முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் உறங்குவதாக திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சில தூங்கி வழியும் அலுவலகங்களும் உண்டு. இதன் அர்த்தம் அதன் மந்தகதியை குறிப்பிட இப்படியும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ அலுவலக பணியிடங்களிலேயே உறங்குபவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் சொல்லி குற்றமில்லை. இரவு முழுவதும் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என நாம் என்ன அருகிலிருந்தா பார்க்க முடியும்.
மேலும் தகவல் தெரிந்து கொள்ள காணொளியை காண்க
போகட்டும். வேறு சிலருக்கோ பணி ஒவ்வாமை காரணமாக அலுவலகங்களில் தூங்கும் பிரச்னைக்கு ஆளாவார்கள். அதே பிரச்னையை கல்லூரிகளில் நம்மூர் மாணவர்களும் எதிர் கொள்வதுண்டு. படிக்கும் சப்ஜெக்ட்டுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போது கொட்டாவி ஆட்டோமேட்டிக்காக நம் வாயை பிளக்க வைத்துவிடும். துடிப்பான இளைஞர்களை கூட தூங்க வைக்கும் சக்தி நமது கல்வி நிலையங்களுக்கு உள்ளது. தூக்கம் வராதவர்களை நம்மூர் பேராசிரியர்களிடம் கொண்டு விட்டால் போதும் ஒரே நிமிடத்தில் கொர் என குறட்டை விட்டு தூங்கத் தொடங்கி விடுவர். எல்லாம் நகைச்சுவைக்காக சொல்லப்படுவதுதான்..
ஆனால் அதே நேரத்தில் நீங்கள் தூங்கத் தயாரா உங்களுக்கு இந்திய பண மதிப்பில் ரூ.25 லட்சம் சம்பளம் தயார் என ஒரு வெளிநாட்டு நிறுவனம் வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த மெத்தை தயாரிக்கும் நிறுவனமான கிராஃப்டட் பெட் நிறுவனம் தான்.. வாருங்கள்.. எங்கும் போக வேண்டாம்.. எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்றும்...எங்கள் மெத்தையில் படுத்து நன்றாக தூங்குகள்.. அவ்வாறு தூங்கினால் ரூ.25 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் மிரர் என்ற செய்தி தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
Comments