மோடியால் உருவாக்கப்பட்ட செயற்கை பேரழிவு


சுனாமி,பூகம்பம்,புயல்,எரிமலை வெடிப்பு உருவாக்கும் பேரழிவைபோல மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8 உருவாக்கிய பேரழிவிலிருந்து இன்றும் மிள முடியால் இந்தியா முடங்கியுள்ளது.

ஏழை- எளிய உழைப் பாளி, விவசாயிகள், சிறு-குறுதொழில் நடத்துவோர் என அனைத்துத் தரப்பினரையும் துயரத்தில் தள்ளிய, பிரதமர் நரேந்திர மோடியால் ஏற் படுத்தப்பட்ட- பணமதிப்பு நீக்கம் துயரத்தின் ஓராண்டு,இன்று நாடு முழுவதும் கறுப்பு நாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்,திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் (சரத்யாதவ் பிரிவு) உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.பிரதமர் நரேந்திர மோடி, பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பை நீக்கி, கடந்த 2016நவம்பர் 8-ஆம் தேதி இரவுஅறிவித்தார். முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் அறிவிக்கப்பட்ட இந்த பண மதிப்பு நீக்கத்தால் மக்கள் நிலைகுலைந்து போயினர்.

தங்களிடம் இருந்த ஓரிரு500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல், உணவுக்குக் கூட வழியில்லாமல் தவித்துப் போயினர். இந்த நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு நாட்கணக்கில் வரிசையில் காத்திருந்து நொந்தனர். நூற்றுக் கும் மேற்பட்டோர் வங்கியின் வாசல்களிலேயே உயிரை விட்டனர். பணப் புழக்கத் தடையானது தொழில்களை முடக்கியது. கோடிக்கணக்கானோர் வேலையிழந்தனர். சிறு உற்பத்தியாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏற்றுமதி சரிந்தது.ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் முடங்கியது.இப்போது வரை பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பிலிருந்து உற்பத்தித் துறையும், தொழில் துறையும் மீண்டு வர முடியவில்லை.பண மதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது, தனது நடவடிக்கையால் 50 நாட்களில் இந்தியாவில் கறுப்புப் பணம், ஊழல், தீவிரவாதம் ஒழியப் போகிறது என்று மோடி கொக்கரித்தார்.

ஆனால், பண மதிப்பு நீக்கத்தால், சாதாரண ஏழை - எளிய மக்கள் முதல் சிறு, குறு தொழில் நடத்துவோர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டதும், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி5.7 சதவிகிதமாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததும்தான் மிச்சம். நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டிருந்த பணம் முழுமையாக- சுமார் 15 லட்சத்து44 ஆயிரம் கோடி ரூபாய் (99 சதவிகித பணம்) வங்கிக்குவந்து விட்டது. இதுவரை கறுப்பு என்று கருதப்பட்ட பணமும் வங்கிக் கணக்கிற்கு வந்து வெள்ளையாக மாறிவிட்டது. கறுப்புப் பணத்தைஇப்போது வரை மோடி அரசுகண்ணில் காட்டவில்லை. மொத்த சட்டவிரோத சொத்துக்களில் 72.2 சதவிகிதம், அதாவது 32 லட்சம்கோடி ரூபாய் வெளிநாடுகளில்தான் முடக்கப்பட்டுள் ளது. உள்நாட்டில் 27.8 சதவிகிதம்- அதாவது 12 லட்சம் கோடி ரூபாய் அளவில் பதுக்கப்பட்டுள்ளது என்பது
தான் மத்திய அரசே முன்பொருமுறை அளித்திருந்த புள்ளிவிவரம். ஆனால், அந்த கறுப்புப்பணம் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.மாறாக, இந்த அம்பானி, அதானி போன்றகோடீஸ்வரர்களின் சொத்துக்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது. அம்பானி இந்தியாவின் பெரும்பணக்காரர் என்பதிலிருந்து ஆசியாவிலேயே பெரிய பணக்காரராக மாறியிருக்கிறார். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யுபிஎஸ் வங்கிமற்றும் ஆடிட்டர்கள் அமைப்பானது, இந்தியாவில் புதிதாக 100 கோடீஸ்வரர்கள் உருவாகி இருப்பதாக கூறுகிறது. ஊழலும்ஒழியவில்லை; தீவிரவாதமும் குறையவில்லை.பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாதஅளவிற்கு சீர்குலைந்துள்ளது. இதன்காரணமாகவே, மோடி அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பேரழிவு...

நன்றி
தீக்கதீர்

Comments