மறுபடியும் ‘பால் சொம்போடு’ காத்திருக்கும் கருணாநிதி...

தமிழகத்தில் வெயில் மண்டையை பிளக்கிறது.அதைவிட எந்த கட்சி யாரோடு கூட்டணி வைக்கும் என்பது தலை சுற்றுச்செய்யும் பரபரப்பு.கூட்டணி வைக்கிறதுல என்னதான் பிரச்சன? தமிழக கட்சிகளில் பெரும்பாலான கட்சிகளுக்கு கொள்கை ,கோட்பாடு கிடையாது. அரசியல் நாகரீகமும் கிடையாது. பிறகு என்ன தான் பிரச்சனை பணம் எத்தனை கோடி, எத்தன சீட்டு,வியாபார ரீதியான சில பேச்சு வார்த்தைகள் இது தான். பொதுமக்கள பத்தி என்ன கவலை வேண்டியது இருக்கு?
                 அதிமுகவோடு கூட்டணி சேர பெரிய கட்சிகள் இல்லை .59 சாதி அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்களாம்?
         பிஜே.பி நிலைமை பரிதாபம்...கூட்டு வைக்கவும் முடியல?கூட்டணி சேரவும் முடியல?

பாமக ... அமெரிக்க அதிபர் தேர்தல் மாதிரி பெரிய டூபாக்கூர் வேலை  நடக்குது. வெட்டி கவுரம். 180 தொகுதியில் ஜெயிக்குமாம்.
 மக்கள் நல கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையா பேசுறாங்க?   ஜெயிக்குறது கஷ்டம்...
           திமுக ,காங்கிரஸ் கூட்டணி ஒகே. ஆனா ஜெயிக்க முடியாதே .தேமுதிக சேர்ந்த ஜெயிக்கலாம் அப்படின்றது கருணாநிதி நம்பிக்கை. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள். அவற்றை ஒழிக்க வேண்டும் .இப்படி விஜயகாந்த சொன்னபிறகும் பால்செம்போடு கருணாநிதி காத்திருக்கிறார்.
சமீபத்துல கருணாநிதி கொடுத்த பேட்டி படித்தால செம்போடு காத்திருகுறார்ன்னு தெரியுது....

"மீண்டும் தேமுதிகவுடன் பேச்சு நடப்பதாக கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.இந்த முறையாவது தேமுதிகவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் பலன் தருமா என்ற எதிர்பார்ப்பில் திமுகவினர் உள்ளனர்.திமுகவின் பாரம்பரியத்தில் இதுவரை யாரிடமும் இப்படிக் கெஞ்சி நின்றதில்லை. குறிப்பாக இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியை இந்த அளவுக்கு யாரும் காத்திருக்க வைத்ததில்லை. கலங்கடித்ததில்லை.திமுகவின் 65 மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும் என்றார். தேமுதிக உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை என தெரிவித்தார். மேலும் தேமுதிகவுடன் பேச்சு நடக்கிறதா என்ற கேள்விக்கு நடைபெற்று வருகிறது என்றும் கருணாநிதி கூறினார்."
திமுகவை ‘தில்லுமுல்லு கட்சி’ என்று பிரேமலதா பகிரங்கமாக கூறிய பின்னரும் அது குறித்து பதிலடி எதுவும் தராத திமுக, விஜயகாந்தை எப்படியாவது கூட்டணிக்கு கொண்டுவரவேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறது என்பது கருணாநிதியின் பதில் மூலம் தெரியவந்துள்ளது.இதைத் தான் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ, பளிச்சென்று கேட்டுவிட்டார்.“தேமுதிக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு டிவிக்குப் பேட்டி அளித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள். அவற்றை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே, அதை பேப்பரில் படிக்கவில்லையா கருணாநிதி” என்று வைகோ கேட்டுள்ளார்.

தொகுப்பு
செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்




Comments