உங்கள் முதல் கவியரங்க மேடை நினைவில் இருக்கிறதா?“
எம்.ஏ.படிக்கும்போது தேவகோட்டையில திருக்குறள் சம்பந்தமாக ஒரு கவியரங்கம். பேராசிரியர் மே.சுந்தரம் நடத்தினார். அப்போ மீரா என்னோட கிளாஸ்மேட். அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்ததா ஞாபகமில்லை. 1960ன்னு நினைக்கிறேன். நானும் மீனாட்சியும் ஒண்ணா அரங்கேறினோம்.கல்லூரியில் ஆஸ்தான கவிஞனா பேர் வாங்கினேன். தியாகராசர் கல்லூரியில் ஆறுவருஷங்கள் முதல் கவிஞனா பரிசுகள் வாங்கினேன்.
அங்கு நடந்த கவியரங்குகளில் இராஜ ராஜன் கவியரங்கம் ரொம்ப புகழ்பெற்றது. இதுலே எல்லாம் நான் நல்ல பெயர் எடுத்திருந்தேன்.கவிதை எழுத எப்படி முடிவெடுத்தீங்க?“கவிதை என் இரத்தத்திலேயே இருந்தது. என் தாத்தா சையத் அஸ்ரப் மும்மொழிகளில் வல்லவர். அரபிக், பார்ஸி, உருது தெரியும் அவருக்கு. பாரஸீக மொழியிலும், உருதுமொழியிலும் கவிதைகள் எழுதவல்லவர் அவர். அவரைப் போலவே என் தந்தையும் பார்ஸி, உருது மொழிகளில் கவிதைகள் எழுதுவார். மும்மொழிப் புலமை என் தந்தையாருக்கும் உண்டு. பிறகு அவர் தமிழ் எழுத்தாளராக மாறினார்.
எனக்கு சின்ன வயசிலேயே தமிழில்ஈடுபாடு உண்டாயிற்று. தாத்தாவும் அப்பாவும் என்னை உருது படிக்கச் சொன்னாங்க. உருதுபடிச்சு என்னபண்ணப் போறோம்னு தோணிச்சு. தமிழ் மொழியிலே சங்க இலக்கியம் சமுத்திரம் மாதிரி இருக்கு. இவர்களை என்னை உருது படிக்கச் சொல்கிறார்களே என்றுநினைத்தேன். சின்ன வயதில் குரான் படிச்சதாலே அரபிக் கற்றுக்கொண்டேன். அரபிக் படிப்பேன். அர்த்தம் தெரிந்து கொள்வது கடினம். குர்ரான் ஓதற அளவுக்கு அரபிக் கற்றக்கொடுக்கும் ஒரு முறை இருந்தது. 8வதுபடிக்கும்போதே குர்ரான் படிக்கத் தொடங்கிவிட்டேன். அது எனக்கு ரொம்ப உதவியது. அதே ஸ்கிரிப்ட்தான் உருது. கொஞ்சம் மாறும். பிறகு அதன் பெருமை தெரிந்தபிறகு நானாகப் படித்துக்கொண்டேன். எங்க அப்பா, இக்பால் கவிதைகளைக் கொண்டுவந்து கொடுத்து படிக்கச் சொன்னார். உருதுமொழிக்கு நான்திரும்பியதற்குக் காரணம் - நிறைய திரைப்படங்கள் பார்க்கும் என் வழக்கம்.கவிஞர் மீராவும் நானும் சேர்ந்து திரைப்படங்கள் நிறைய பார்ப்போம். மீரா என்னுடன் தமிழ்ப்படம் மட்டும்தான் பார்க்கவருவார். நான் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் - மூன்று மொழிப்படங்களுக்கும் போவேன். தமிழ்ப்படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னால் மட்டும் பார்ப்பேன். ஹிந்திப் படங்களை ஒன்றுவிடாமல் பார்ப்பேன். அது அருமையான படங்கள் வந்தகாலம். அதுல ரொம்பவும் கவர்ந்தது பாடல்கள். பெரிய பெரிய கவிஞர்கள் ஹந்தியில் பாடல்கள் எழுதினார்கள். அற்புதமான சிந்தனைகள். சிறப்பான இசை. இதோடஉடிஅயீயசந பண்ணும்போது தமிழ்ப் பாடல்கள் பாதாளத்தில் இருந்தன. தமிழ்ப் பாடல்களைப் பொறுத்தவரை சுசீலாவின் குரல் மட்டுமே எனக்குப் பிடிக்கும். வேறெதுவும் சுசீலாவின் குரலுக்கு முன் நிற்காது. அனுபவிச்சவங்களுக்குத்தான் இது தெரியும். கண்ணதாசன் தமிழுக்குள்ளே ஒரு சிகரம். ஹிந்தியோடு உடிஅயீயசந பண்ணினா விழுந்திடுவார். ஹிந்தி திரைப்படங்களில் வருகிற பாடல்கள் அற்புதமாக இருக்கும்.மீராவையும் மற்ற நண்பர்களையும் அழைத்து ஹிந்திப் பாடல்களை மொழிபெயர்த்துச் சொல்வேன்.
ரொம்ப வியப்படைவார்கள். அதற்குப் பிறகு உருது திரைப்படப்பாடல்கள்அடங்கிய புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் உருது எனக்கு பிக்அப் ஆச்சு. வாணியம்பாடிக்கு போய்ச் சேர்ந்ததும் உருது கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்பட்டது
.”கவிதை தாண்டி மற்ற இலக்கிய வடிவங்களுக்கு ஏன் போகவில்லை? அது தேவையில்லையென்று நினைத்தீர்களா?
“தோணல.ஏனென்றால் இது ஒரு மகாசமுத்திரம்.இதில் எல்லை காண்பதேகஷ்டம். இதுலநான் சாதிக்கணும்னுநினைக்கிறபோது - ரெண்டு பொண்டாட்டிக்காரன் மூணு பொண்டாட்டிக்காரன் கதை ஆகிவிடக் கூடாது. இதநான் விரும்பல. ஆனந்தவிகடன் சிறப்பு மலர்கள் வந்தபோது என்னிடம் கதைகள் எழுதி வாங்கியிருக்கிறார்கள். 5 சிறுகதைகள் எழுதியிருக்கிறேன. அது மட்டுமல்ல. ஜன்னல் என்ற பத்திரிகைக்கு ஒரு கதை வாங்கிப் போட்டார்கள். மௌனி இப்ப வந்து எழுதற மாதிரி இருக்கு என்று சொன்னார்கள். சுமார் 6 கதைகள் எழுதியிருப்பேன். ஒரு தொகுப்பு கொண்டு வரணும்.டைலன் தாமஸ தொட்டீங்க. அரபிக் கவிதைகளால பாதிக்கப்பட்ட மாதிரி ஒரு கருத்து இருக்கு.
உங்களை யார் யார் பாதித்தார்கள்?
“சின்ன வயசில எங்க தெருவில் உருது கவாலி கச்சேரிகள் நடக்கும். அது என்னை ரொம்பபாதிச்சுது. மதுரையில இந்தக் கச்சேரிகள் எனக்காக நடந்த மாதிரி இருக்கு. அதுல ரொம்ப பாதிக்கப்பட்டேன். சூபி தத்துவத்தை வச்சுத்தான் கவாலிகள் இருக்கும்.எங்க தெருவுக்குப் பக்கத்தில ஒரு சேரி. திருவிழாக் காலத்தில அங்கே நரிக்குறவர் நடனம் நடக்கும். அந்த ஆட்டம் அருவருப்பா இருக்கும். எனக்குப் பிடிக்காது. ஆனா யாரோஒரு ஆசிரியர் அவர்களுக்கு பாடல் எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். அதுவும் சந்தப்பாடல்கள். அந்த இளம் வயதில் அது என்னை ரொம்பவும் ஈர்த்தது. பின்னாளில் அந்த ஆசிரியர் என்னைத் தேடி வந்து யாப்பு கற்றுக் கொடுக்கச் சொன்னார். இந்தி திரைப்பாடல்கள், கவாலி இவையெல்லாம் என்னை மிகவும் பாதித்தன. பாரதிதாசன் மீது அதிக ஈடுபாடு இருந்த அந்தக் காலத்தில் என்னுடைய நண்பராக கம்பதாசன் அறிமுகமானார். என்ன தமிழ்நாடு, அவனையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவன் ஒரிஜினல் பொயட். இயற்கையான கவிஞன். அழகன். அவனுடைய பாடல்கள் என்னைப் பாதித்தன.தற்செயலாக சுரதா எனக்கு அறிமுகமானார். அவ்வைநடராசன் சுரதாவை வியந்து போற்றுவார். பிறகு சுரதாவை விரும்பிப் படித்தேன். சுரதாவின் கவிதைகள் என்னை மாற்றின. ஒரு கவிதையை புதுமையாக எப்படி எழுதுவது என்பதை சுரதாவிடம் கற்றேன். என் கவிதைகள் கவனிக்கப்படுவதற்கு சுரதாவும்ஒரு காரணம். பி.ஏ.படிச்சிக்கிட்டிருந்தேன்.
சுரதா ஒரு இதழ் நடத்திக்கொண்டிருந்தார். “வீரவாள் வசிக்கும் வைர உறையில் ஈர மலர்களை நிரப்புவதுபோல” என்று தொடங்கும் ஒரு கவிதையை அவருக்கு அனுப்பியிருந்தேன். பல வருஷங்களுக்குப் பிறகு சுரதாவை சென்னையில் சந்திக்கிறேன். சுரதாவை சந்திக்கப் போனதே ஒரு வித்தியாசமான அனுபவமா இருந்தது. ஒரு கவிதையில அவர் ‘தண்ணீர் இரவு’ என்று எழுதியிருந்தார். அது எனக்குப் பிடித்திருந்தது. அதனால அவரை சந்திக்கப் போனேன். ‘யாருய்யா நீ,’ என்று கேட்டார். அப்துல்ரகுமான் என்று சொன்னேன். ‘வீர வாள் உரையில் ஈரமலர்களை நிரப்புவது போல - என்று எழுதிய கவிஞனா’ என்று கேட்டார். அசந்து போனேன். நீங்க ஆங்கிலக் கவிதைகள் படிப்பதுண்டா என்று அவரிடம் கேட்டேன். “ஆங்கிலமே தெரியாது” என்றார். ரொம்ப வியப்பா இருந்தது. டென்னிசன் பற்றித் தெரியுமா? என்றேன். ‘யாரவன்’ என்று கேட்டார். ‘தண்ணீர் இரவுகள்’ என்று எப்படி எழுதினீர்கள்? என்று கேட்டேன்.‘ஓ! அதுவா? குளிர்ந்த இரவு என்பதைத்தான் வித்தியாசமா ‘தண்ணீர் இரவு’ என்றுஎழுதினேன் என்றார். ‘டென்னிசன் என்று எழுதியிருக்கான்யா -உலகமே இதப் பாராட்டுது’ என்று சொன்னேன். ‘அட இப்படி எழுதியிருக்கானா?’ என்றார். அதற்குப் பிறகு சுரதாவின் மீதுமிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. அவரைப்போல் புதுமையாக எழுத வேண்டுமென்று முடிவெடுத்தேன். வசனகவிதைகள் நிறைய எழுதினேன். ஆண்டு மலர்களில் தமிழ்ப்பேராசிரியர்கள் என்னுடைய கவிதைகளை விரும்பி வாங்கிப் போடுவார்கள். “பைத்தியம் புடிச்சுப் போச்சா உனக்கு? யாப்பு கற்று நன்றாக எழுதிக் கொண்டிருந்த நீ வசன கவிதை எழுத ஆரம்பிச்சுட்டே! பரவாயில்ல நாங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தர்றோம்... கொண்டுபோய் ஆங்கிலத் துறையில் கொடு”என்றார் சுப.அண்ணாமலை. தாகூர் - ஜிப்ரான் கலந்து எழுதின மாதிரி என்னுடைய வசன கவிதைகள்இருப்பதாகச் சொன்னார்கள். என்னுடைய முதல் வசன கவிதை ஆங்கிலத்தில் வெளிவந்தது.என் ஆசிரியராக இருந்த அவ்வை நடராஜன் என் ரசிகர். மீரா என் ரசிகர் என்று கூடச் சொல்ல முடியாது - அதற்கும் மேலே.தாகூர், ஷெல்லி, கீட்ஸ், ஜிப்ரான் எல்லாவற்றையும் பிறகு படிக்க ஆரம்பிச்சேன். என்னிடம் இல்லாத கலெக்்ஷனே இல்லை. மிகச் சிறந்த கவிஞர்கள் என்று அறியப்பட்ட கவிஞர்கள் அனைவரையும் படித்தேன். ஆக்டோவியா பாஸ் என்கிற லத்தீன் மொழிக் கவிஞன்தான் என்னை ரொம்பப் பாதிச்சவன். பாப்லா நெரூடா கவிதைகளிலும் எனக்கு ஈடுபாடு இருந்தது.”பாரதிதாசன் பரம்பரை என்று ஒன்று உருவானது. கவிஞர் மு.மேத்தா நிறையப் பேரை கவிஞர்களாக உருவாக்கியிருக்கிறார்.
அது மாதிரி அப்துல் ரகுமான் பரம்பரை என்று உருவாக்கினீர்களா?“
நான் உருவாக்கல. தானா உருவாச்சு. தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அய்யா அ.கி.ப வகுப்பில்லாத நேரத்தில் தனி வகுப்பா யாப்பிலக்கணம் நடத்துவார். தமிழ் படிக்காத மாணவர்களும் அங்க வருவாங்க. யார் வேண்டுமானாலும் யாப்பு கற்றுக்கொள்ள அங்கு வரலாம். இந்த தாக்கத்தில்தான் வாணியம்பாடியில மாணவர்களுக்கு தனி வகுப்புகள் நடத்த ஆரம்பிச்சேன். நிறையப் பேர் வந்தார்கள். வெண்பாவும் கற்றுக் கொடுக்க முயற்சி செய்தேன்.மாணவர்களுக்கு யாப்பு நடத்தினேன். பிடிக்காம அப்புறம் விட்டுவிட்டேன். புரிஞ்சுபோச்சு - யாப்பிலக்கணம் கற்றுக் கொண்டிருக்கக் கூடாது. பிறகு ஒரு அறிவிப்பு செய்தேன். ‘அந்தியில வானம் ஏன் சிவக்கிறது? இதைப் பற்றிய நயமான சிந்தனைகளை எழுதுபவர்களுக்கு பரிசு தரப்படும்’ என்றேன்.எழுதுவார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் 150 பேருக்குமேல எழுதிக் கொடுத்தார்கள். என்கு ரொம்ப ஷாக் 10 வரிகளுக்கு மிகாமல் எழுதப்பட்ட அந்தக் கவிதைகளை வீட்டுக்குக் கொண்டு போய்படித்தேன். அந்த அனுபவத்த இப்பவும் என்னால மறக்க முடியல. உலக இலக்கியங்கள் ஓரளவுக்கு படிச்சிருக்கேன். அவங்க தொட்ட உயரத்த என் மாணவர்கள் தொட்டிருந்தாங்க. அந்தியில வானம் சிவப்பதை காளிதாஸன் மாதவிலக்கோட ஒப்புமைசொல்வான். அத ஒரு பையன் சொல்லியிருந்தான். யாருமே சொல்லாத புதுமையானசிந்தனைகளையெல்லாம் சொல்லியிருந்தார்கள். ஒரு கூட்டம் வச்சு பரிசுகளெல்லாம் கொடுத்து செவ்வந்தி என்று ஒரு புத்தகமும் போட்டேன். “வானச் சுவரில் சூரிய மூட்டைப் பூச்சியை நசுக்கியது யார்?” என்ற சிந்தனை முதல் பரிசு பெற்றது. கலைஞர் கேள்விப்பட்டு பாராட்டினார். ஆனால் சுஜாதா சந்தேகப்பட்டார். “ நீங்க எழுதிக் கொடுத்தீர்களா” என்றார். அப்புறம் ‘கவிராத்திரி’ நடத்தத் திட்டமிட்டேன். ‘முசைரா’ ராத்திரியில நடக்கும். அதுமாதிரி நடத்திக் காட்டணும்னு வருஷா வருஷம் கவிராத்திரி நடத்தினேன். வித்தியாசமான தலைப்புகளைக் கொடுத்து எழுதச் சொன்னேன். அறுபது பேருக்கு மேல் எழுதிக் கொண்டு வருவார்கள்.
பெருங் கவிஞர்களையும் கூப்பிட்டு எழுதச் சொல்வேன். எழுதி வாசிப்பாங்க. வைரமுத்து, மேத்தா, தமிழன்பன் எல்லாம் வந்திருக்காங்க.கவிராத்திரியில் கலந்து கொண்டு கவிதை பாடின யாராவது பெரிய ஆளா வந்திருக்காங்களா?“ஆகவே,‘இரவில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை’ என்று என் மாணவன் அரங்கநாதன் பாடினான். அந்த இரண்டுவரிகள் தமிழ்நாடு சட்டசபையில் பேசப்பட்டது. இந்தியப் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. இலங்கையில் பேசப்பட்டது.சில சொந்த சோகங்கள் காரணமாக அவனால் பெரிய ஆளாக வரமுடியாமல் போய்விட்டது. கவிராத்திரி நடத்தச் சொல்லி டிவியில கேட்டாங்க. ஒரு வருஷம் நடத்திக் கொடுத்தோம்.
”(குமுதம் லைஃப் இதழில் கோ.வசந்தகுமாரன் நேர்காணலிலிருந்து....)
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்