பசங்க -2 - வீட்ல பசங்க இருந்த கண்டிப்பா பாருங்க...

வழக்கமான படங்களிலிருந்தது புதுமாதரியான கதை. குழந்தைகளை எப்படி புரிந்து கொள்வது என்பதை புரிய வைக்கும் படம். குழந்தை பிறக்கும் முன்பே குழந்தைகளை பற்றி பெரிய கனவுகளோடு வாழும் இன்றைய பொற்றோர்களுக்கான படம்.
                         இந்த படத்தில் சூர்யா  படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது ,படத்தின் முக்கியதுவத்தை உணர்த்துகிறது. இடைவேளைக்கு பிறகு  டாக்டராக வரும் சூர்யாவிடம் ஓரு தம்பதி ரெம்ப சேட்ட பண்றான் சார்.கெட்டவார்த்த பேசுறான் என தன் மகனைபற்றி சொல்ல ...

                  டாக்டர் சூர்யா குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசமாட்டார்கள்.கேட்டு பேசுபவர்கள் தான் குழந்தைகள்... என பேசுகிற வசனம் உண்மை. குழந்தைகள் நம்மை பார்த்தே கற்றுக்கொள்கின்றன.நாம் அவர்களுக்கு உதரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதையும் உணர்த்தும் படம்.குழந்தை வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல எல்லோருமான படம் என்றே சொல்லலாம்.

சுருக்கமாக கதை...

  முனீஸ் காந்த்-வித்யா பிரதீப் தம்பதியர் தங்களது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். அதேபோல்,   கார்த்திக்குமார்-பிந்துமாதவி தம்பதிக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.
 இந்த இரண்டு குடும்பங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால், முனீஸ்காந்த், கார்த்திக் குமாரின் குழந்தைகள் இருவரும் வழக்கமான குழந்தைகளை விட ரொம்பவும் சுட்டித்தனம் செய்பவர்கள். ஒரு நிமிடம் கூட இவர்களை பிடித்து நிற்க வைக்கமுடியாது. அந்த அளவுக்கு சுட்டித்தனம் செய்பவர்கள். இதனால், இவர்கள் குடியிருக்கும் இடம் மட்டுமின்றி, படிக்கும் இடத்திலும் பிரச்சினை வருகிறது. இதனால், வேறு வழியின்றி குடும்பத்துடன் பல இடங்களுக்கு மாற்றலாகி செல்வது இவர்களது குடும்பத்தின் வழக்கமாகிவிடுகிறது.
இந்நிலையில், தாம்பரம் அருகில் இருக்கும் பள்ளியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் அங்கு குடிபெயர்கிறார் முனீஸ்காந்த். அந்த குடியிருப்புக்கே கார்த்திக் குமாரும் தனது குடும்பத்துடன் வருகிறார். இவர்கள் குடிவரும் அதே அபார்ட்மெண்டில் குழந்தைகளுக்கான மனநல மருத்துவராக இருக்கும் சூர்யா, தனது மனைவி அமலாபால் மற்றும் குழந்தைகள் இருவருடனும் வசித்து வருகிறார்.
வெவ்வேறு இடங்களில் சுட்டித்தனம் செய்துகொண்டிருந்த குழந்தைகள் ஒரே அபார்ட்மெண்டுக்கு வந்ததும் நண்பர்களாகிறார்கள். இங்கு இவர்களது சுட்டித்தனம் இன்னும் அதிகமாகிறது. இதனால், அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் அனைவரும் அவர்களை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால், முனீஸ்காந்தும், கார்த்திக் குமாரும் தங்களது குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடுவதாக கூறி அவர்களை சமாதானப்படுத்துகிறார்கள்.
இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிந்ததும், டாக்டரான தான் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டறிந்து கூறுகிறேன் என்று முனீஸ்காந்த்-கார்த்திக் குமார் இருவரிடமும் கூறுகிறார். ஆனால், சூர்யாவின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காமல், குழந்தைகளை ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். ஹாஸ்டலிலும் தங்களது சுட்டித்தனத்தால் அங்கிருந்து தப்பித்து, தங்களது வீடுகளுக்கே வருகிறார்கள் குழந்தைகள்.
பின்னர் சூர்யாவுடன் அந்த குழந்தைகள் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். கடைசியில், அந்த குழந்தைகளுக்குள் இருக்கும் பிரச்சினையை சூர்யா கண்டறிந்து, அவர்களது திறமைகளை எப்படி வெளிக்கொண்டுவந்தார்? குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் இடைவெளி எப்படி சரியானது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
        அதிகமாக சேட்டை செய்யும் குழந்தைகள் நோயாளிகள் அல்ல... அவர்களுக்குள்ளும் நிறைய திறமைகள் இருக்கின்றன. அவற்றை பெற்றோர்கள் சரியான முறையில் கண்டறிந்து, அவர்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். மாறாக, அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாண்டியராஜ் .
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments