இறைவி - படமாய்யா இது ???

கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே ஓருவித பழுப்பு நிற ஒளிப்பதிவு. யதார்த்த நடிப்பு என்ற பெயரில் மெதுவாக
நகரும் காட்சிகள். அதிலும் விஜய் சேதுபதி, பாபி சின்காவும்  நடிப்பு என்ற பெயரில் ரசிகர்களை சோதிக்கிறார்கள்.
         இவங்க ரெண்டுபேரும் பத்தலைன்னு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு ரெம்ப மோசம். எதற்கெடுத்தாலும் கத்துகத்துன்னு கத்துறார். சினிமா என்பது பொழுதுபோக்க மட்டும் தான். அதுல கொஞ்சமா  கருத்து சொல்லலாம்.அதுவும் புரியறமாதரி சொல்லனும். அவார்ட் கிடைக்கனும் மட்டும் குறிகோள்  வச்சுகிட்டு படம் எடுத்திருகிறார் கார்த்திக் சுப்புராஜ். படம் ரெம்ப நீளம். சுத்த போர் அடிக்கிற படம்.
        சுருக்கமாக கதை...
 காலம் காலமாக சிற்பத் தொழில் செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். பாபி சிம்ஹா கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் ஒரு படத்தை இயக்கி விட்டு, தயாரிப்பாளரு டன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தயாரிப்பாளர் படத்தை வெளியிடாமல் இருக்கிறார்.
 இதனால் விரக்தியில் எப்போதும் மது குடித்துக் கொண்டே இருக்கிறார். அவரை நினைத்து அவரது மனைவியான கமாலினி முகர்ஜி மிகவும் வருந்துகிறார். எனவே, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிட இவர்கள் குடும்பம் முயற்சி செய்து வருகிறது.

 மறுபக்கம் இவர்கள் குடும்பத்துடன் வளர்ந்த விஜய் சேதுபதி, கணவனை இழந்த பூஜா மீது காதல் வயப்படுகிறார். ஆனால் பூஜாவோ, விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதனால் விஜய் சேதுபதி அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்கிறார். அஞ்சலியுடன் நெருக்கமாக வாழ்ந்தாலும் பூஜாவின் நினைவாகவே இருக்கிறார்.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் விஜய் சேதுபதி நுழைந்து தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறார். அதேசமயம், அஞ்சலிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் கணவன் அருகில் இல்லாத குறை அஞ்சலியை வாட்டுகிறது.

இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவின் போக்கில் மாற்றம் ஏற்படாததால் அவரது மனைவி கமாலினி முகர்ஜி, அவரை விவாகரத்து செய்ய நினைக்கிறார்.
இதுபோன்ற இறுக்கமான சூழ்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் குடும்பத்தில் ஏற்படும் அதிரடி திருப்பங்களே படத்தின் மீதிக்கதை.
        இதில் வடிவுகரசி கேரக்கடர் படம் முழுக்கவே படத்த படுக்கைதான். மேக்கப் இல்லாமல் ஒரு ஏழ்மையான குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் அஞ்சலி. தன் கணவரை நினைத்து வருந்தும் காட்சியில் கமாலினி முகர்ஜி ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார். மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலுடன் நடித்திருக்கிறார் பூஜா திவாரியா. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களான ராதாரவி, வடிவுகரசி, கருணாகரன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
 குடும்பத்தைப் பற்றி சிந்திக்காத ஆண்களால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.  ஆனால் ரசிகர்களை பற்றி  அவர் சிந்திக்கவே இல்லை என்பது உண்மை

செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Kamalan said…
//சினிமா என்பது பொழுதுபோக்க மட்டும் தான். அதுல கொஞ்சமா கருத்து சொல்லலாம்.அதுவும் புரியறமாதரி சொல்லனும்.//
This is the last line I read, in the review..
Anonymous said…
Nonsense review!
Anonymous said…
https://www.facebook.com/anniyantou/