குழந்தைகளை ஆய்வகத்தில் வடிவமைக்கலாம்...


30 ஆண்டுகளில் இனபெருக்க செக்ஸ் முடிவுக்கு வரும் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்வார்கள் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். 

 இது டெஸ்டியூப் பேபி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் என்று சொல்லலாம்.

வருங்காலத்தில், தம்பதிகள் தங்கள் டிஎன்ஏவை வைத்து ஆய்வகங்களில் கருக்களை வடிவமைத்து கொள்வார்களாம். 

பெண்ணின் தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம். பின்னர்  இறுதியில் ஸ்டெம் செல்களில் இருந்து கரு முட்டைகளை உருவாக்கலாம். 


                     குழந்தைகளை வடிவமைக்கும் தொழில் நுட்பம் குறித்து தெரிந்து கொள்ள காணொளியை காண்க- சேனலை சப்கிரைப் செய்க



            

முட்டைகள் பின்னர் பல கருக்களை விளைவிக்கும். பின்னர் அதனை வல்லுநர்கள்  பிறக்கப்போகும் குழந்தை எந்த நோய்களுக்கும் ஆளாகிறார்களா என சோதனை செய்வர். 

இதன் மூலம் பாரம்பரை நோய்களை தடுத்து ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும். 

இதை செய்வ இந்த தொழில்நுட்பத்தின்   மூலம், பெற்றோர்கள் குழந்தையின் முடி நிறம் மற்றும் கண் வண்ணம் போன்ற அம்சங்களை தேர்ந்து  எடுத்து கொள்ள முடியும். இந்த செயல்முறை 30 ஆண்டுகளில் மிகவும் மலிவானதாகவும், நிறைய பேர் செய்வார்களாம். கருவுறுதல் மட்டும் தாயில் வயிற்றில் தான். இல்லை அதற்கும் எதேனும் மெசின் வந்தாலும் வரும். இன்னும் என்னலாம் வரப்போகுதோ...

             

Comments