சி.சிடிவி கேமராக்களின் விலை சற்று அதிகமாய் உள்ளதால் அனைவராலும் அதனை வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. அப்படியே வாங்கினாலும் அதை பொருத்துவது உள்ளிட்ட பல வேலைகள் வீடியோக்களை பாராமரிப்பது என பல சிக்கல்கள் உள்ளன.
தற்போது சி.சிடிவி கேமராவிற்கு நிகரான ஸ்மார்ட் பல்பு இந்தியச் சந்தையில் பிரபலமடைந்து வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட் பல்பில் 360 டிகிரி எச்.டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட் பல்பில் வைஃபை, ஆடியோ ஸ்பீக்கர், மைக், மோஷன் டிடெக்டர், ஐ.ஆர் கட், 128 ஜிபி வரையிலான மெமரி கார்டு வசதி மற்றும் ஆர்.ஜி.பி நிறத்தை மாற்றும் சேவை எனப் பல சேவைகளை பட்ஜெட் விலையில் கிடைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தபல்பு குறித்து மேலும் தெரிந்து கொள்ள காணொலியைபார்க்கவும் பிடித்திருந்தால் சப்கிரைப் செய்ய
இந்த பல்பை சிலிங்பேன்,அழங்காரவிளக்கு ,சுவரில் என எங்கு வேண்டுமானலும் பொருத்தலாம். வைபை வசதி இருப்பதால் கேமிரா பதிவு செய்யும் காட்சிகளை உங்கள்செல்போனிலும் பார்க்கலாம்.
விலையும் மிகவும் குறைவுதான். ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பிறகென்ன வீட்டில் எங்கு தேவையோ வாங்கி மாட்டுங்கள்.. இனி திருடன் உங்களிடம் வாலாட்ட முடியாது..
Comments