்ளை செய்ய, மற்றொன்று உடல் உறுப்புகளுக்கு சப்ளை செய்கிறது.


           


 ஆக்டோபஸ் நீந்தும் போது இதயம் துடிப்பதில்லை என்பது கூடுதல் சுவாரசியம். அதே போல 9 மூளைகள் உள்ளன. அதில் பிரதானமான மூளை கணிப்பதற்கும், முடிவெடுப்பதற்குமான வேலையை செய்கிறது.  மற்ற 8 மூளைகளும் அதன் ஒவ்வொரு கரங்களுக்கும் அடியில் அமைந்து செயல்பாடுகளை மேற்கொள்கிறது

 அதே போல நாம் உள்பட பெரும்பாலான விலங்குகளின் ரத்தம் எல்லாம் சிவப்பாக இருக்கும் போது ஆக்டோபஸ்ஸின் ரத்தம் நீல நிறமானது. 

நமது ரத்தத்தில் இரும்பை அடிப்படையாகக் கொண்ட ஹீமோகுளோபின் செல்களுக்கு ஆக்ஸிசனை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. 

இதே வேலையை ஆக்டோபஸ்ஸில் காப்பரை அடிப்படையாகக் கொண்ட  கியனோகுளோபின் அந்த வேலையை செய்கிறது.3 இதயம் 9 மூளை நீல ரத்தம்  ஆக்டோபஸ் ஆச்சர்யமான விலங்குதான்

ரோபோவை திருமணம் செய்த இளைஞர்


கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், மனைவி அமைவதெல்லாம்  இறைவன் கொடுத்தவரம் என தமிழில் பலமொழிகள் உண்டு.  இந்த சீன இளைசெய்த காரியத்தை பார்த்தீர்களா.  ஆனாலும் பாவம் அந்த இளைஞர்  பல வருடங்களாக பெண் தேடியும் கிடைக்கவில்லை.பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு கடைசியில் ரோபோ ஒன்றை திருமண செய்துகொண்டார்.

சீனாவில் பொறியாளரான ஜெங்ஜியாஜியா ஹவாய் நிறுலவனத்தில் கணிணி பொறியாளராக பிண்புரிகிறார்.குடும்பமே பல ஆண்டுகளாக பெண் தேடியும் என்ன காரணத்தோலோ பெண்கிடைக்கவில்லை.  கடைசியில் வெறுத்துபோன ஜெங்ஜியாஜியாபெண் ரோபோவை திருமணம் செய்துகொண்டார்.  அந்த பெண் ரோபோவின் பெயர் யிங்யிங்.

                கூடுதல் தகவலோடு காணொளியாக காண- 

எனது சேனலை சப்கிரைப் செய்க




  இவர்களின் திருமண நிகழ்ச்சியில் அவரின் தாய் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டனர். திருமணத்தில் யிங்யிங் ரோபோவின் மீது பாரம்பரிய சிவப்பு துப்பட்டா கொண்டு அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது

.  இன்னும் 35 வருடங்களுக்கு பிறகு ரோபோவை மனிதர்கள் மணமுடிப்பது இயல்பாகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் ரோபோவை கரம்பிடித்த நிகழ்வு சீன ம‌க்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரோபோவை கட்டிக்கிட்டு என்ன தான்  செய்யுறதுன்னு தெரியல...

தமிழ் -கொரிய மொழிக்கும் உள்ள பிரமிக்க வைக்கும் ஒற்றுமை


  தமிழுக்கும் கொரியமொழிக்கும் பிரமிக்கவைக்கும் ஒற்றுமை உள்ளது.  இந்த கட்டுரையை  படிப்பதை விட காணொலியாக பாருங்கள் அதற்கான இணைப்பு கீளே கொடுக்கப்பட்டுள்ளது.

  நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கொரியாவின் முக்கிய தொலைகாட்சி நிறுவனமான கொரியா நவ்  தொலைகாட்சி நிகழ்ச்சி.ஒலி குறைக்கப்பட்டிருந்தாலும் காணொளியில்  ஆங்கிலத்தில் டைட்டில் வருவதால்மிக  எளிதில் புரிந்த கொள்ளமுடியும்.கொரியாவில் பணிபுரியும் ஆருண்பாணடியன் அவரது மனைவியையும்  கொரியா நவ்  தொலைகாட்சியில் கலந்து கொண்டநிகழ்ச்சி.

நான் ,நீ,அம்மா அப்பா,அண்ணியில் ஆரமித்து 500க்கும் மேற்பட்ட தமிழ்வார்த்தைகள் ஒரே பொருளை குறிக்கின்றன. உடல் உறுப்புகள்,பறவைகளின் பெயர்கள்  என தமிழ் கொரிய மொழி ஒற்றுமை நம்மை பிரமிப்பில் ஆழ்த்துக்கின்றன.

 மொழி ஒற்றுமை மட்டுமல்ல  கொழுகட்டை போன்றஉணவுகள்,சொட்டங்கல்,ஆடுபுலியாட்டம்  போன்ற விளையாட்டுகள் என  நமக்கும் கொரியர்களுக்குமான ஒற்றுமை தொடர்கிறது. நம்மை போலவே அங்கும் அரிசி உணவு  

கொரியாவிலும்  வாசல்களில் கோலம் போடுவது வழக்கம். அதுபோலத்தான்  நடனம் மற்றும் பாடல் போன்றவையும் ஒத்துப்போகின்றன.  

                          



 தமிழ்நாட்டைப் போலத்தான் நிறையப்பேர் அதிக காரமான உணவுகளைத்தான் விரும்புவார்கள்’’ என்று கூறியுள்ளார்.

 இதற்கு காரணம்   என்ன  தேடதுவங்கினால்  அது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு வரை செல்கிறது.  வியாபார தொடர்பாக இருந்த   தமிழக கொரியா உறவு திருமண உறவு வரை சென்றிருக்கிறது 

தமிழகத்தோடு வீயாபார தொடர்பு கொ ண்டிருந்த கொரியர்கள் . 2000 ஆண்டுகளுக்கு முன்  பாண்டிய நாட்டு எல்லைகைக்கு உட்பட்ட இன்றைய கன்னியாகுமரி அன்றைய ஆயோத்தாவை ஆட்சி செய்த    சிற்றரசனின்மகள்  செம்பவளம் என்ற இளவரசி கொரிய மன்னனுக்கும்   திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார். 

செம்பளம் அரசி கொரியா சென்றபோது இங்கிருந்து அட்டுக்ல் அம்மி உளிளிட்டபல பொருட்களை கொண்டு செல்கிறார். செம்பவளம் இளவரசியின் கல்லறையில் அவர் இங்கிருந்து கொண்டுசென்றபொருட்கள்  வைக்கப்பட்டுள்ளன.

செம்பவளம் அரசி  இன்றும் கொரியார்களால் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவர் மூலமாகவே கொரியாவில் தமிழ்  தலைத்தோங்குகிறது. அதன் தொடர்ச்சியே இன்றும் கொரியவில் தமிழும் தமிழ் கலாச்சாரம் தொடர்கிறது.  கொரியாவின் இன்றுய முக்கிய பாடகர்கள்,நடிகர்கள், அவ்வளவு ஏன் கிம்ஜோன்உன் உள்ளிட்ட அரசியில் தலைவர்கள் அவரின் வழி வந்தவர்களே.அக மொத்ததில் கொரியர்கள் நம் பங்காளிகள்தான்.

ஆபிஸில் தூங்கினால் ரூ.25 லட்சம் சம்பளம்

 



முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் உறங்குவதாக திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சில தூங்கி வழியும் அலுவலகங்களும் உண்டு. இதன் அர்த்தம் அதன் மந்தகதியை குறிப்பிட இப்படியும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ அலுவலக பணியிடங்களிலேயே உறங்குபவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும்  சொல்லி குற்றமில்லை. இரவு முழுவதும் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என நாம் என்ன அருகிலிருந்தா பார்க்க முடியும்.

                           மேலும் தகவல் தெரிந்து கொள்ள காணொளியை காண்க

                


போகட்டும். வேறு சிலருக்கோ பணி ஒவ்வாமை காரணமாக அலுவலகங்களில் தூங்கும் பிரச்னைக்கு ஆளாவார்கள். அதே பிரச்னையை கல்லூரிகளில் நம்மூர் மாணவர்களும் எதிர் கொள்வதுண்டு. படிக்கும் சப்ஜெக்ட்டுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போது கொட்டாவி ஆட்டோமேட்டிக்காக நம் வாயை பிளக்க வைத்துவிடும். துடிப்பான இளைஞர்களை கூட தூங்க வைக்கும் சக்தி நமது கல்வி நிலையங்களுக்கு உள்ளது. தூக்கம் வராதவர்களை நம்மூர் பேராசிரியர்களிடம் கொண்டு விட்டால் போதும் ஒரே நிமிடத்தில் கொர் என குறட்டை விட்டு தூங்கத் தொடங்கி விடுவர். எல்லாம் நகைச்சுவைக்காக சொல்லப்படுவதுதான்..

ஆனால் அதே நேரத்தில் நீங்கள் தூங்கத் தயாரா உங்களுக்கு  இந்திய பண மதிப்பில் ரூ.25 லட்சம் சம்பளம் தயார் என ஒரு வெளிநாட்டு நிறுவனம் வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த மெத்தை தயாரிக்கும் நிறுவனமான கிராஃப்டட் பெட் நிறுவனம் தான்.. வாருங்கள்.. எங்கும் போக வேண்டாம்.. எந்த வேலையும்  செய்ய வேண்டாம் என்றும்...எங்கள் மெத்தையில் படுத்து நன்றாக தூங்குகள்.. அவ்வாறு தூங்கினால் ரூ.25 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் மிரர் என்ற செய்தி தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

உலகின் விலை உயர்ந்த பழம் - ஒரு கிலோ 20 லட்சம் ரூபாய்


உங்களிடம் 20 லட்ச ரூபாய் இருந்தால் நீங்கள் என்ன வாங்குவீர்கள்? தங்கம்? வைரம் அல்லது நிலத்தில் முதலீடு? கிட்டத்தட்ட இந்த விலை மதிப்பிலான ஒரு ஹைப்ரிட் பழத்தை வாங்குவீர்களா? ஆனால், ஜப்பானில் வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். 

ஜப்பானில் ஒரு பழத்துக்கு எக்கச்சக்கமான டிமாண்ட் உள்ளது. அதன் விலை கிட்டத்தட்ட 20 லட்சம் என்று தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த 20 லட்ச ரூபாய் பழம் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

                                இந்த பழம் குறித்து கூடுதல் தகவல்கள்

                              தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக்செய்க

                                   


                          காணொலி பிடித்திருந்தால் எனது சேனலுக்கு சப்கிரைப் செய்க


  ஹைப்ரிட் உணவுகள் என்றாலே, விலை அதிகமாகத் தான் இருக்கும். உதராணமாக, ரூபி ரோமன் திராட்சை, டெக்கோபோன் ஆரஞ்சுகள், செகாய் இச்சி ஆப்பிள் ஆகியவை விலை அதிகமான ஹைப்ரிட் உணவுகள். ஆனால், இவையெல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது, ஜப்பானில் விளையும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மெலன். பாக்குறதுக்கு நம்ம ஊர்   தர்பூசணிபழம் மாதிரித்தான் இருக்கிறது.

அந்த பழத்தின் பெயர் யுபாரி மெலன்.  இந்த பழத்தின் விலை குறைந்த பட்சம் 20 லட்சம் இதன் விலை இன்னும் சில லட்சங்கள் கூடும் என்றும் அறியப்படுகிறது. அது மட்டுமின்றி, இந்த பழம் ஜப்பானில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது மற்றும் விற்பனையாகிறது. 

இதன் விலை இவ்வளவு அதிகமாக இருந்தாலும் கூட, ஜப்பானில் வசிக்கும் பணக்காரர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. பலரும், என்ன விலை கொடுத்தாவது இந்த பழத்தை சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனாலேயே, இதற்கு அதிக டிமாண்ட் உள்ளது.

ஜப்பானில் உள்ள யுபாரி என்ற இடத்தில் இந்த பழம் விளைவதால், அதையே பெயராக வைத்துள்ளார்கள். விலை உயர்ந்த பழத்தை அதிகப்படியாக விளைவிக்காமல், கிரீன்ஹவுஸ் முறையில் விளைவிக்கிறார்கள்.  என்ன நண்பர்களே ஜப்பான் கிளம்பிவிட்டீர்களா?

உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

 


நம் உடலில்ல வைரஸ் புகுந்துவிட்டால் நம்மை பாடாதபாடு படுத்திவிடும் அதே போல த்தான்  உங்கள் செல்போனில் வைரஸ் புகுந்து விட்டால் செல்போனும் நம்மைபோலவே பாடாதபாடுபடும்.

உங்கள் செல்போனில் வைரஸ் இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம். உங்கள் அனுமதி இல்லாமல் செயலிகள் அல்லது வேறு ஏதேனும் ப்ரீமியம் பயன்பாடுக்காக உங்கள் அக்கவுண்டில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 

அல்லது, உங்களின் அனுமதி இல்லாமலேயே ப்ரீமியம் மெசேஜ் அல்லது அழைப்புகள் செல்லும். 

அதிகப்படியான விளம்பரங்கள் உங்கள் செல்போனில் தோன்றிக்கொண்டிருந்தால், விளம்பரம் தொடர்பான ட்ரோஜன் அல்லது வைரஸ் உங்கள் செல்போனுக்குள் நுழைந்திருக்கலாம். 

உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அப்போது, உங்களின் தொடர்பில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். 

உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் முன்புபோல் இருக்காது. அடிக்கடி ஹேங்க் ஆகும் அல்லது மிகவும் ஸ்லோவான ஸ்பீடில் புரோகிராம்கள் இயங்கும்.

 புதிய செயலிகள் உங்கள் அனுமதியில்லாமல் பதிவிறக்கமாகியிருக்கும். அப்படி இருந்தால் உடனடியாக உஷாராகிக்கொள்ளுங்கள். 

விரைவாக டேட்டா தீர்ந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கலாம். ஏனென்றால், அவையே டேட்டாக்களை அதிகம் யூஸ் செய்யும்.

 பேட்டரி திடீரென குறையும், போன் சூடாகவும். இவையெல்லாம், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ்கள் இருப்பதற்கான அறிகுறி.

இப்படியும் பெயர் வைப்பார்களா?

 வினோத பெயர் கொண்ட சிறுவன்

 


தனது பெயரால்  சிறுவன் ஒருவன் உலக அளவில் வைரல்  ஆகி உள்ளான். நம் பெயர்கள் பொதுவாக தாத்தா ,பாட்டி பெயர், அல்லது குழதெய்வப்பெயர் , அல்லது  நம் பொற்றோருக்கு பிடித்த நடிகர் ,நடிகைகள் பெயர் வைப்போம்.

நம்மூர் பெயர்களை வெளிநாடுகளில் கேட்டால் அவர்களால் உச்சரிக்க முடியாது. அதே போலவே ஆங்கில, ரஷ்ய, போலந்து, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் பெயரை கேட்டால் நமது வாயில் கூட நுழையாது. எவ்வாறு இருந்தாலும் அவை அந்தந்த பிராந்தியங்களில் வழக்கமான பெயர்களாக அறியப்படுவதால் வித்தியாசமாக கருதப்படுவதில்லை. அதே நேரத்தில் பெயர் வித்தியாசமாக இருந்தால்.. நம்மூரில் யாராவது அஆஇஈ என பெயர் வைப்பார்களா.. வைப்பார்கள் என்கின்றனர் இந்தோனேஷியர்கள். அங்குள்ள தெற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஒரு சிறுவன் தனது விநோத பெயரால் பிரபலமாகியுள்ளான். அவன் பெயர் என்ன என்கிறீர்களா

                         மேலும் தெரிந்து கொள்ள  காணொளியை காண்க


 எனது சேனலை சப்கிரைப் செய்க

..ABCDEFGHIJK  என்ற ZUZU என்பதுதான் அந்த பெயர். கொரோனா தடுப்பூசி போட வந்ததன் மூலம் அவன் பெயர்  வெளியில் பரவி நெட்டில் வைரலாகியுள்ளான் அந்த சிறுவன்.

குழந்தைகளை ஆய்வகத்தில் வடிவமைக்கலாம்...


30 ஆண்டுகளில் இனபெருக்க செக்ஸ் முடிவுக்கு வரும் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்வார்கள் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். 

 இது டெஸ்டியூப் பேபி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் என்று சொல்லலாம்.

வருங்காலத்தில், தம்பதிகள் தங்கள் டிஎன்ஏவை வைத்து ஆய்வகங்களில் கருக்களை வடிவமைத்து கொள்வார்களாம். 

பெண்ணின் தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம். பின்னர்  இறுதியில் ஸ்டெம் செல்களில் இருந்து கரு முட்டைகளை உருவாக்கலாம். 


                     குழந்தைகளை வடிவமைக்கும் தொழில் நுட்பம் குறித்து தெரிந்து கொள்ள காணொளியை காண்க- சேனலை சப்கிரைப் செய்க



            

முட்டைகள் பின்னர் பல கருக்களை விளைவிக்கும். பின்னர் அதனை வல்லுநர்கள்  பிறக்கப்போகும் குழந்தை எந்த நோய்களுக்கும் ஆளாகிறார்களா என சோதனை செய்வர். 

இதன் மூலம் பாரம்பரை நோய்களை தடுத்து ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும். 

இதை செய்வ இந்த தொழில்நுட்பத்தின்   மூலம், பெற்றோர்கள் குழந்தையின் முடி நிறம் மற்றும் கண் வண்ணம் போன்ற அம்சங்களை தேர்ந்து  எடுத்து கொள்ள முடியும். இந்த செயல்முறை 30 ஆண்டுகளில் மிகவும் மலிவானதாகவும், நிறைய பேர் செய்வார்களாம். கருவுறுதல் மட்டும் தாயில் வயிற்றில் தான். இல்லை அதற்கும் எதேனும் மெசின் வந்தாலும் வரும். இன்னும் என்னலாம் வரப்போகுதோ...

             

ரயில் பயணத்தில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம்

 


அடிக்கடி வெளியூர் செல்லும் ரயில் பணிகளுக்கு இந்த அனுவம் கிடைத்திருக்கும்.

ரயிலில் மட்டும் நாம் விரும்பும் இருக்கையை தேர்வு செய்ய முடியாது அதற்கு காரணம் உண்டு. 

நாம் டிக்கெட் பதிவு செய்யும் போது, எல்லா கோச்சிலும், மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதற்கடுத்து இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும். 

              இந்த தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ள

  இந்த காணொலியைபாருங்கள்



பர்த் பதிவுகளும் இப்படி தான். ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். 

ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதனால் தான் ரயில்கள் வேகமாக பயனிக்கும் போது விபத்து ஏற்படாமல் பயணிக்க உதவுகிறது.


திருடனை பிடிக்க...வந்தாச்சு ஸ்மார்ட் பல்பு...


சி.சிடிவி கேமராக்களின் விலை சற்று அதிகமாய் உள்ளதால் அனைவராலும் அதனை வாங்கி பயன்படுத்த முடிவதில்லை.  அப்படியே வாங்கினாலும் அதை பொருத்துவது உள்ளிட்ட பல வேலைகள் வீடியோக்களை பாராமரிப்பது என பல சிக்கல்கள் உள்ளன. 

தற்போது சி.சிடிவி கேமராவிற்கு நிகரான ஸ்மார்ட் பல்பு இந்தியச் சந்தையில் பிரபலமடைந்து வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட் பல்பில் 360 டிகிரி எச்.டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

 அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட் பல்பில் வைஃபை, ஆடியோ ஸ்பீக்கர், மைக், மோஷன் டிடெக்டர், ஐ.ஆர் கட், 128 ஜிபி வரையிலான மெமரி கார்டு வசதி மற்றும் ஆர்.ஜி.பி நிறத்தை மாற்றும் சேவை எனப் பல சேவைகளை பட்ஜெட் விலையில் கிடைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.  

                 இந்தபல்பு குறித்து  மேலும் தெரிந்து கொள்ள  காணொலியைபார்க்கவும் பிடித்திருந்தால் சப்கிரைப் செய்ய



இந்த பல்பை சிலிங்பேன்,அழங்காரவிளக்கு ,சுவரில் என எங்கு வேண்டுமானலும் பொருத்தலாம்.  வைபை வசதி இருப்பதால் கேமிரா பதிவு செய்யும் காட்சிகளை உங்கள்செல்போனிலும்    பார்க்கலாம்.

விலையும் மிகவும் குறைவுதான். ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பிறகென்ன வீட்டில் எங்கு தேவையோ வாங்கி மாட்டுங்கள்.. இனி திருடன் உங்களிடம் வாலாட்ட முடியாது..