கடன் கட்டாத விஜய்மல்லையாவும் - ஏழை விவசாயியும்


அரை நிர்வாண அழகிகளோடு விஜய்மல்லையா எடுத்துக்கொண்ட   கிங் ஃபிஷர்  கலாண்டருக்களுக்கு   புகைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா?பார்க்கதாவர்கள்  கீழே படம் இணைத்துள்ளேன்
                கடந்த இரண்டு நாட்களாக தொலைக்காட்சிகளில் இரண்டு கடனாளிகளை பற்றி செய்திகள் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன.ஒருவர்  விஜய்மல்லையா,மற்றொரு தஞ்சை பகுதியை சேர்ந்த விவசாயி.
         10 ஆயிரம் கோடி கடன் வாங்கி அழகிகளோடு ஆட்டம் போட்டு மக்கள் வரிப்பணத்தை தன் தனிப்பட்ட உல்லாச வாழ்க்கைக்கு செலவிட்ட    விஜய் மல்லையா கோர்ட் சூட்டோடு பேட்டி கொடுக்கிறார்.
               3.80 லட்சம் கடன் வாங்கிய 2 தவணை மட்டுமே கட்டவேண்டிய விவசாயியை போலீஸ் அடித்து உதைத்து இழுத்துச்செல்கிறது.

பொதுத்துறை வங்கிகள் விவசாயிகள், நடுத்தர தொழில்நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு உதவிசெய்வதற்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படும் வகையிலும் தொடங்கப் பட்டவை. ஆனால் காலப்போக்கில் ஆளும் கட்சி யினர் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களின் தலையீட்டால் அந்த வங்கிகள் தங்களின் கடமையிலிருந்து தடம் புரண்டன. இதனால் வராக்கடன்அளவு பலலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போதும் பல பொதுத்துறை வங்கிகள் மறுமுத லீட்டுக்கு பணம் இல்லாமல் அரசிடம் கையேந்தும் நிலையில் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் ஒரு விவசாயி தனியார்வங்கியில் டிராக்டர் வாங்க ரூ.3.80 லட்சம் கடன்வாங்கி வட்டியும் அசலுமாக ரூ.4.11 லட்சம் செலுத்திவிட்டார்.

இன்னும் 2 மாதத் தவணைகளே பாக்கியிருந்த நிலையில் தனியார் வங்கியின் கூலிப்படையும் காவல்துறையினரும் அந்த விவசாயியை தாக்கி டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். இது சட்டத்தின் ஆட்சி என்றுகூறப்படலாம். ஆனால் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றைக்கூட விட்டுவைக்காமல் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு அசலும் கட்டாமல் வட்டியும் கட்டாமல் சர்வசாதாரணமாக இந்தியாவில் இருந்து விஜய்மல்லையாவால் தப்பிக்க முடிகிறது என்றால் நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மல்லையா செலுத்தவேண்டிய கடன் மற்றும் வட்டியை சேர்த்தால் 10ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.
வாங்கிய கடனை திருப்பி செலுத்தத்தவறியதால் விஜய் மல்லையா மற்றும் அவருக்கு சொந்தமான கிங் ஃபிஷர், யுனைடெட் புரூவரிஸ் ஆகியநிறுவனங்கள் திட்டமிட்டு மோசடி செய்பவர்கள் என்று இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் பஞ்சாப் ஸ்டேட் வங்கியும் அறிவித்துள்ளன. இந்திய தொழில்முதலீட்டு வங்கியான ஐடிபிஐஅனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் அதிகமாக விஜய்மல்லையாவுக்கு ரூ.900 கோடி கடன் வழங்கியது எப்படி என்று தெரியவில்லை. இதன்பின்ன ணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் கண்டறியவேண்டும். இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் விஜய்மல்லையா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். மல்லையா வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன் தொகையை விட அதிகமாக வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்களை அவர் வைத்திருப்பதாக அரசேகூறுகிறது. அப்படியென்றால் அந்த சொத்துக்களை ஜப்தி செய்து வங்கிக்கடனை அடைக்க இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? பல்வேறுவங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் மல்லையாவுக்கு சில வங்கிகள் மீண்டும் மீண்டும் கடன் வழங்கியதன் மர்மம் என்ன? மல்லையா மட்டுமல்ல, வங்கிகளில் கடன் வாங்கி இதுவரை செலுத்தாதவர்களின் பட்டியல் மிகப்பெரியது என்கிறார்கள்.
 பணக்காரனுக்கு ஒரு நீதி ,ஏழை விவசாயிக்கு ஒரு நீதியா?


தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments