உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் இந்தியாவில் தமிழகம் மட்டுமே!!!!!


உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் தமிழகத்திற்கு 24வது இடத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அளித்துள்ளது. வாஷிங்டன், சிட்னியை பின்னுக்கு தள்ளியதுதமிழகம்!
தமிழகத்தின் கலை திறமை, பண்பாட்டையையும், வீரத்தையும் வட இந்திய ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும் மதிப்பதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரியா மரியாதையை கொடுப்பதில்லை.
காரணம் சமஸ்கிருதம் உயர்ந்தது எனற மனபாண்மை கொண்டவர்கள் வட இந்தியர்கள்.

  ஆனால் உண்மையை,திறமையையும் மறைக்க முடியாதே. வட இந்திய குறிப்பாக மத்திய அட்சியாளர்கள் மதிக்க தவறினாலும் உலகஅரங்கில் மதிப்பளிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெரிய கவுரவம்.
அமெரிக்காவின் முதன்மை பத்திரிகையான ’நியூயார்க் டைம்ஸ்’ 2016 புத்தாண்டு பிறப்பை ஒட்டி, உலகில் இந்த வருடத்தில் சுற்றிப்பார்க்க தகுதியான மிகச்சிறந்த 52 இடங்களை தேர்வுசெய்து வெளியிட்டுள்ளது. அதில் 24 வது இடத்தில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டை தேர்வுசெய்ய காரணமாக இருந்தது, இங்கு உள்ள பண்பாட்டை வளர்க்கும் கலாசாரம் மற்றும் கட்டட அமைப்புகளில் உள்ள கலை நுட்பமும் தானாம்.
இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் சிறந்த காரணங்களுக்காக தேர்வாகியிருப்பது இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மத்தியிலும் பெருமைக்குரிய விஷயமே.
தமிழக கோயில்கள் இதற்கு முக்கிய காரணம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரியகோவில், மலை கோயில்கள், மாமல்லபுரம், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் கட்டடங்கள் குறிப்பிடத்தக்கவை.
      அதில் அழகுக்கு மெக்ஸிகோ, கனடாவின் பெரிய நகரமான டொராண்டோ, ஹோட்டல் பிரம்மாண்டங்களுக்காக துபாய், விதவிதமான உணவுவகையில் சிறந்த துருக்கியின் செஸ்மே, இக்காலத்தவரும் வியக்கும் சீனாவின் பழமை நகரான ஹாங்சூ என ஒரு தேர்வு வரிசை நீள்கிறது.
இந்தியாவின் கலாசாரம், பண்பாட்டை உலக நாடுகள் பாராட்டவே செய்கிறது.
இந்திய அளவில் அவர்கள் மொத்தமாக பாராட்டினாலும் அந்த பாராட்டுக்குரிய விஷயங்களில் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் கடைப்பிடிக்கிற விஷயங்களே மிகுதியானதாக உள்ளன.

ஹிந்தி, சமஸ்கிருதம்தான் இந்தியாவின் கலாசார அடையாளங்களாக வெளிநாடுகளில் காட்டப்படுகிறது.
 எல்லா காலத்திற்கும் ஏற்புடைய சமதர்ம சமூக வாழ்வியல் சிந்தனை வெளிப்பாடான திருக்குறள் போல ஒரு நூல், இந்தியாவின் எந்த மொழியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் டைம்ஸ் இந்தியாவை ஆராய்ந்த தமிழகத்தை  தேர்வு செய்ததற்காக நன்றி சொல்வோம்


நியுயார் டைம்ஸ் தகவல் முழுமையாக படிக்க... இங்கே

நியுயார் டைம்ஸ் தகவல்

Tamil Nadu
India 
New gateways to India’s cultural core.
North India, with its famous Moghul era palaces and forts, might be the country’s most popular tourist destination, but Tamil Nadu in the south has an equally rich and undiscovered history. The state is where India’s major temple cultural complexes are, and some are so large that they’re considered minicities. There’s Meenakshi Temple in Madurai, a sprawling complex dedicated to a powerful female deity, Brihadeeswarar Temple in Thanjavur, built by the ancient Cholas, one of India’s greatest dynasties, and several hundred other temples dotting the countryside and brimming with art carvings dating back as far as the 9th century. But temples aren’t the only cultural hit: the region of Chettinad has more than 50 villages filled with 18th century mansions of carved Burma teak. It also boasts cuisine that is among the spiciest and most aromatic in the country and often served on banana leaves. Limited infrastructure in Tamil Nadu made accessibility a challenge for travelers, but the recent burst of boutique hotels is changing that. Over a dozen properties recently opened or on their way to debuting includeChidambara Vilas and the Bangala in Chettinad, Heritage Madurai in Madurai and Ideal River Vira Resort in Thanjavur.






உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்




Comments

Yarlpavanan said…
2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
மிக்க நன்றி நண்பரே
Thalapolvaruma said…
அருமை தமிழ் என் தாய்மொழி என்பதில் கர்வமாக உணர்கிறேன்