உலகை மிரளவைக்கும் பாலம்....

             


வைகைஆறோ,காவிரியோ அல்லது பாம்பன் - ராமேஷ்வரத்தை இணைக்கிற     என பல வகை பாலங்களை  பார்த்திருப்பீர்கள்.

                பாம்பன் பாலத்தில் கீழே படகு, கப்பல்  போக்குவரத்தும் மேலே பஸ்,கார்கள் என வாகன போக்குவரத்தும் இருக்கும். நீங்கள் பார்க்க இருக்கும் பாலம் மேலே கப்பல்போக்குவரத்தும், கீழே வாகன போக்குவரத்து என உலகையும் நம்மையும் மிரளவைக்கிற பாலம்.

                 வேலுவேமீர்   நீர்த்தேக்கத்தில் கட்டப்பட்டுள்ளது இந்தபாலம்.

நெதர்லாந்தின் N302 சாலையில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம்.  நெதர்லாந்தின் பிரதான நிலப்பரப்பை ஃப்ளெவோலாந்துடன் இணைக்கும் இந்த சாலை மிகவும் சுவாரஸ்யமானது -  

                2002 இல் திறக்கப்பட்டது. படகுகள் கடந்து செல்கிற வேலுவேமர் நீர்த்தேக்கம் ஒரு ஆழமற்ற 9.83 அடி (3 மீ) ஆழமான நீர் பாலம் ஆகும்.  இந்த பாலத்தின் மேல்பகுதியில் சிறிய படகுகள்,கப்பல்கள் பயணிக்கின்றன. இந்தபாலத்தின் கீழ் பகுதியில் தினமும் 28,000 வாகனங்கள் செல்கின்றன.

  இந்த பாலம் குறித்த தகவல்களை  காணொலியாக காண கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

காணொலி பிடித்திருந்தால் எனது வளாகம் சேனலை சப்கிரைப் செய்க


           776,922 கன அடி (22,000 கன மீ) கான்கிரீட்டைப் பயன்படுத்தி வேலுவீமர் நீர்நிலை கட்டப்பட்டது, மேலும் இரும்புத் தகடுகள்  அமைக்கப்பட்டுள்ளன. நீரின் எடையைத்  தாங்கும் அளவுக்கு இந்த அணைக்கட்டு கட்டுப்பட்டுள்ளது. கிட்டதட்ட 61 பில்லியன் செலவில் கட்டப்பட்டது.  இது நம்மையும் உலகையும் மிரளவைக்கும் பாலம் இது.


Comments