பாஜகவைத் துரத்தும் மாடு!

2016-17ம் ஆண்டில் மட்டும் இந்தியா 1.33 மில்லியன் டன் எருமை மாட்டுக் கறியைஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 3.9 பில்லியன் டாலராகும்.மாட்டிறைச்சி திங்கத்தான் தடை ஏற்றுமதி பண்ணலாம். இதுதான்  பாஜக அரசியல்...
கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்ந்து, மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் மோடி அரசின் சட்டம் தங்கள் மாநிலத்தைக் கட்டுப்படுத்தாது என்று கர்நாடகம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களும் அறிவித்துள்ளனர்.மத்திய அரசு தனது சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இறைச்சிக்காக மாடுகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய பாஜக அரசுகொண்டு வந்துள்ள சட்டத்திற்கு நாடு முழுவ தும் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.


புதிய சட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அதை ஏற்க முடியாது என்று பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு அறிவித்தது. அசைவம் உண்ணும் மக்களுக்கு- குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துக் களுக்கு எதிராக இச்சட்டம் உள்ளதால், அதை கேரளத்தில் அமல்படுத்த மாட்டோம் என்றும், சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும், கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் ஒன்றையும் எழுதினார்.

மேலும், கேரளத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியினர் மட்டுமன்றி, எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியினர், மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். மாட்டிறைச்சித் திருவிழா என்ற பெயரில், மாநிலம் முழுவதும் மாட்டிறைச்சி சமைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

கேரளம் அளித்த இந்த உத்வேகம், ஏனைய தென்மாநிலங்களுக்கு உத்வேகம் அளித்தது. கேரளத்தைப் போல மாட்டிறைச்சி தடையை அமல்படுத்தக் கூடாது என்று கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் கட்சிகள் பலவும் கோரிக்கை விடுத்தன. மாட்டிறைச்சித் தடைக்கு தங்களின் கண்டனங்களை வெளியிட்டனர்.அதைத் தொடர்ந்து, கேரளத்தின் வழியில் கர்நாடகம், புதுச்சேரி, மேற்குவங்க முதல்வர்களும் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் மோடியின் சட்டத்திற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.


கர்நாடக முதல்வர் சித்தராமையா

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என்ற மத்திய அரசின்உத்தரவு, மாநில அரசுகளை கட்டுப் படுத்தாது என கர்நாடக முதல்வர் சித்த ராமையா அறிவித்துள்ளார். மத்திய அரசால் மாநில உரிமைகளில் தலையிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இதேபோல, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தொடர்பான அரசாணையை மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திங்களன்று கொல்கத்தாவில் செய்தியாளர் களை சந்தித்த மம்தா பானர்ஜி “மத்திய அர சின் இந்த புதிய அறிவிக்கையை எங்களால் ஏற்க முடியாது. அதை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்; சட்டப்படி என்னசெய்யலாம் என்பது குறித்து அரசு தலைமைவழக்கறிஞருடன் ஆலோசனை நடத்த உள்ளோம், இந்த சட்டம் என்பது மாநிலஅரசின் உரிமையை பறிக்கும் ஒரு அப்பட்டமான செயல்; மேலும் இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறியுள்ளார்.“ஏன் ரம்ஜான் மாத துவக்கத்தில் மத்தியஅரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள் ளது?” என்று கேள்வியையும் எழுப்பியுள்ள அவர், “யாருடைய உணவிலும் தலையிடும் உரிமை அரசுகளுக்கு கிடையாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

“புதுச்சேரியில் அனைத்து கலாச்சாரத் தைச் சேர்ந்த மக்களும் வசித்து வருவதால் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது முடியாத காரியம்” என்று புதுவை முதல்வர் நாராயண சாமி அறிவித்துள்ளார். (அறிக்கை: 5ம்பக்கம்)

சென்னை ஐஐடி மாணவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு போராட்டம்

மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் மோடி அரசின் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை ஐஐடி-யிலும் மாணவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்ச்சியை நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது, வகை வகையாக சமைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சி மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி, விவாத அரங்கமும் நடைபெற்றது. முற்போக்கு மாணவர்கள் அமைப்பின் சார்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகமுழக்கங்களும் எழுப்பப்பட்டன. மத்தியஅரசின் முடிவுக்கு எதிராகவே மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை தொடங்கியுள் ளோம் என்று ஐஐடி மாணவர்கள் தெரிவித்தனர்.

திமுக   ஆர்ப்பாட்டம்

மாட்டு இறைச்சிக்கான தடையை எதி ர்த்து, தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக சார்பில் புதனன்று (31.05.2017) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இப்போராட்டம் நடைபெறுகிறது.விவசாயம் கைகொடுக்காத நிலை யில், கால்நடைகள் தங்களை வளர்த்த விவசாயி களின் குடும்பத்திற்குப் பொருளாதார ரீதி யாகத் துணை நிற்பது காலங்காலமாகத் தொடர்ந்து வருகிற வேளாண்மை சார்ந்த பண்பாடாகும்; இந்தப் பண்பாட்டை சீரழிக்கும் வகையிலும், விவசாயிகள் மீது பொருளாதாரச் சுமையை மேலும் ஏற்றி, அவர் களின் தற்கொலையை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், மத்திய அரசின் மாட்டிறை ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் அமைந்து ள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்துக் கூட்டத்தைக் கூட்ட திருமாவளவன் கோரிக்கை

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்விவகாரத்தில், கேரளா, புதுச்சேரி அரசு போன்று முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள திருமாவளவன், மத்தியில் பாஜக ஆளுகின்றதா அல்லது ஆர்.எஸ்.எஸ். ஆளுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து, ஜூன் 2-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எருமைக்கு மட்டும் விலக்கு?மோடி அரசு பரிசீலனை

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் அரசாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அரசாணையில் உள்ள விலங்குகள் பட்டியலிலிருந்து எருமை மாட்டை மட்டும் நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்தியாவைப் பொறுத்தவரை, 90 சதவிகிதமான மாட்டிறைச்சி, எருமை மாடுகளிடமிருந்துதான் கிடைக்கிறது என்பதுடன், பல்வேறு சமூக மக்களின் சடங்குகளில் எருமை மாட்டை பலியிடும் வழக்கமும் இருந்து வருவதால், எருமை களுக்கு மட்டும் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.2016-17ம் ஆண்டில் மட்டும் இந்தியா 1.33 மில்லியன் டன் எருமை மாட்டுக் கறியைஏற்றுமதி செய்துள்ளது. இதன் மதிப்பு 3.9 பில்லியன் டாலராகும்.
படம் - தீக்கதீர்
தொகுப்பு -செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்