உங்களிடம் 20 லட்ச ரூபாய் இருந்தால் நீங்கள் என்ன வாங்குவீர்கள்? தங்கம்? வைரம் அல்லது நிலத்தில் முதலீடு? கிட்டத்தட்ட இந்த விலை மதிப்பிலான ஒரு ஹைப்ரிட் பழத்தை வாங்குவீர்களா? ஆனால், ஜப்பானில் வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
ஜப்பானில் ஒரு பழத்துக்கு எக்கச்சக்கமான டிமாண்ட் உள்ளது. அதன் விலை கிட்டத்தட்ட 20 லட்சம் என்று தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த 20 லட்ச ரூபாய் பழம் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்த பழம் குறித்து கூடுதல் தகவல்கள்
தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக்செய்க
காணொலி பிடித்திருந்தால் எனது சேனலுக்கு சப்கிரைப் செய்க
ஹைப்ரிட் உணவுகள் என்றாலே, விலை அதிகமாகத் தான் இருக்கும். உதராணமாக, ரூபி ரோமன் திராட்சை, டெக்கோபோன் ஆரஞ்சுகள், செகாய் இச்சி ஆப்பிள் ஆகியவை விலை அதிகமான ஹைப்ரிட் உணவுகள். ஆனால், இவையெல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது, ஜப்பானில் விளையும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மெலன். பாக்குறதுக்கு நம்ம ஊர் தர்பூசணிபழம் மாதிரித்தான் இருக்கிறது.
அந்த பழத்தின் பெயர் யுபாரி மெலன். இந்த பழத்தின் விலை குறைந்த பட்சம் 20 லட்சம் இதன் விலை இன்னும் சில லட்சங்கள் கூடும் என்றும் அறியப்படுகிறது. அது மட்டுமின்றி, இந்த பழம் ஜப்பானில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது மற்றும் விற்பனையாகிறது.
இதன் விலை இவ்வளவு அதிகமாக இருந்தாலும் கூட, ஜப்பானில் வசிக்கும் பணக்காரர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. பலரும், என்ன விலை கொடுத்தாவது இந்த பழத்தை சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனாலேயே, இதற்கு அதிக டிமாண்ட் உள்ளது.
ஜப்பானில் உள்ள யுபாரி என்ற இடத்தில் இந்த பழம் விளைவதால், அதையே பெயராக வைத்துள்ளார்கள். விலை உயர்ந்த பழத்தை அதிகப்படியாக விளைவிக்காமல், கிரீன்ஹவுஸ் முறையில் விளைவிக்கிறார்கள். என்ன நண்பர்களே ஜப்பான் கிளம்பிவிட்டீர்களா?
Comments