ரஜினி முருகன் .. எங்க ஊர் படம்

மதுரையை சுற்றி எத்தனையோ படம் எடுத்திருந்தாலும் ரஜினி முருகனில்  மதுரை மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு செய்த பாலசுப்பிரமணியெ ம்த்திற்கு நன்றி.
          படத்தின் கதை வழக்கமானது தான். ஆனால் படல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் அருமை.டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் இன்னும் அழகாக இருக்கிறது. குறிப்பாக, ‘என்னமா இப்படி பண்றீங்களேம்மா’, ‘ஆவி பறக்கிற டீக்கடை’, ‘உன்மேல ஒரு கண்ணு’ ஆகிய பாடல்கள் எல்லாம் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது.

                        துவக்கத்திலிருந்து கடைசி வரை நகைசுவைக்கு பஞ்சமில்லை. சூரிக்கு சொந்த ஊர் (மதுரை) நகைசுவையில் கலக்கியிருக்கிறார்.படத்தில் ஒரு சிறு இடத்தில் கூட போரடிக்கும்படியான காட்சிகள் இல்லாமல் உள்ளது இவரது திரைக்கதையின் பலம்.
சிவகார்த்திகேயனின் தாத்தா ராஜ்கிரண் மதுரையில் வாழ்ந்து வருகிறார். இவர் ஊரில் யாருடனும் பகை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்று எண்ணி தனது பிள்ளைகள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறார்.
இதில், ஒரேயொரு மகனான ஞானசம்பந்தம் மட்டும் மதுரையிலேயே தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஞானசம்பந்தத்தின் மகன்தான் சிவகார்த்திகேயன். இவர் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர் சூரியுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார்.
அதேஊரில் நாயகி கீர்த்தி சுரேஷை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷின் அப்பாவும், சிவகார்த்திகேயனுடைய அப்பாவும் பழைய நண்பர்கள். சிவகார்த்திகேயன் சிறுவயதில் செய்த சிறு தவறால் இவர்கள் பகையாளியாக மாறியிருக்கிறார்கள்.
இருந்தாலும், சிறுவயதிலேயே இருவீட்டாரும் சிவகார்த்திகேயனுக்கும், கீர்த்திக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருப்பதால், குடும்ப பகையை முடிவுக்கு கொண்டு வந்து, கீர்த்தி சுரேஷை எப்படியாவது தனது மனைவியாக்க வேண்டும் என்ற நினைப்பில் சிவகார்த்திகேயன் அவள் பின்னாலேயே சுற்றுகிறார். ஆனால், கீர்த்தி சுரேஸோ இவரை கண்டுகொள்வதில்லை.
அவளை கவர்வதற்காக சிவகார்த்திகேயன் பல்வேறு சேட்டைகளை செய்கிறார். ஒருகட்டத்தில், சிவாவின் சேட்டைகள் கீர்த்திக்கு பிடித்துப்போகவே அவளும் காதலிக்கத் தொடங்குகிறாள். இந்த விஷயம் கீர்த்தியின் அப்பாவுக்கு தெரிய வந்ததும், இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இந்நிலையில், ராஜ்கிரண் தனது பேரன் சிவகார்த்திகேயன் பெயருக்கு சொத்துக்களை எழுதி வைக்க, வெளிநாட்டில் இருக்கும் மற்ற மகன்களை கிராமத்துக்கு அழைக்கிறார். ஆனால், அவர்கள் இதற்கு சம்மதிக்காமல் வெளிநாட்டிலிருந்து வர மறுக்கின்றனர். இருந்தும், ஒருசில விஷயங்களை செய்து அவர்களை வரவழைக்க பார்க்கிறார் ராஜ்கிரண்.
இதற்கிடையில், அதேஊரில் மக்களை மிரட்டி பணம் பறித்து வரும் சமுத்திரகனி, ராஜ்கிரணின் மற்றொரு பேரன் என்றும், தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று சண்டைக்கு வருகிறார். ஆனால், ஊரார் யாரும் இதனை ஏற்க மறுக்கின்றனர். ஆனால், சமுத்திரகனி தான் ராஜ்கிரணின் பேரன் என்பதை நிரூபிக்கிறேன் என்று அவர்களிடம் சவால் விடுகிறார்.
இறுதியில், சமுத்திரகனி ராஜ்கிரணின் பேரன்தான் என்பது உறுதியானதா? குடும்ப பகையை தீர்த்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

நல்லதொரு விமர்சனம்...